சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]
Tag: விசா
டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின் இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற இனி காவல்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வசித்து வருவது மட்டுமல்லாமல் நாட்டின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகின்றார்கள். இந்நிலையில் இருநாட்டில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் காவல்துறையின் அனுமதி […]
சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தற்போது சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது. சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என கருதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் நிதி மந்திரியாக இருந்த பசு ராஜபக்சேவும் பதவி விலகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துள்ளனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் ஜூலை 13ஆம் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சுற்றுலா பயணிகளின் அனுமதிக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டை செய்த சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதற்கு வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டின் சேன்ஸலராக இருக்கும் ஓலாஃப் ஷோல்ஸ், தன் ஆதரவை தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இது ரஷ்ய நாட்டு மக்களுடன் நடக்கும் போர் […]
கொரோனா பரவல் குறைந்திருப்பதால் சீன அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியது. எனவே, அந்நாட்டு அரசு பூஜ்ஜிய கொரோனா கொள்கை என்னும் அடிப்படையில் கொரோனாவை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், சர்வதேச பயணங்களுக்கு தடை, வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றியது. சர்வதேச பயண தடை காரணமாக அங்கு […]
சீன அரசு, தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23,000 மாணவர்கள் சீனாவில் தங்கி மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த நிலையில், கொரோனாவின் முதல் அலையின் போது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவர்கள் கல்வியை தொடர மீண்டும் சீன நாட்டிற்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, சீன […]
கோவையில் புதிதாக விசா அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு நாட்டை சேர்ந்தவர் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா நடைமுறைகள் உள்ளது. வெகு சில நாட்கள் மட்டுமே விசா நடைமுறைகளில் இருந்து விலக்கு அளித்திருக்கின்றது. விசாவை பொருத்தவரை அதற்கு என குடியேற்ற அதிகாரிகள் இருக்கின்றனர் அவர்கள் மூலமாக மட்டுமே விசா பெற முடியும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேக குடியேற்ற அலுவலகங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டு விசா பெற்றால் மட்டுமே அந்த […]
உலக நாடுகளிலுள்ள மக்கள் சுற்றுலா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. இதனுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்வதற்கு விசாவும் தேவை. இந்நிலையில் ஒரு நாட்டிலிருந்து விசா இல்லாமல் ஒரு சுற்றுலா பயணியால் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கணக்கில் கொண்டு உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பாஸ்போர்ட் தரவரிசை […]
தலீபான்கள், தங்கள் நாட்டு மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு இந்திய அரசு விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தளிப்பான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தலீபான்கள் அரசாங்கம், இந்திய அரசிடம் தங்கள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன் சுமார் 13,000 மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்று வந்ததாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் விசா குறித்து தலைநகர் காபூலில் இருக்கும் […]
பாகிஸ்தான் அரசு சீக்கிய மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு 163 விசாக்கள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 8ஆம் தேதி இருந்து 17ஆம் தேதி வரை குரு அர்ஜன் தேவ் தியாக தினம் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த பண்டிகைக்கு செல்ல சீக்கிய மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் 163 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குரு அர்ஜன் தேவ் தியாக தினத்திற்காக தங்கள் நாட்டின் உயர் கமிஷன் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா அளிக்கக்கூடிய பணியில் […]
ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் போராட்டத்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழர்களான நடேஷ் முருகப்பர், பிரியா நடராஜா ஆகிய இருவரும் கடந்த 2012ம் வருடத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, குடியேற்ற உரிமைக்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தற்காலிக பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இவர்களது குடியேற்ற விண்ணப்பங்கள் பல வருடங்களாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில் […]
இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று இந்திய தூதரகம் விளக்கமளித்திருக்கிறது. இலங்கை அரசு, தவறான கொள்கை முடிவுகளை கையாண்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்தைத் தாண்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே முன்னிலையில், அந்நாட்டின் 26-ஆம் பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றிருக்கிறார். […]
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லின் பேசியதாவது “கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா நடைமுறைகள் மீண்டுமாக முழுவீச்சில் தொடங்கப்படுகிறது என்று கூறினார். கொரோனா காலத்திற்கு முன் 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்த வருடம் 8 லட்சம் விசாக்கள் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அவசரத்தேவைக்காக அமெரிக்கா […]
நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் மொயின் அலி, சிஎஸ்கே தனது பயிற்சியை ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் அணியில் இணையாமல் இருக்கிறார். அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி இடம்பெறவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, மொயின் அலி விசாவுக்கு ஒரு மாதம் ஆகியும் […]
அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகர்களில், ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு அந்நாட்டை நிலைகுலையச் செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, தங்களை தாக்க தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில், விசா நிறுவனம், ரஷ்யாவில் விசா கார்டு பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. […]
உக்ரைன் மக்கள் அமீரகத்துக்கு விசா இல்லாமல் வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக அமீரகத்திற்கு வரலாம் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது. “உக்ரேன் மக்கள் வருகை குறித்து புதன்கிழமை இரவு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் […]
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணி புரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1 பி விசாவுக்கு நடப்பாண்டில் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 18 ஆம் தேதி இறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமையின்றி தங்கி பணிப்புரியும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஹெச்1 பி விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து […]
இங்கிலாந்து தன்னுடைய நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. இந்திய நாட்டை இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் எப்போதுமே தங்களுடைய நண்பன் என்றே கூறுவார். இந்நிலையில் இங்கிலாந்து தனது நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து வர்த்தக செயலாளரான ஆனிமேரி அடுத்த மாதம் தலைநகர் டெல்லிக்கு வரும்போது மேல் குறிப்பிட்டுள்ள வர்த்தக […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான விசா 89.4 எப்எம் மேலாண்மை இயக்குனரான ரமணி என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி 106.5 கில்லி எஃப் எம் மேலாண்மை இயக்குனரான கனகராஜ் என்பவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவினுடைய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் நடந்த தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பார்த்திபன் பெற்றார். தற்போது அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார். மேலும் இரவின் நிழல் எனும் தமிழ் திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசை […]
தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணிடம் தூதரக அதிகாரி ஒருவர் நடந்து கொண்ட செயல் காணொளியாக வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை “வெளியே செல்லுங்கள்” என்று கூறி வெளியேற்றியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது செல்போனில் […]
சுவிட்சர்லாந்துக்கு வரும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஜனவரி 2022 முதல் விசா இல்லாமல் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலம் தங்க விரும்பினாலோ (அ) பணிபுரிய விரும்பினாலோ ஆஸ்திரேலியாவில் உள்ள சுவிஸ் விசா அதிகாரிகளிடம் முதலில் விசாவிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதன்படி சுவிட்சர்லாந்து அரசு ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 விசாக்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைத்து வகையான நோக்கங்களுக்காகவும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]
H4 விசாவை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்டு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்நாட்டில் பணிபுரிவோரின் மனைவி அல்லது கணவன் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசா அளிக்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு வேலை புரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதிலும் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு […]
வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்க குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கான H1B ரக நுழைவு விசாவை தற்பொழுது சந்தை பகுப்பாய்வு நிபுணர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அயல் நாட்டவர்கள் அங்கு தங்கியிருந்து நிறுவனங்களில் வேலை புரிவதற்கு H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதனை பெறுவதற்கு பணியாளர்கள் வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைசார்ந்த அனுபவமோ அல்லது […]
நடிகை ராதிகா ஆப்தே எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்னும் தகவலை பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், தோனி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ”நான் […]
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விசா வழங்க சீன அரசு மறுப்பு தெரிவித்ததை குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் இருந்து மாணவர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் என அனைவரும் இந்தியா திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவர்கள் தற்போது சீனா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சீன அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி […]
ஆப்கானிய அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட அனுமதி வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது. இதன்படி 2600 ஆப்கானியர்களுக்கு வசிப்பிட விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விசா பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்தப் பட்டியலில் மனித […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்கு விசா கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு மின்னணு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், தற்போது அவர்கள் இந்தியாவில் இல்லாத பட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படும். இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கு […]
அமெரிக்க எம்.பி.க்கள் அந்நாட்டில் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பட்டப்படிப்பு மேற்கொள்ள அதிக ஆர்வம் செலுத்தி வருவதோடு ஏராளமானோர் ஆண்டுதோறும் விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா கொரோனா பெருந்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி எச்.1பி எனப்படும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான […]
விசா இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க 7 யூரோ செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . பிரித்தானிய மக்கள் தங்கள் விடுமுறையை கழிக்க ஐரோப்பாவில் உள்ள பிரதான இடங்களுக்கு சுற்றுலா செல்வர். இந்நிலையில் புதிய சுற்றுலா அமைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் சுற்றுலா செல்வதற்கு பயணிகள் 6 பவுண்டு செலுத்த வேண்டும். அத்துடன் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் விசா இல்லாமல் நுழையும் சுற்றுலா பயணிகளுக்கும் […]
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் விசா வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தின. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த […]
ஹாங்காங் மக்கள் பிரிட்டனில் வாழ புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் எதிரொலியாக சீனா கடந்த ஆண்டு புதிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு BNO பாஸ்போர்ட் பயண ஆவணமாக செல்லுபடி ஆகாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பிரிட்டனில் இன்று பிற்பகல் முதல் பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யவும் வசிக்கவும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BNO பாஸ்போர்ட் […]
ஹெச்-1பி விசாகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசாகளுக்குகான கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் சம்பளத்தில் கட்டுப்பாடு, சிறப்பு பொறுப்புகளுக்கு கட்டுப்பாடு என அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்தனர். இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]
16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், ஹாங்காங் போன்ற 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து எழுத்துபூர்வமாக வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் இதை வெளிப்படுத்தி உள்ளார். ஈரான், இந்தோனேசியா போன்ற 43 நாடுகள் விமான நிலைய விசாக்களையும், இலங்கை, நியூசிலாந்து, மலேசியா போன்ற 36 நாடுகள் இ-விசாக்களை வழங்குவதாகவும் அதில் தெரிவித்தார். […]
சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கு விசா வழங்க சில கட்டுப்பாடுகள் விதித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆணை பிறப்பித்துள்ளார் . இது பற்றி மைக் பாம்பியோ டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுருந்தார் : “ திபெத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் சீன நாட்டு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து இன்று அறிவிப்பு வெளியிடுகிறேன், மேலும் சீனாவின் தன்னாட்சி பகுதியாக இருக்கும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் செல்ல சீனா அனுமதியை […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளம், கா்நாடகம், […]