கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் ரூபாய் இரண்டரை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி அருகே இருக்கும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆடுகள் கொண்டுவரப்பட்டது. நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பண்டிகையை முன்னிட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டவரப்பட்டு அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. இங்கு ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் […]
Tag: வாரச்சந்தை
பாளையங்கோட்டை மாட்டுத்தாவணியில் நடைபெற்ற வாரச்சந்தையில் 24 லட்சத்திற்கு காளைகள், பசுமாடுகள், கன்றுகள் விற்பனை ஆகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தகாடையூர் அருகே இருக்கும் பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தையானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்றும் நடைபெற்றது. இந்தச் சந்தையில் ஈரோடு, திருப்பூ,ர் கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து இச்சந்தையில் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்தையில் பல வகையான காளைகள் ரகம் […]
லாலாப்பேட்டை வாரச்சந்தையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அதை போன்று நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் சந்தையின் டெண்டர் காலம் முடிந்ததால் இந்த வருடத்திற்கு டெண்டர் எடுக்க யாருமே முன்வருவதில்லை. நேற்று சுங்க வரி வசூலிப்பதற்காக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பணம் வசூலிப்பதற்கு எந்த ரசீதும் கொண்டு […]
குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி இன்று தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடபட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று கிருஷ்ணகிரி அருகில் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகமாக வந்தனர். இதேபோன்று ஈரோடு, […]
வழக்கம்போல் நடைபெற்ற பெருந்துறை வாரச்சந்தையில் 21 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரம், திருப்பூர் மாவட்டம் முத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வெள்ளாடு ஒன்று 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் செம்மறி ஆடு ஒன்று 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் […]
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று முதல் வார சந்தைகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடைய வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சந்தைகள் திறக்கப்படுகிறது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் 50% பேர் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சாலையோரங்களில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவை அடுத்துள்ள ,ஆர்.கே. பேட்டையில் வாரச்சந்தை மூடப்பட்டுள்ளது. இந்த பொதட்டூர்பேட்டை வார சந்தையானது ,வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாகக் கூடும். ஆனால் இந்த சந்தைகளில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கலந்து கொண்டனர். இதனால் திருத்தணி ஆர்.டி.ஓ அதிகாரியின் உத்தரவின்பேரில் வார சந்தைகள், தெருமுனை மற்றும் காய்கறி சந்தைகள் போன்ற சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரான முனுசாமி வாரச் சந்தை மைதானத்தில் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம், கடைகள் அமைக்க கேட்டதால் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடைபெறும். இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென எந்த கடைகளும் போடாமல் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, கடை அமைக்க வார சந்தையில் ரூ. 70 மட்டும் கட்டணம் கட்டினோம். […]
தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை […]