பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tag: விசாரணை
ஸ்விட்சர்லாந்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் மோன்ட்ரீயுக்ஸ் என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் 51 வயதுடைய நபர், அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் அந்த பெண்ணின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு குற்றத்திற்காக அந்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றிருக்கிறார்கள். ஜன்னல் வழியே காவல்துறையினர் வருவதை பார்த்த அந்த குடும்பம், […]
பாலியல் வழக்கு தொடர்பாக மு க ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. விருதுநகரில் சமீபத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 22 வயதான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதில் முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், […]
கோவில்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்கமாட்டார் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்திய ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி எம் எஸ் சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி மத நம்பிக்கை உள்ளவர்களே கோவில்களுக்கு வருகிறார்கள். கோவிலை பொறுத்தவரை கடவுள் […]
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக மேலிடத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அதில்தான் உண்மையை உண்மைகள் அனைத்தையும் கூறுவதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டணி அமையவே சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பு ஏற்கனவே முதல்வர் கூறியிருந்தது போல ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]
ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன் என இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகிறது. அந்த மர்மம் குறித்து விசாரணை நடைபெறுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில்ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த […]
திண்டுக்கல்லில் போன் செய்து கொடுக்காத காரணத்தினால் தனது தங்கையை அக்கா வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாககோனனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 43). இவரது கணவர் இறந்த நிலையில் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தமிழ்செல்வி உடன்பிறந்த அக்கா வெங்கடேஸ்வரி (வயது 46) தனது கணவர் சுப்பிரமணியனுடன் தனியாக வசித்து வருகிறார். ஈஸ்வரியின் மகன் நாக மணிகண்டன் கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் தாயாருடன் […]
தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் […]
ஜெயலலிதா செல்வ வரி வழக்கு குறித்த முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. செல்வ வரி வழக்கிலிருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரி துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த […]
காதல் திருமணம் செய்துகொண்ட பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(21). இவர் தனது உறவினரான பார்த்திபன்(25) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பார்த்திபன் தனது மனைவியுடன் வசித்து வந்த […]
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்திற்கு சிம்பு பேசப்பட்ட சம்பளம் எட்டு கோடி என்றும் ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மட்டும் அளித்ததாகவும் சிம்பு தரப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. இதற்கு பதிலடியாக மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு அவர் மீது சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மார்ச் 7 மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். […]
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மார்ச் 7 மீண்டும் விசாரணையை தொடங்கியது. அப்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். […]
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து 2 1/2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணை இன்னும் முடிவடையாததால் தொடர்ந்து ஆணையத்தின் பதவிக் காலமும் […]
சென்னையில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி டி.வி.எஸ் நகர் 5 வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது41). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் கடந்த நான்கு […]
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை பகுதியை சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தனக்கு வாழ்க்கை சிக்கலாகவும், நெருக்கடியாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு ரஜப் உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த ஒரு […]
கார் ஓட்டுநரை மிரட்டி காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ரங்க பூரியை சேர்ந்த சச்சின்(29) ,மனோஜ்(27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த விசாரணையில் வாடிக்கையாளர்களை போல் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி கார் ஓட்டுனரை மிரட்டி காரை கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி […]
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இ.எஸ் வானுமாமலை வி.இராஜலட்சுமி 145 பேர் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள கணினி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு கடந்த 15 முதல் […]
காட்டு விலங்குகள் கடித்து 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 100-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆட்டு பட்டியில் இருந்த 60 செம்மறி ஆடுகள், 7 குட்டிகள் போன்றவை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் அதிகாரிகளுக்கு தகவல் […]
மோட்டார் சைக்கிள் கீழே நிலை தடுமாறி விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் திடீரென சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றுள்ளது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் […]
பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பருவ தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நடத்த சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா என்.ஒய்.சி.எஸ் மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் […]
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில் இன்று விசாரணையை தொடங்கினர். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறை & பள்ளி சுற்றுப்புற பகுதிகளை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பால்பாண்டி- கண்ணகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டி மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். அதே போல் நேற்றும பால்பாண்டிக்கும் அவரது மனைவி கண்ணகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பால்பாண்டி அருகிலிருந்த பிளேடால் மனைவி மற்றும் மகளின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
14 வயது சிறுவன் ஒருவன் சிறுமியை கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவர், சிறுமி ஒருவரை கோயிலில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்தின் போது மைனர் என்பதால் வீட்டிற்கு தெரியாமல் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர். அந்த சிறுமியின் தந்தை அச்சிறுவனுக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது அந்த சிறுவன் இளைஞன் ஆகியுள்ளதால் அவனுக்கு […]
தம்பி மகனின் திருமணப் பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தம்பி மகனின் திருமண பத்திரிக்கையில் சுப்பிரமணியின் பெயர் சேர்க்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி கடந்த-15 தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-ம்வருடம் மேமாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மொத்தம் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் […]
காவல்துறையினர் மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுப்பதற்காக புதிய நடத்தை விதிகள் தமிழக காவல்துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நடத்தை விதி 24 சி என்ற பிரிவு தமிழக காவல்துறையில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதியின் கீழ் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் திருநங்கைகளை விசாரணை மேற்கொள்ளலாம். அதேபோல் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை இன்று (பிப்ரவரி 16) முதல் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு இது தொடர்பாக விசாரிப்பதற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு உறுப்பினர்கள் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் உள்ள சிலிண்டரை வெடிக்க வைத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் செல்வராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான கணேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்த செல்வராணி நேற்று தனது வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளார். இந்நிலையில் செல்வராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த செல்வராணியை […]
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவளர்நல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற 18 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
நேபாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாள நாட்டில் டாங் மாவட்டத்தில் துளசிபூர் எனும் நகரில் காலணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுஜிதா கட்டூன் (வயது 13) ஹசன் […]
புதுச்சேரியில் மனை பிரச்சினை காரணமாக இளம்பெண்ணை உறவினர்கள் தாக்கியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் பாகூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (50) இவர் தனது மகன் பிரியதர்ஷன் மற்றும் மகள் பிரியதர்ஷினியு டன் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டு உறவினர்களான செல்வி, சுப்பிரமணியன் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை காரணமாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி என் மகன் […]
குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விஜயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கண்ணன் பல முறை வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்கும் முயன்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் […]
வாடகை கேட்ட உரிமையாளரை தந்தை, மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சன்னிக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் வாடகை தாருங்கள் இல்லையெனில் வீட்டை பூட்டி சாவியை தாருங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. […]
ஐநா அதிகாரிகள் 2 பேரை கொன்ற குற்றவாளிகள் 51 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவானது. இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிப்பதற்காகவும் , நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டேடுத்து அமைதியை ஏற்படுத்தவும், உள்நாட்டு படையுடன் ஐநா படையினரும் சேர்ந்து […]
விழுப்புரம் அருகே 4,300கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகில் வீரமூர் சிவன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டு வாசலின் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையில் உடனே பறக்கும் படையினர் விரைந்து சென்று அந்த […]
விஜயலட்சுமி என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகமாக கன்னட மொழிகளில் நடித்துள்ளார். சில தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் […]
போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள முடிப்பட்டி கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு ஏற்கனவே கர்ப்பப்பையில் பாதிப்பு இருந்த நிலையில் 2-வதாக கர்பமடைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை […]
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்துத் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த வாலிபர் தனது மனைவி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு […]
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது அந்த செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. இதனை நம்பிய சிலர் அதில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாக்கி வந்துள்ளது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. […]
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட திப்புவிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கூடுதல் […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். எனவே, 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சுமார் 20 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஹசன் சாலையில், ராஜேந்திர பாலாஜி ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வேறு […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில், சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினரால் கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராஜேந்திரபாலாஜியை அங்கு அழைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான, எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினரை மாவட்ட […]
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓராய் என்ற கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல்(84) என்பவர் வசித்துவருகிறார். இவர் தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார். அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற்ற சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று 11 டோஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் 12 வது தடுப்பூசி போட சென்ற போது நர்சுகளிடம் சிக்கிக் […]
ஜார்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் […]
உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் காணொளி மூலமாக மட்டுமே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் நேரடியாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலியில் மட்டுமே விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.