தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசாணை 152-ஐ முழுமையாக தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு அரசாணை 152 அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் […]
Tag: விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். இந்நிலையில் விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகமானது அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் கட்சி […]
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனிடையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்துடன் […]
கிரிக்கெட் வீரருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். இவருக்கு உடல்நிலை சரியாகி பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் அவரது தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரி மாணவி சத்ய பிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் […]
விஜயகாந்தின் மகன் பிரபாகரன் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் உடையவராம். முதலில் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிநடை போட்டு வந்த விஜயகாந்த் பின் அரசியலில் ஈடுபட்டார். சினிமாவில் நடித்து வந்த போதே தேசபற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்தார். இதன்பின் அரசியலில் களமிறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் ஒரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியிருக்கின்றார். […]
தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் ஒப்பற்ற தலைவராக நமது தலைவர் இருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்ததில்லை தேமுதிக. சுயமாக உருவாகி லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக என் மக்களை வறுமை கோட்டிற்கு கீழிருந்து கொண்டு வந்து, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் நமது கேப்டன் அவர்கள். தேசம் […]
தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, திமுக அரசை விமர்சனம் செய்து பேசினால் அதுக்காக என் மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. இது மாறி எவ்வளவு கேசை வேணாலும், போடுங்க. மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டினால் உடனடியாக கேஸ் போடுறீங்க, எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க, அதைப்பற்றி எல்லாம் பயப்படக்கூடிய கட்சி தேமுதிக இல்லை. இது பனங்காட்டு நரிகள், உங்கள் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இப்போ கூட நம்ம டாக்டர் இளங்கோ சொன்னாரு, பாலம் […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இங்கே என ஆட்சியா நடந்துட்டு இருக்கு ? ஷோ கட்சி ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. பின்னாடியே பத்து கேமரா போகும். இவர் நடந்துட்டு இருப்பார், கை கொடுப்பாரு. ஏன்னா அவருக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம், அந்த ஆசை எல்லாம் இப்பதான் அவரு நிறைவேற்றிட்டு இருக்காரு. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு, பேண்ட்டை போட்டுக்கிட்டு, ஒரு போட்டோ சூட் ஆட்சி […]
ஒற்றை வார்த்தை பதிவு என்பது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் தாங்கள் முன்னெடுக்கும் அரசியலில் ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசஙன்கள் என பலரும் தங்களுக்கு பிடித்த ஒற்றை வார்த்தையை பதிவு செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலின் “திராவிடம்” என்றும், இபிஎஸ் “தமிழ்நாடு” என்றும், சீமான் “தமிழ் தேசியம்” என்றும், சசிகலா “ஒற்றுமை” என்றும், ராமதாஸ் நம் “சமூகநீதி” என்றும், திருமாவளவன் “ஜனநாயகம்” […]
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 70 வது பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் வைகோ பற்றிய ஆவணப்படம் வெளியாக இருக்கின்றது. அது தொடர்பான அழைப்பிதழை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அண்ணியார், சகோதரர் சுதீஷ் ஆகியோர்களிடம் கொடுத்தோம், மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு, ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நல்ல மனிதர். […]
நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகின்றார். இவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வருவாரா அவரைப் பார்க்க முடியுமா என தொண்டர்கள் […]
தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (ஆகஸ்ட் 25ஆம்) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து : முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது […]
தனது பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்தித்தார். தேமுதிக கட்சியின் நிறுவனரும், கேப்டனுமான விஜயகாந்த் தனது 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமைகழக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை நேரில் […]
விஜயகாந்த், தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்.நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரேமலதா,விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.சமீபத்தில் சுதந்திர தின விழா […]
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ” ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு […]
விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் தேமுதிகவை தேர்தலுக்கு தயார்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் செயல் தலைவராக […]
நீண்ட காலமாக உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைபாடு காரணமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானதால் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். […]
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) நேற்றிரவு காலமானார். சென்ற 2009 ஆம் வருடம் வித்யாசாகரை, மீனா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை சைதாப் பேட்டையில் வித்யாசாகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுகாலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உட்பட பலர் நேரில் […]
விஜயகாந்த் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக நீரிழிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய […]
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இவ்வாறு அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 உதவித்தொகை வழக்கும் திட்டத்தினை காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசானது உடனடியாக நிறைவேற்றவேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இருப்பதாவது “6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித்துறை அறிவித்து இருப்பதாக […]
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் ?என்பது குறித்து எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார். பல்வேறு தரப்பினரும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதேபோல் முதல்வரின் அணுகுமுறையை தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்களுடைய கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வேண்டும் என்று […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு ரூபாய் 40 முதல் ரூபாய் 240 வரை அதிகரித்து, மேன்மேலும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பழம், பூ, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய […]
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் மாணவர் திக் ஷிக், உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, தனியார் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த இரண்டு […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 102 ஆகவும், .டீசல் விலை 70 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் […]
இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் உடன் பணியாற்றிய போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார். 90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த விக்ரமன் புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். இவரின் படங்களை குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். இவர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது விஜயகாந்த் பற்றி கூறியுள்ளதாவது, “வானத்தை போல படத்தின் கதையை விஜயகாந்திடம் கூறியபோது சண்டை காட்சிகள் எதுவும் […]
ராதாரவி, விஜயகாந்தின் அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். பிறகு இவர் அரசியலில் ஈடுபட்டார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலையில் உருக்கியது. இந்நிலையில் விஜயகாந்தின் நண்பர் மற்றும் நடிகரான ராதாரவி யூடியூப் […]
தமிழக அரசு சார்பாக இயங்கி வரும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். […]
விஜயகாந்தின் அண்மையில் வெளியாகிய புகைப்படத்தை பார்த்து மனம் உருகி பேசியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். அண்மையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனை பார்த்த பலர் கண் கலங்கினர். […]
தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தவரை வாக்கு சதவீதத்தில் ஏறுமுகத்தில் இருந்தது. விஜயகாந்த் என்ற ஒற்றை நபரை நம்பி கட்சியில் இணைந்த பலர் விஜயகாந்த் கட்சிப் பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து சற்றே தள்ளி இருந்த போது வெளியேற தொடங்கினர். அதோடு தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தால் கட்சிப் பொறுப்பு மற்றும் நிர்வாகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிகளுக்கு தாவ தொடங்கினர். இதனை தொடர்ந்து […]
நடிகர் விஜயகாந்தின் அண்மையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரை மக்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் அரசியலில் குதித்தார். 2011-ம் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. விஜயகாந்தின் இந்த முடிவால் பலர் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் தேமுதிக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது .அதிமுக மற்றும் திமுக அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்த தேமுதிக தற்போது நாளுக்கு நாள் பின்னடைவை […]
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கும்பகோணத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த திருமண விழாவில் விஜயபிரபாகரன் கூறியதாவது, தேமுதிகவுக்கு கூட்டம் வரவில்லை, தேமுதிகவிற்கு ஆளே இல்லை என்று பேசுபவர்களின் கண்ணத்தில் அறையுங்கள். தேமுதிகவுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்கு காரணம் அரசியல் சூழ்ச்சி தான். ஆனால் தேர்தல் களம் தேமுதிகவை சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு […]
முரட்டுக்காளை படத்தில் முதலில் வில்லனாக விஜயகாந்த் நடிக்க இருந்தாராம் . ஆனால் திடீரென்று வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். 1980-இல் வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் இயக்கப்பட்டது மற்றும் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் எழுத்தப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ரதி அக்ரிஹோத்ரி மற்றும் சுமலதா ஆகிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். முரட்டுக்காளை ரஜினிகாந்துக்கு ஏ. வி. எம் தயாரிப்பில் முதல் படம். மேலும் இப்படத்தின் மூலமாக தான் ஏ. வி. […]
தமிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது தற்போது “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை வைரஸ் அதிக […]
தமிழகத்தில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதோடு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாநில […]
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி, டீசல், […]
டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ? நீட் தேர்வை முழுமையாக எடுப்போம் என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தார்கள், எல்லாருக்கும் நகை கடன் தள்ளுபடி என்று கூறித்தான் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிக;ளையும் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் இன்னும் மிகப்பெரிய மனக்குறை இருக்கு. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களில் எத்தனையோ பேருக்கு அப்போ மட்டும் அவங்கள […]
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் எத்தனை நாட்களுக்கு அவர்களையே குறை சொல்லி கொண்டே இருப்பார் என தெரியவில்லை. ஏனென்றால் எட்டு மாதம் ஆகிவிட்டது, ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டும் என்று….. இப்போது எட்டு மாதம் ஆகிவிட்டது. இனி ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் மேல் குறை சொல்லாமல், அடுத்தடுத்து மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நிச்சயமாக அவர் வந்து இறங்கிவந்து செய்ய வேண்டும். ஏனென்றால் திருவெற்றியூர் நான் நேரடியாக போனேன் , அங்க […]
சமீபத்தில் பெண்களின் திருமண வயதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 18-லிருந்து 21-ஆக உயர்த்தியது. இதற்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தேமுதிக வரவேற்கிறது. மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து விஜயாகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் 6/12/2021 காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலைமை என்ன என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரலாறு காணாத சோகம் என்பது தேமுதிகவுக்கு மிக சரியாக பொருந்தும். தமிழக மக்களுக்கு திசைகாட்டியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. தற்போது திசை தெரியாமல் நிற்கின்றது . அரசியலில் எம்ஜிஆர், சிவாஜி போல அதிமுக, திமுக என இரு பெரும் கட்சி கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு புயலாக நுழைந்த கட்சி தேமுதிக. மதுரையில் வைத்து […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை […]
கேப்டன் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே தேதிமுக தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் சின்னபாண்டு இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை புரிந்த கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு வழிநெடுகிலும் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக உடையார்பாளையம் பேரூராட்சி அருகே கழக கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திருச்சி தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கிருஷ்ணன் கோபால் நேற்று சென்னையில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மீதுள்ள ஈடுபாட்டால் அக்கட்சியில் இணைந்தேன். மேலும் தேமுதிகவை மணப்பாறை தொகுதியில் வளர்த்ததில் எனது பங்கு முக்கியம் ஆகும். இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அக்கட்சியின் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மூன்றாவது கட்சியாக உள்ள மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல பாஜகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த […]
திமுக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதன் காரணமாக கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவரது மகனான விஜய பிரபாகரன் மற்றும் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் […]