Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தூய்மை பணியாளருக்கு நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

முன் விரோதத்தால் தற்காலிக தூய்மை பணியாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிபாளையம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சூசையாபுரம் பகுதியில் தங்கியிருந்து தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து விநாயகம் ஒடக்காடு லிங்க கவுண்டன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனைசெய்தனர். அந்த சோதனையில் லாரியில் சட்ட விரோதமாக  எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது காவதுரையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரி டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 வருட தேடுதல் பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வள்ளியூர் சமய்சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக கொண்டாநகரம் பகுதியில் வசிக்கும் ராமையா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முகநூலில் பதிவிட்ட புகைப்படம் …. பெண்ணின் பரபரப்பு புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆரைக்குளம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 – ஆம் தேதி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண்ணின் புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது அனுமதியின்றி முகநூலில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பெண்ணின் புகைப்படத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்….. வாலிபர் அளித்த புகார்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யோகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அதன்பிறகு கத்தியை காட்டி மிரட்டி அந்த மர்ம நபர் யோகேஷின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் யோகேஷ் புகார் அளித்த புகாரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சந்தேகப்பட்ட கடைக்காரர்….. பையில் இருந்த ரூபாய் நோட்டுகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரிபேட்டை பகுதியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாலிபர் பாக்யராஜிடம் இருந்து பழங்களை வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அது கள்ள நோட்டு என்பதை அறிந்த பாக்யராஜ் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பேச மறுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அன்புச்செல்வி அதே ஊரில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து அன்புச்செல்வி சண்முகவேலுடன் திடீரென பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் மது அருந்திவிட்டு அன்புச்செல்வி வீட்டிற்கு வந்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறுதியான தகவல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கருப்பசாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருப்பசாமி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில் கருப்பசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

போலி நகையை அடகு வைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கத்தில் அடகு கடை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடைக்கு சென்ற ஒரு வாலிபர் 6 பவுன் நகையை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அந்த நகையை வாங்கி பரிசோதனை செய்து பார்த்த போது அது போலியானது என்பது உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அடகு கடை உரிமையாளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

டிப்பர் லாரியில் சட்ட விரோதமாக சரள் மண் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையுத்து இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் குறிச்சிகுளம் பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக சரள் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை பொருட்கள் திருட முயற்சி… சிக்கிக் கொண்ட வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவிலில் பூஜை பொருட்களை திருட முயன்ற வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்செட்டியந்தல் கிராமப்பகுதியில் சடையப்பர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த பூஜைப் பொருட்களான தாம்பாளத் தட்டு மற்றும் பித்தளை குடம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து சிக்கிக்கொண்ட வாலிபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய ஆசிரியர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இளம் பெண்ணை ஏமாற்றி நகையை பறித்துக்கொண்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நத்தக்காடையூர் பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதே பகுதியில் அன்வர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அந்த இளம்பெண்ணிடம் அன்வர் உசேன் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. கூலித்தொழிலாளியின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரையும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமாக சிக்கிய வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மணல்மேடு அருகே  இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற போது கரையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் கரைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மணல்மேடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடிப்புடா சாமி…. வலைதள பேச்சு தப்பாபோச்சு…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

சிறுமியை 17 வயது சிறுவன் போல நடித்து பேசி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 23 வயதான இளைஞர் கிறிஸ்டியன் மைக்கேல் ஆவார். இவர் சமூக ஊடகம் ஒன்றில் 14 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் போல நடித்து பேசியுள்ளார். இதனையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி நட்பு பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதனால் மைக்கேலின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்….!!

சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அக்னியாறு குடிநீர்த்தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுவதால் முக்கிய நீராதாரமாக உள்ளது. இதனையடுத்து அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் அக்னியாற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலயே குழந்தையா….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுமிக்கும், பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமியுடன் பாரதிக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குழந்தையும் பிறந்திருச்சு…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது குறித்து அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணத்தை காணும்…. வீடு புகுந்து கைவரிசை காட்டிய திருடன்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் வைத்திருந்தார். ஆனால் திடீரென முருகன் பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த முருகன் காவல்நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வண்ணார்பேட்டை பகுதியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படியும் இருப்பாங்களா…? வாலிபரின் ஏமாற்று வேலை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி உள்ளார். அதன்பிறகு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல் …. பணம் பறித்த வாலிபரை …. கைது செய்த போலீசார் ….!!!

கத்தியை  காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளவேடு பஜார் பகுதியில் 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்தது… வாலிபர் செய்த காரியம்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலுள்ள கண்ணாடியை உடைத்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் சென்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும்  உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது குடிபோதையில் இருந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதில் சிலர் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கெட்ட எண்ணம் கொண்ட வாலிபரால்… சிறுமிக்கு நடந்த கொடூரம்… கைது செய்த காவல்துறையினர்…!!

4 வயது சிறுமியை கூலித்தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் இருக்கும் காலி இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி […]

Categories
உலக செய்திகள்

தனியாக நடந்து சென்ற பெண் …. அத்துமீறிய இளைஞர் …. கண்ணீருடன் போலீசில் புகார் …!!!

சாலை நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரை  போலீசார் கைது செய்தனர். அமெரிக்கா நாட்டில் ராக்கி மவுண்டைசேர்ந்த கைலக் மேப்ரி என்ற இளைஞர் அதிகாலையில் சாலையில் நடந்து  சென்றுகொண்டிருந்த பெண்ணை  தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் .இதுகுறித்து அந்தப் பெண் வேதனையுடன்  போலீசில் புகார் அளிக்கும் போது  ‘நான் அதிகாலை 5.30 மணியளவில் சாலை நடைபாதையில் நடந்து  சென்று கொண்டிருந்தேன். அப்போது  மேப்ரி என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கி பாலியல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாத்தி மாத்தி பேசிய வாலிபர் …. சந்தேகமடைந்த போலீசார் …. விசாரணையில் வெளிவந்த உண்மை ….!!!

ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி  பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள  மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர்  பணம் எடுத்து தருவதாக  கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் […]

Categories
உலக செய்திகள்

வேலைக்கு போகனுன்னு சொன்னதுக்காக…. வாலிபர் செய்த கொடூர செயல் …. பிரபல நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் …!!!

தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அயோவா பகுதியில் ஜேன் ஜாக்சன் என்பவர் தனது மனைவி மெலிசா ஜாக்சன் மகன் அலெக்சாண்டர் ஜாக்சன் மற்றும் மகள் சபரீனா ஜாக்சன் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மகன்  அலெக்சாண்டர் தங்கள் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும்  துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்று விட்டார் என்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாயமான மாணவி…. அத்துமீறிய வாலிபர் …. போக்சோவில் கைது செய்த காவல்துறை …!!!

 சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரதில் ஈடுபடுத்திய  வாலிபரை போஸ்கோ   சட்டத்தில் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள  பள்ளியில் ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் இவரது பெற்றோர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் திருநின்றவூர் போலீசில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதற்கு காரணம்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான  ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் சிறுமியை தைலமரம் காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த தகவலை சிறுமி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்லை… வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் ஆட்டோ டிரைவர் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரதி மங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அய்யப்பனை கத்தியால் குத்தியதோடு அவரிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் விலை மதிப்பில்லா செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம்….செல்போன் பறித்த வாலிபரை ….கைது செய்த போலீசார் …!!!

நசரத்பேட்டையில் செல்போன் பறித்த  வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 36 வயதான ஜனார்த்தனன் என்பவர், தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நசரத்பேட்டை அருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்து வந்த நபர் அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டில்களை  பதுக்கி வைத்து ….விற்பனை செய்த வாலிபர் கைது …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை  பதுக்கி வைத்து, விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி பல இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில், உள்ள வயல்வெளி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது பாட்டில்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

48 மது பாக்கெட்டுகள் பறிமுதல்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மது பாக்கெட்டை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் களத்தூர் பகுதியில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முட்புதருக்குள் வைத்து வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 48 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபர்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான அருண் ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெற்கு மெயின் சாலையில் வாலிபர் சந்தேகத்திற்கிடமாக பையுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதற்குள் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் ஊற்றடியில் வசித்துவந்த முருகன் என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே சறுக்கு பாலம் அருகே சரக்கு வாகனம் ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தியுள்ளனர். அப்போது திடீரென பின்பக்க சக்கரம் வேனிலிருந்து கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதனை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்ற கொத்தனார்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மாணவியை கடத்தி சென்ற கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவியினுடைய தந்தை புதிதாக வீட்டை கட்டுகிறார். அந்த வீட்டிற்கு புஷ்பராஜ் என்ற வாலிபர் கொத்தனார் வேலை செய்வதற்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியினுடைய தாய் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கொத்தனார் பணிபுரிய வந்த புஷ்பராஜ் தன்னுடைய மகளை ஆசை வார்த்தைகளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தருவையில் டிரைவரான முரளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றுள்ளார். அதன்பின் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளியை போக்சோ சட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதியை மீறிய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி பைக்கில் சுற்றி திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே ஊரடங்கு விதியை மீறி அத்தியாவசிய தேவையின்றி பைக்கில் சுற்றித் திரிந்த ஆதி நாராயணன் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராஜபுரத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தல், வழிப்பறி, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அருண் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு மட்டுமல்லாமல் கடலூரிலிருக்கும் மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் அருண்குமாரை குண்டாசில் கைது செய்ய மாவட்டத்தினுடைய கலெக்டரான விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர் அவரை குண்டாஸில் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்… மணல் கடத்தி வந்த இளைஞர் கைது… டிராக்டரர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல்லாலங்குடி திருப்பதி நகரில் சாலையோரம் பெட்டி கடைகளில் சோதனை செய்துள்ளனர். அந்த பெட்டி கடையில் திருப்பதி நகரை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல் துறையினர் அவரை கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் எரிசாராயம்… தீவிர ரோந்து பணி… வாலிபர் கைது…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தண்ணீர் பாட்டிலில் ஏரிசாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரிசாராயம் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காத்தாயி அம்மன் கோவில் தெருவில் 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த அஜித் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூதாடிய வாலிபர்கள்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் சூதாடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலிருக்கும் கோவில் மண்டபத்தில் வைத்து 4 நபர்கள் சூதாடியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை தெரிந்து கொண்ட 2 நபர்கள் தப்பியுள்ளனர். மேலும் 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் காவல்துறையினரால் பிடிபட்ட 2 பேர் அதே பகுதியில் வசித்து வந்த பரமசிவம் மற்றும் சீனி பாண்டி என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி செய்யலாம்… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடைவீதியில் ஒருவர் உணவகத்தை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல் துறையினர் கடைக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு… பெற்றோர் பரபரப்பு புகார்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுநாயக்கன்பட்டியில் மணிகண்டன் ( 24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் 986 மதுபாட்டில்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் மது பாட்டில்களை தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட சோகம்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்… போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கு சென்ற மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் வசிக்கும் மாணவி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பெற்றோரிடம் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமியை கடத்திய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் கொத்தனார் வேலையை செய்து வரும் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 14 வயதாகின்ற சிறுமியை சில தினங்களுக்கு முன்பாக கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியினுடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஜான்சனும் சிறுமியும் காதலித்து வந்ததால் சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் ஜான்சனினுடைய இல்லத்திலிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பு… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காரை திருடி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் முத்துகுமாரராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குசாவடியிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று கார் டயரை மாற்றிய பின்பு கடையின் முன்பு  காரை நிறுத்தி விட்டு அதற்கான பணத்தை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மெஷினை உடைத்து ….கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்….! கைது செய்த போலீஸ் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு பகுதி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில், ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடி மெயின் ரோட்டில் , ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு ,நேற்று அதிகாலையில் ஒரு நபர் பணம் எடுக்கச் சென்ற போது ,அங்கு ஒரு வாலிபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார் . இது பற்றி  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் போக கூடாது… கண்ணாடியை உடைத்த வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை பகுதியில் தனியார் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள முல்லைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கர் பணி முடிந்ததும் ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு கோமாபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடு ரோட்டில் சரத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் […]

Categories

Tech |