Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… உலகத் தலைவர்கள் வாழ்த்து…!!!!!!

வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “தூதர்கள்,ராணுவ அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் ரிஷி சுனக் நன்றி”…!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அப்போது அவர் கூறியதாவது, “இந்த அசாதாரண ஆண்டில் உங்களின்  தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு தனிப்பட்ட முறையில் நன்றி என கூறி  அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்”. இதனையடுத்து அவர்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றிய திட்டங்களையும் கேட்டு கலகலப்பாக உரையாடியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை…”ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள்”.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!!!

முதல்வர் ஸ்டாலின் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அன்பை பரிமாறி ஏழை, எளியவர்களுக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மண்ணிக்க கூடிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர். “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும் அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள் எக்காலத்திற்கும் எந்நிலத்திற்கும் பொருந்தும்”. […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… அன்பு மட்டுமே போதும்… இப்படி ஒரு காதலா…? வியப்பில் இணையதளவாசிகள்…!!!!!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர்  ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே  காதல் வந்துவிட்டது.  ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது  மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து  பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி… அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபர்…!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர் உதயநிதியை வாழ்த்திய சேலம் திமுக”…. செம சர்ப்ரைஸ் கொடுத்த டி.எம் செல்வகணபதி….!!!!!

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கொங்கு மண்டலம், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பப்படவில்லை எனவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அங்கு கொண்டாடவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இது பற்றி விசாரிக்க போனால் சேலத்திற்கு அமைச்சர் இல்லாதது அம் மாவட்டத்தில் பெரிய குறைவாக பார்க்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாததால் அரசின் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“கலைஞர் கருணாநிதியை போல் உதயநிதி”…. வாரிசு என்பதற்காக ஒதுக்க கூடாது…. நடிகர் பார்த்திபன் ஒரே போடு….!!!!!

சென்னையில் இன்று 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான சிறப்பு படங்கள் திரையிடப்படும். அதன்படி 51 நாடுகளில் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாரிசு என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களையெல்லாம் பாத்தா வேடிக்கையா இருக்கு…. நடிகை கஸ்தூரி டுவிட்….!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பலரும் விமர்சித்து வரும் நிலையில் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“3 தலைமுறை அனுபவம்”….. அமைச்சராக பொறுப்பேற்ற அன்பு தம்பி”… உதயநிதியை வாழ்த்திய ரஜினி, கமல்…..!!!!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அன்பு தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”…. அமைச்சரான உதயநிதிக்கு நடிகர் ரஜினி வாழ்த்து……!!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin — Rajinikanth (@rajinikanth) December 14, 2022

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள்”…. அமைச்சரான உதயநிதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து…..!!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பன் உதயநிதி அமைச்சர்…. என்னகு மிகவும் பெருமையா இருக்கு…. நெகிழ்ந்து போன நடிகர் விஷால்…!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான விஷால், என்னுடைய நண்பன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பெற்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக பார்ப்பது. அவருக்கு கொடுக்கக்கூடிய பதவியை தகுதியாக பார்க்கிறாரா என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்!…. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாள் கொண்டாடும் பா.ரஞ்சித்… வாழ்த்து தெரிவித்த திருமா..!!!

பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். இந்த படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் 40 ஆவது பிறந்த நாளை ஒட்டி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியின் இமாலய வெற்றிக்கு வாழ்த்துக்கள்”…. வாரிசு ரிலீசுக்கு விஜய்க்கு வாழ்த்து சொன்ன பார்த்திபன்…. வைரல் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு… வாழ்த்துக்கூறி மாமன்னன் கிளிம்ஸ் வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்..!!!!

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

Categories
இந்திய சினிமா சினிமா

கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கு பிரபல வாரிசு நடிகையுடன் டும் டும் டும்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா. இவர் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். நடிகை அதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இருவரின் காதலுக்கும் இரு வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல் ராகுல் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சிவப்பு நிற உடையில் வருங்கால கணவருடன் ஜொலிக்கும் ஹன்ஷிகா…. இப்பவே கல்யாண கலை வந்துட்டு போலயே…..!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மகா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்ய‌ இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி பண்டிகையும் ஜெய்ப்பூர் அரண்மனையில் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்” …. முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16ம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் தமிழக முதல்வரான ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவில், அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்கு சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சச்சின் பட நடிகைக்கு அழகிய குழந்தை…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தம்பதி…. குவியும் வாழ்த்து…..!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாசா பாசு. இவர் தெலுங்கு சினிமாவிலும் பட படங்களில் நடித்ததோடு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அலோன் என்ற திரைப்படத்தின் நடிக்கும் போது நடிகர் கரண் சிங் குரோவேர் என்பவரை காதலிக்க தொடங்கினார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிபாசா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை […]

Categories
மாநில செய்திகள்

அரசை புகழ்ந்த மக்கள்… இதற்கு நீங்கள் தான் காரணம்…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மகனின் 5 ஆவது ஆசை….! 56 வயதில் “பேத்தி”யை பெற்றெடுத்த “தாய்”… நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

அமெரிக்கா நாட்டின் உத்தா பகுதியில் வசிப்பவர் நான்சி ஹாக்கி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளோடு வசித்து வருகிறார். தனது மகனிற்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருமகளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த தாய் கர்ப்பமடைந்துள்ளார். அதாவது மகனின் குழந்தைக்கு தாயே வாடகை தாயாக மாறியுள்ளார். 56 வயதான நான்சி மகன் மற்றும் மருமகளுக்காக கருவை சுமந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஈபில் டவர் முன் ப்ரோபோசல்” …. வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய நடிகை ஹன்சிகா….. குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு எங்கேயும் காதல், சிங்கம், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சோகேல் என்பவருடன் இணைந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தார். அதன்பின் சோகேல் மற்றும் ஹன்சிகாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் மூன்றாவது முறையாக லூலா டி சில்வா அதிபர்… உலகத் தலைவர்கள் வாழ்த்து…!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ விரைவில் குணமடைந்து திரும்புவாய்”….‌ கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன நடிகை கீர்த்தி…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா தான் கொடிய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கஷ்டப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு என் அன்பும், வலிமையும்”…. சமந்தா குணமடைய வாழ்த்து சொன்ன “நாக சைதன்யா” தம்பி… வைரலாகும் பதிவு…..!!!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, இவர் நேற்று தனது சமூக வலைதளபக்கத்தில் தனக்கு ‘தசை அலர்ஜி’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“ஒருமுறை எங்களைப் புகழ்ந்தால், 100 முறை உங்களை புகழ்வோம்”…. ரஜினியிடம் வாழ்த்து பெற்ற காந்தாரா இயக்குனர்….!!!!!!

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் காந்தாரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரியல் ஹீரோவுக்கு ஹேப்பி பர்த்டே”…. தலைவரிடம் ஆசி வாங்கிய நடிகர் ராகவா….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என பன்முகத் திறமை கொண்டவர். அதோடு ஆதரவற்றவர்களுக்காக தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90’s கிட்ஸ்களின் ஃபேவரட்…. “தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவர்ந்த WWE”….!!!!!

டபிள்யூ டபிள்யூ இ தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி கவர்ந்துள்ளது. நேற்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு டபிள்யூ டபிள்யூ இ தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்துள்ளது. 90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா உள்ளிட்ட வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இந்நிகழ்ச்சியை WWE சேனல் ஒளிபரப்பியது. நேற்று தீபாவளி பண்டிகையொட்டி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்களின் இணைய பக்கத்தில் அனைவருக்கும் இனிய […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை… “எல்லையில் அண்டை நாட்டில் வீர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்”…!!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் எல்லையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழுந்துள்ளார். மேலும் அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் புல்பாரியில் எல்லையில் வங்கதேச […]

Categories
உலக செய்திகள்

3 வந்து முறை தேர்வான சீன அதிபர்… “பாகிஸ்தானின் உண்மையான நண்பர்”அதிபர் வாழ்த்து…!!!!!

சீன கம்யூனர்ஸ் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜின்பிங்கிற்கு  பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப் வாழ்த்து கூறியுள்ளார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசத்தின் சார்பாக அதிபர் ஜி ஜென்பிற்கு எனது வாழ்த்துக்களை கூறிக் […]

Categories
தேசிய செய்திகள்

“மங்களகரமான நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும்” நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர்..‌‌…!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகைரானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் தீபாவளி நல்வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். ‌ அதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் என்பது பிரகாசத்துடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாங்கள் பெருமைப்படுகிறோம்.! இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!!

பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா  18 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு பிறந்த குழந்தைகள்”…. பிரபலத்திடம் இருந்து பறந்து வந்த கடிதம்….!!!!!!

ஆண் குழந்தைகள் பிறந்த நயன்&விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு சென்ற ஒன்பதாம் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றது. மேலும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நடிகர் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க கூட என்னை ஒப்பிட முடியாது” கருணைக்கு ரொம்ப நன்றி….. ரஜினியால் நெகிழ்ந்து போன அமிதாப்பச்சன்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அமிதாப்பச்சனுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், தி லெஜன்ட் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். இந்திய திரை உலகின் சூப்பர் ஹீரோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழும் வரலாறு” இந்திய திரையுலகின் அடையாளச் சின்னம்….. நடிகர் அமிதாப்பச்சனுக்கு முதல்வர் வாழ்த்து….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக  பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஹீரோ” அமிதாப்பச்சனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இன்று அமிதாப்பச்சன் தன்னுடைய  80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், லெஜன்ட் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஒரு நபர். […]

Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் பட டிரைலர் இன்று வெளியீடு… பிரதமர் மோடி வாழ்த்து…!!!!!

கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் தனது 46 வது வயதில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவான கந்தாட குடி திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறர் உழைப்பை அங்கீகரித்து மனதார பாராட்டும் அன்பு உள்ளம்”….. நெகிழ்ச்சியாக ட்விட் செய்த கார்த்தி….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி மற்றும் கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமம்… குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் லூசிபர். இந்த படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக்ஸ் செய்திருக்கின்றனர். தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியன், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா  தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி […]

Categories
விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அப்பா ஆனார்…. என்ன குழந்தை தெரியுமா…..???

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், இன்று காலை நானும் எனது மனைவி ராதிகாவும் ஆண் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். தாய் மகன் இருவரும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி”என தெரிவித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆர்யா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு ரொம்ப நன்றி தலைவா” ரஜினியை கவர்ந்த அருண்மொழிவர்மன்…. ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை வாழ்த்து…. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஆதரவு….!!!!

தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப்  வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி…. சோகத்தில் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் நந்திதா…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்திதா தற்போது பெங்களூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது.   இந்த விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நந்திதா தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்…? குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமாகிவிடலாம் அதனாலேயே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காண்பித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்தவர் தான் மேடை நாடக கலைஞர் தாமரைச்செல்வி. மிகவும் வெளந்தியான இவர் ஆரம்பத்தில் பிக் பாஸில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிகில் புது அவதாரத்தின் மூலம் வெற்றியை காணுவார்”… இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி மக்கள் தொடர்பாக வளம் வரும் நிகில் முருகன் பவுடர் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மோகன், குஷ்பூ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீஜி இயக்க ஜி மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து த்ரில்லாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல […]

Categories
உலக செய்திகள்

இளவரசி கேட்டிடம் பெண் கூறிய வாழ்த்து… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?…

இளவரசி கேட்டிடம், ஒரு பெண் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் வேல்ஸினுடைய சிறந்த இளவரசியாக வெற்றியடைவீர்கள் என்று கூறியதற்கு அவர் அழகான பதிலை கூறியிருக்கிறார். பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் மகன் சார்லஸ் மன்னராகவும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் இளவரச தம்பதிகளாகவும் புதிய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். எனினும் இந்த பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நடந்த குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் […]

Categories

Tech |