விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தவறான தகவல் கொடுத்த 19 வயது இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் டோரி கார்த்திக் என்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே காவல்துறை மற்றும் மாநில காவல்துறை கூட்டுக் குழு கைது செய்து சிறையில் அடைத்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி 100 என்ற எண்ணுக்கு போன் செய்து ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையுடன் அவர் தெரிவித்துள்ளார். […]
Tag: விசாகப்பட்டினம்
ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 1/2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஜான்விதா என்ற 1 1/2 வயது குழந்தை ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜான்விதாவிற்கு […]
ஆந்திராவில் டிக்டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் கோத்தவாலாசா பகுதியில் வசிக்கும் நபர் பார்க்கவ். இவர் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்தவர். மேலும் இணையதளத்தில் “fun Bucket” என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது பார்கவ் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சினகிரி காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே காலனியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சகோதரன் […]
விசாகப்பட்டினத்தில் 14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் டிக்டாக் பிரபலம் பார்கவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்தவன் டிக்டாக் பிரபலம் பார்கவ். நகைச்சுவையான விடீயோக்களை வெளியிட்டு வந்ததால் பன் பக்கேட் பார்கவ் என்று அழைக்கப்பட்ட இவன், ஓ மை காட்… ஓ மை காட் என்று பேசும் விடியோக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்த இவன், தன்னை காதலிக்க சொல்லி […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பங்காருநாயுடு அவரது மனைவி நிர்மலா மற்றும் அவர்களது 2 மகன்கள் தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவாடா என்ற இடத்தில் காகிதம் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தீ கிடங்கு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற திக்கவாணி பாலம் கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதனை கண்டவர்கள் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. […]
தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 17வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் மே 7ம் தேதி தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில்12 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்குக்குப் பின் பாதுகாப்பு நெறிமுறைகளை […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. […]