பூதப்பாண்டி அருகில் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து வாழை மரம் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாடகை மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதி இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய தோட்டத்தில் வாழைமரம், இஞ்சி, புடலங்காய் போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாடகை மலை பகுதியில் இருந்து மூன்று யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் யானைகள் […]
Tag: வாழை மரம்
சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்திலுள்ள பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சக்கரை செட்டிப்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சக்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் மத்தியில் தற்போது கோடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆண்டிக்கோன் பட்டியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைத்தார்கள் முழுவதும் அடியோடு சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் 12 மாதத்திற்கு மேலாக உரமீட்டு, நீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் […]
தர்மபுரி மாவட்டத்தில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட 100 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன. தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளான எரியூர், மலையனூர், புது நாகமரை, நெல்லூர் ஆகிய பகுதிகளில்வாழை மரங்கள் பயிரிடபட்டுள்ளன. நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. […]