Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. பாம்புக்கு லிட் டு லிப் கிஸ் கொடுத்த வாலிபர்….. உதட்டில் ஒரே போடு….. கடைசியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில்  நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது. இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டூவீலரில் சென்ற நண்பர்கள்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோக சம்பவம்…..!!!!

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவரும், இவருடைய நண்பர் முகமது ரியாஸ் என்பவரும் சேர்ந்து நேற்றிரவு பழையபேட்டை இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த முகமது ரியாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு சந்தேகமா இருக்கு” வாலிபரின் உடலை சாலையில் வைத்து போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தாமங்களம் வடக்கு தெருவில் சாயிராம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உப்புகாரன் ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை சாயிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாய்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் ஜெயராமன் என்பவர்களுக்கு வருகிறார். இவருக்கு ஜெய்சங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் தனது நண்பரான ஞானபிரகாஷ்(30), சிவஞானம்(25) ஆகியோருடன் காரில் மின் மோட்டார் வாங்குவதற்காக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மின் மோட்டாரை வாங்கி கொண்டு அதே காரில் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் விருதாச்சலம்- […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபர் பரிதாப பலி….. பெரும் சோகம்…..!!!!

சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் தன் தோழியை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின் வாரியம் எதிரே போகும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விநாயகர் சிலைக்கு காவலாக இருந்த வாலிபர்…. மர்ம கும்பலின் வெறிச்செயல்….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!!!

வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாப பலி…. நடந்தது என்ன?…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சிமன்ற செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21) ஆகிய இருவரும் எழுமூர் சாலையில் அசூர், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையேயுள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதையடுத்து அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன்பிடித்தனர். இந்நிலையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராத வகையில் ஏரியில் நின்ற 2 பேர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் மஞ்சமேடு பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்நிலையில்  தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த அறிவழகன்(26) என்பவர் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணை அருகே நடந்து சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலபிள்ளையார் குளத்தில் காளிமுத்து(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிற்றாறு தடுப்பணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காளிமுத்து தண்ணீரில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காளிமுத்துவின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு…. மாட்டு முட்டி வாலிபர் பலி…. 20 பேர் மீது வழக்குபதிவு…!!

மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உச்சரிச்சான்பட்டியல் மந்தை கருப்பு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கு மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் மாடுகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் என்பவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் […]

Categories
உலக செய்திகள்

150 ரூபாய் இல்லாமல்…. பரிதாபமாக போன வாலிபர் உயிர்…. இலங்கையில் பெரும் சோகம்….!!!

ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இங்கு 150 ரூபாய் பணம் இல்லாமல் ஒரு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வாலிபரின் பெயர் சந்தருவன் (23) ஆகும். இந்த வாலிபரின் தந்தைக்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்ப பாரம் மொத்தத்தையும் சந்தருவன் தாங்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணங்கள் அனைத்தும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மாள் சாலையில் குணசீலன்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கரையாளனூர் கிராமம் அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பயந்தது. இதனால் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது நடந்த விபரீதம்…..சோக சம்பவம் …!!!

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது, சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் நவீன்குமார்(23). இவர் தன்னுடைய நண்பரான கார்த்திக் பிறந்தநாளுக்காக ஆங்காங்கே பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில் பேனரை ஏற்றிக்கொண்டு அதில் தொங்கிய படி சென்று கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் செல்லும் போது தவறிக் கீழே விழுந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபச்சக்குடி கிராமத்தில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்ஜுன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி விராலிமலை பட்டமரத்தான் கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் காளையை அடக்க முயன்ற போது நாகர்ஜுன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் தனது நண்பரான மகாபிரபு(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளை திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு கட்டை மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் வினோத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூரில் இருக்கும் அழகு நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர இருந்த தடுப்பு கட்டைகள் மீது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் மோனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆவட்டி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோனேஷை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மேலும் ஒரு வாலிபர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தினேஷ்குமார், ருத்திரன் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தோவாளை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஷல்(24) என்பவர் தனது நண்பரான சபிபுல்லா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் கேரளா கூடலூர் மலைப்பாதையில் கீழ் நடுவானில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர்கள் மீது லாரியின் சக்கரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

செல்பி எடுக்க முயன்ற வாலிபர்…. ரயிலில் அடிபட்டு பலியான சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

செல்பி எடுக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி செல்போனில் வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பரப்பி வந்துள்ளார். இந்நிலையில் மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகே வசந்தகுமார் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் பாடல் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷூக்கு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் வேலை முடிந்து உலகபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரும்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிராமத்தில் கென்னடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி ஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் மயிலாடி புதூர் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஆண்டனி ஜோவின் மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ருத்திரன், தினேஷ் குமார் ஆகியோருடன் காவல்கிணறு பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் இரவு நேரத்தில் கோவிலில் தங்கி விட்டு நேற்று பகல் 12 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் விசுவாசபுரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

செல்போன் பேசியதால் வந்த விபரீதம்…. ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி…. ஓசூரில் பரபரப்பு….!!

செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த இரும்பு கூண்டு…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் நடந்த சோகம்….!!

லாரியில் இருந்த இரும்பு கூண்டு தலையில் விழுந்ததால் வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் தனியார் அக்ரோ உற்பத்தி நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பனியில் சத்தீஸ்கார் மாநிலம், பாஜங்கள் ஜோகியன் பகுதியை சேர்ந்த ராகுல்குமார்(18) என்ற வாலிபர் கடந்த 1 மாதமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருச்செங்கோடு பட்டறைமேட்டில் இருந்து இரும்பு கூண்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ராகுல்குமார் மற்றும் சக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அருவில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்டல்பட்டியில் பிரபு(26) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உப்புத்துறையில் உள்ள யானைக்கஜம் அருவில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அருவிக்கு கீழே தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளித்துகொண்டிருந்த வாலிபர்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

கிணற்றில் குளித்துகொண்டிருந்த வாலிபர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மங்கன் பிரவீன்குமார்(19) கூளித்தொளிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரவீன்குமார் காரைக்குரிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிணற்றில் இறங்கி குளித்துகொண்டிருந்த பிரவீன்குமார் திடீரென தண்ணீரில் முழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பைக்கில் திடீர் தீ…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் நடுத்தொரடிப்பட்டு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளிமலை பகுதிக்கு பெட்ரோல் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பி வரும் வழியில் ஊத்தக்கோடு அருகே திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ சக்திவேலின் உடல் முழுவதும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த வாலிபர்… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ்(25) படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் பிரகாஷின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்கள்”… மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் 24 வயதுடைய வேல்முருகன். இவரும் இவரது உறவினர் ஹேமநாதனும் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நாடு செலுத்துதல் விழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆனது ஹேமநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் வேல்முருகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான கணேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வளையல்காரன்புதூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளின் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் அவருடைய நண்பர் ரூபன் ஆகியோர் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் பைக்காரா பகுதி அருகே சென்ற போது அவ்வழியே வந்த ஜீப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு தூங்கிய வாலிபர்…. மர்மமான முறையில் பலி…. நண்பர்கள் அளித்த பரபரப்பு புகார்….!!

சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகரில் பெட் என்ற கவுதம்(28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு வீதியில் தூங்கியுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் கவுதம் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உடனடியாக கவுதமை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கவுதம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. வாலிபரின் விபரீத முடிவு…. நாமக்கலில் அரங்கேறிய சோகம்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள வலையபட்டி ரோஜா நகரில் வசித்து வந்த மணிகண்டன்(27) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு ஷாலினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி இறந்ததால் மணிகண்டன் மனமுடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.  இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தடுமாறிய வாகனம்…. துடிதுடித்து பலியான வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கரவாகனம் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில் கல்யாணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது கேணிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்தகாயமடைண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த கல்யாணகுமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு ராமநாதபுரம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சரக்கு வாகனம்-மொபட் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வாகனம் மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம்படி கோவில் தெருவில் அண்டோராஜ் பெர்ணான்டோ (31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் கப்பல் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்டோராஜ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். சம்பவத்தன்று அண்டோராஜ் மொபட்டில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்…. தற்கொலை செய்தாரா?… போலீசார் விசாரணை…!!

நாகையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் காடுவெட்டி கொங்கம்பட்டியில் வசித்து வந்த வீரமலை(25) என்பவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமலை தனக்கு பெண் பார்க்க செல்வதற்காக அவரது நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு என். புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது குறிஞ்சி நகர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தன்னுடன் வேலை பார்க்கும்  கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில்  மரக்காணத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் தாளங்காட்டுக்கு அருகில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம்  நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அம்மன் கோவில் ஊர்வலம்…. இடிந்து விழுந்த தூண்…. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…!!

அம்மன் கோவில்  ஊர்வலத்தின் போது வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தணிக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு திருவிழா நடந்து வருவதால் வீதிளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கீழ்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் இடிபாடடைந்த சுற்று சுவர் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு தூண் திடீரென இடிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் ப[ஆகுதியில் கோகுல்ராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடனத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனையால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோகுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தடைந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் கார்த்திக்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ் மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போரடிய வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரி மீது கார் மோதி சாலையில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி பகுதியில் சூரியா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமாரபாளையம் வட்டமலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை சூர்யா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் வசித்து வந்த ஸ்ரீதர்(21) சேலம் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீதர் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று ஸ்ரீதரின் சித்தப்பா சிவக்குமார் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சிவக்குமார் ஜன்னல் வழியாக வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே கல்லடிக்குறிச்சி பகுதியில் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய ஸ்ரீஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜி ஒரு வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஸ்ரீஜியின்  மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“காதணி விழாவிற்கு சென்ற வாலிபர்கள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில்  வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்பவரும் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இவர்கள் காதணி விழாவில் கலந்துகொண்டு  மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது கெடார் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories

Tech |