Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. சூதாட்டத்தால் “உயிரை விட்ட வாலிபர்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

 வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் தினம் தோறும் பலர்  சூதாட்டத்தில் தங்களது   பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள் தான் மட்டுமில்லாமல் தனது குடும்பத்திற்கே விஷம் கொடுத்து தற்கொலை செய்கின்ற நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று  சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு  ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்!!…. 10 ரூபாய்க்காக உயிர் நண்பனை இப்படியா பண்ணனும்…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

10  ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய  விசாரணையில் அதிர்ச்சி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு… வார்டனை ஆயுதங்களால் சரமாறியாக தாக்கிய மாணவிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக  பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக  அடித்து தாக்கியுள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி என்னும் வாலிபர்…. ஏன் தெரியுமா…?

டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின்  இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக  போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3 1/2 கோடி மோசடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையைச் சேர்ந்த வினோத், காமராஜ் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தி பட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ண பிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய வினோத், காமராஜ் அவர்களிடம் ரூ.3 1/2 கோடி வரை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட  அவர்கள் எந்தவிதமான லாபத் தொகை மட்டுமல்லாமல் அசல் தொகையும் […]

Categories
மாநில செய்திகள்

ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்… உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…!!!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஈஷா அறகட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது கடந்த 2006 -ஆம் வருடம் முதல் 2014 -ஆம் வருடம் வரைவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2021 நவம்பர் 19-ஆம் தேதி விதிமீறல் கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த நோட்டீசுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாமல் கடந்த 2014-ஆம் வருடம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் நீட்டிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை கொலை செய்த கணவர்… காரணம் என்ன…? வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இம்மானுவேல் அப்துல்லா நேற்று முன்தினம் அவரது மனைவியை அடித்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “நடந்த துப்பாக்கிச் சூடு”…. போலீசார் உள்ளிட்ட6 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில்  வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்….!! மாணவியை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!!

மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது  ஒரு ஓட்டலில் 2  அறையை  வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில  மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும்  […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “ஓட்டல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான ஊழல் வழக்கு”…. முதல் மந்திரியின் மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை…. அதிகாரிகள் தகவல்…!!!!!

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு… ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது… போலீஸ் அதிரடி.!!!!!!

செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி: பலர் மாயம்…. பெரும் சோகம்…!!!!!!

அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு…? விசாரணைக்கு உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!!

கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நேற்று புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின் விமானத்தின் சரக்கு கிடங்கு ஒன்றில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்த  பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய டி.சி.ஜி.ஏ உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பயணி ஒருவர் “துபாயிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

60 நொடிகளில் 5 கார்… மொத்த மதிப்பு இத்தனை கோடியா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

இங்கிலாந்தில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில் ஒரு குழுவாக வந்த திருடர்கள்  கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 4.44 மணியளவில் திருடி சென்றுள்ளனர். அதாவது போர்ஸ், ஏரியல் ஆட்டம் போன்ற 5 சொகுசு கார் மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திருட்டுப் போன இந்த கார்களின் மதிப்பானது சுமார் 7,00,000 பவுன்டுகள் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து எசெக்ஸ்  காவல் துறையின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்  வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்கு பதிவு… பணியில் காலம் தாழ்த்தியது ஏன்…? கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா(32) ஒடிசா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார். இவரது நண்பன் ஆனந்த் டாப்போ(28). ஆனந்த் டாப்போ புவனேஸ்வர் மாவட்டம் இன்போசிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் ஆனந்த் டாப்போ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டி.டி-யுடன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் – மகனை கொன்று டிரைவர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

திருச்சி திருவானைக்கால் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாமிநாதன் (8). கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் 3 வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவர் வேலைக்காக  துபாக்கு  சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கார்த்திகேயன் துபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஷரத்தா கொலை வழக்கு…. குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!!

மேலும் 14 நாட்கள் அப்தாப் அமீனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள வசாய்   பகுதியில் ஷரத்தா என்ற  இளம் பெண் தனது காதலனான அப்தாப் அமீன்  என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் ஷரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இது  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  […]

Categories
உலக செய்திகள்

“தொடரும் பயங்கரவாதிகளின் அட்டுழியம்”… 12 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி  நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கொடி கட்டி பறக்கும் ஹைடெக் விபச்சாரம்… இத்தனை பெண்களா…? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில்  சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என […]

Categories
உலக செய்திகள்

“பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை”… அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை…!!!!!

அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.  ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாலிபர் நடுத்தெருவில் கொடூர கொலை… காரணம் என்ன…? மர்ம கும்பல் வெறிச்செயல்…!!!!!!

கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா  பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை  நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “ரூ. 400 பணத்தை திருடியதாக புகார்”…. 5-ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை போட்டு விடுதியை சுற்றிவர வைத்த கொடூரம்….!!!!!!

மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‌ விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு…. திடீர் வெள்ளப்பெருகில் 14 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் ஜூஸ்கி என்னும் மிகப்பெரிய ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் ஞானஸ்தானம் உள்ளிட்ட மத சடங்குகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை ஜூஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்தானம் விழா நடைபெற்றதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க பேரன் எங்கே”…? மூதாட்டியை அடித்து துன்புறுத்திய கும்பல்… ஏன் தெரியுமா…?? வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டியத்தில் கங்காபூர் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பார்தி வஸ்தி எனும் இடத்தில் இளைஞர் ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவேக் என்பவர் தனது  கூட்டாளி என 2 பேர் அந்த பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின் உனது  பேரன் எங்கே? என அந்த பாட்டியிடம் இருவரும் கேட்டுள்ளனர். ஏனென்றால் அந்த பாட்டியின் பேரன் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த பாட்டிக்கு அவர்கள் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை…. டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த பயங்கரம்!!…. 1 பெண்ணை 3 பேர் பல ஆயுதங்களால்….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ….!!!!

சென்னை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மும்பையில்   உள்ள ஒரு  பகுதியில் 42 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை  வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3  மர்ம நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பெண்ணின் கைகள், மார்பு ஆகிய பகுதிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும், சிகரட்டை கொண்டு சூடும் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனல் மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்சனையா?…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு….!!!!!

அனல் மின் நிலையங்களின்  மூலம்  ஏற்படும் பிரச்சனை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து  சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பிரதேசம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!

திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங்  செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து  கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்… டிரைவரை கைது செய்த போலீசார்… நடந்தது என்ன…?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாயை சீக்கிரம் சீரமைங்க”… காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
தேசிய செய்திகள்

காரை ஓரமா விடுங்க… “கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அடி”… பா.ஜ.க முன்னாள் எம்.பி மீது வழக்கு..!!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள்  கஜ்ராஜ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ்  வேறுஇடத்தில்  மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக  […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி… நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் மறுப்பு … உயர்நீதிமன்றம் அதிரடி..!!!!!

சென்னையை  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ,  எஸ்.பி.ஐ  வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண  பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடகடவுளே.. மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு!!!…….

குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில்  ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சருக்கு பணிவிடை செய்ய போக்சோ கைதிகளை நிர்பந்தித்த சிறை அதிகாரிகள்….. விசாரணையில் பகீர்….!!!!

டெல்லியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் மசாஜ் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது போக்சோ வழக்கில் கைதான 5 கைதிகளை அமைச்சருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்… இணையத்தில் வெளியான வீடியோ… அதிர்ச்சி சம்பவம்…!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் ஹயநத்நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களும் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…. காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த காதலன்…. போலீசார் அளித்த அதிர்ச்சி தகவல்….!!!!

வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி  என்பவர் வசித்து வருகிறார். இவர்  நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற  பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கர்ப்பிணி ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்…. பயத்தில் பள்ளி நிர்வாகம்….!!!!!

மாணவர்கள் பள்ளி  ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார்  மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5  மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அட!… இது என்னப்பா புதுசா இருக்கு…. திருடிய பணம், நகையை திருப்பி கொடுத்த திருடர்கள்….. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் சிலர் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,40,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகுமார் வீட்டில் இருந்து திருடிய 13 சவரன் தங்க நகை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!… “ஆபாச மார்பிங் படம்”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுசுயா. இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாகவே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக நடிகை அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடராஜு […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கே பைன் போடுவீங்களா…. குப்பை கிடங்காக மாறிய காவல் நிலையம்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை  வழிமறித்த  போக்குவரத்து  போலீசார்   ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம்  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர்  தனது நண்பர்கள்  2  பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி… போலீஸ்அதிரடி…!!!!

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சோலையூர் – வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட இளம் பெண்… கொலையாளி 4 வருடங்களுக்குப் பின் கைது… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்விந்தர் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அந்த நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ராஜ்விந்தர் கையில் பழம் வெட்டும்  கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கிரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு அதே பகுதியை சேர்ந்த மருந்தக […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென காணாமல் போன ரயில் என்ஜின்”….. பழுது பார்க்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி கைவரிசை…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு..! முடியாது…. காதலனுடன் சென்று விடுவேன்…. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்ற தாய்..!!

திருநெல்வேலியில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தாய் தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பாலாமடை பகுதியை சேர்ந்த பேச்சி – ஆறுமுகக்கனி (42) தம்பதியருக்கு 19 வயதில் அருணா என்ற மகள் இருந்தார். கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் அருணாவின் தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கிடையே கோவை நர்சிங் கல்லூரியில் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தப்பித்து ஓடிய குற்றவாளிகள்…. தேடுதல் பணியில் போலீசார்….!!!!

பிரபல கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டை சேர்ந்த அவிஜித் ராய்  என்பவர் மதச்சார்பின்மை ஆதரவு கருத்துக்களை கொண்ட அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது. மேலும் அவிஜித் ராய்  இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தார்.  கடந்து 2015-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு […]

Categories

Tech |