மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் 12 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதிய இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
Tag: விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் . இதனையடுத்து வீட்டில் தீவிர ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டு வந்த இவர் மேல் சிகிச்சைக்காக துபாய் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருத்துவமனையில் சத்ரியன் திரைப்படத்தை செவிலியர்கள் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றார். இந்நிலையில் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், அதுமட்டுமல்லாமல் தான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை மருத்துவமனையில் செவிலியர்களுடன் பார்த்ததாக கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேப்டன் பழைய மாதிரி செம கெத்தா உட்கார்ந்திருக்கிறார்.
நான் நன்றாக இருக்கிறேன். என்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கோளாறு, தொண்டையில் தொற்று உள்ளிட்ட உடல் நல பாதிப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவரால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இதனையடுத்து அவர் தனது உடல் நல பாதிப்புகளுக்காக சிங்கப்பூரில் இருக்கும் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.. அதேபோல சென்னை மற்றும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தேமுதிகவினர் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2005ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றோம். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கு, என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போதுதான் குறைந்து […]
திமுக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வரும் 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் தொண்டர்கள் யாரும் தனது பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2005ஆம் வருடம் கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாளை வறுமை வறுமை ஒழிப்பு தினமாக தான் கடைபிடித்து வருகிறோம். “இயன்றதை செய்வோம் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்குதான் ஆட்சியையும் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவை ஒழிக்க மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வறுமை ஒழிந்திட […]
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டைப் போக்க, மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், கிராம மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே மின்வெட்டு ஏற்படுகின்றது. அதேபோல் கிராமங்களிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக […]
நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிந்து கொண்ட படி முன்னணி நடிகர்கள் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். இதையடுத்து 2 மணி அளவில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை 3:15 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை […]
தேமுதிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் விஜயகாந்த் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]
பெரம்பலூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சார நேரம் கடந்ததால் திறந்த வேனில் நின்றவாறு கையசைத்து விட்டு சென்றார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி குன்னம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன், பெரம்பலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து இரவு 8 மணி முதலே […]
அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை சாடிப் பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலங்காநல்லூரில் பிரச்சாரம் செய்தார். பின் திறந்த வேனில் ஏறி அங்கு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரைக்கும் 16 ஆண்டு காலம் நான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன். முதல் முறையாக வேட்பாளராக இந்த முறை விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதனால்… இந்த முறை நான் 60 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது. ஏனென்றால் காலம் குறைவாக இருக்கிறது. 15 நாட்கள்தான் இருக்கிறது. அதனால் எல்.கே சுதீஷ் அவர்களும், விஜய பிரபாகரன் அவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கேப்டன் அவர்களும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். எனவே நான் என்னுடைய முழு […]
விருதாச்சலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2006 கேப்டன் அவர்களால் வெற்றி பெறபட்ட விருத்தாச்சலம் தொகுதியில், 2021ல் பிரேமலதா விஜயகாந்தாக நான் இன்றைக்கு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதை பெருமகிழ்ச்சி அடைகிறேன் . நேற்று முன் தினம் கூட என்னிடம் சென்னையில் கேட்டார்கள். ஏன் விருதாச்சலம் தொகுதி நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று ? எப்போது கேப்டனுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும் முதல் வெற்றியை கொடுத்தது விருத்தாசலம் […]
விஜயகாந்தின் நிலைமையை எண்ணி அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர். பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். இதற்காக அவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோனாவாழும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தேர்தலும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது விஜயகாந்தை கண்ட ரசிகர்கள் மனம் நொந்து போகியுள்ளனர். ஏனென்றால் உடல் […]
தேமுதிகவினருக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் கூறியதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த, இந்த கூட்டணி சுமுகமாக செல்லவேண்டும் என்று தான் கடைசி வரைக்கும் மிக மிக பொறுமையாக, மிக மிக பக்குவமாக, மிகமிக விட்டுக்கொடுத்து அந்த அளவு நாங்கள் பக்குவமா தான் இந்த கூட்டணியை டில் பண்ணுனோம், இதுதான் உண்மை. நான் கூட பல முறை சொன்னேன் 234 தொகுதிக்கு பொறுப்பாளர் போட்டு தயாராக இருக்கின்றோம். அறிவிப்பது ஒரு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள். இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தனித்து போட்டியிடுவது பற்றி தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் தனித்து போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தேமுதிக […]
தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]
உடல் ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது என அவரது மகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
தேமுதிக சார்பில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயப்ரபாகரன் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர இருக்கின்றன. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து மக்களை சந்தித்து வருகின்றனர். கூட்டணி ஒருபுறம், விருப்பமனு ஒரு புறம் என பிரதான கட்சிகளான திமுக – அதிமுக சென்றுகொண்டிருக்கும் அதே வேகத்தில் தேமுதிக, நாம் தமிழர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. […]
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பான பணியைத் தொடங்குவதும் தொடங்குங்கள் என்று தான் சொல்கின்றேன். பாமக 20% சதவீத இட ஒதுக்கீடு டிமாண்ட் அதிமுகவிடம் வைத்தது போல எனக்ளுக்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. என்ன விஷயத்திற்காக நாங்கள் கூட்டணி போகின்றோம் என பொறுத்திருந்து பாருங்கள். தேமுதிக மக்களை சந்திக்கும் என்பதை கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டு தேர்தலுக்கு வருவோம், பிரச்சாரத்திற்கு வருவோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி 234 தொகுதிகளிலும் போட்டி போடுவதற்கு […]
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பாணியில் பேசியதால் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
நடிகர் விஜயகாந்தின் இரண்டு மருமகள்களின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பேராதரவுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என இரு நடிகர்கள் சினிமாத் துறையில் பிரபலமாகி கொண்டிருந்தாலும் தன்னுடைய திறமையின் மீது கொண்ட நம்பிக்கையில் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர். இவரது சண்டை காட்சிகளுக்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. 1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சண்முகபாண்டியன், […]
சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகின்றார். தற்பொழுது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட 70 பேருடன் தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 12.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக கடந்த தேர்தலின்போது தேமுதிக எவ்வளவு வாக்குகள் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நியமித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த […]
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று விஜயகாந்த் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிந்ததை அடுத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. லட்சக்கணக்கான விவசாயிகள் ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற […]
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக – திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. என்றெல்லாம் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்து வந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். […]
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொற்று குணமடைந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.இதற்கிடையே விஜயகாந்த் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவரின் மனைவி பிரேமலதாவும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.சில நாட்களுக்கு பின்னர் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கோரோனா தொற்றின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே விஜயகாந்தின் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் தேமுதிக தலைமையிடம் அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கொரோனோ தொற்றிற்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ஆம் தேதி இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள மியாட் […]
கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் பூரண குணமடைந்து இன்று வீடு […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜயகாந்த் விரைவில் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருடைய முதல் கட்ட பரிசோதனைக்கு பிறகு அவரது சார்ஜ் செய்யப்படும் என்றும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று […]
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
தே.மு.தி.க. தலைவர் திரு விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெரிதளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு […]
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இதனிடையே, தேமுதிகவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு, சென்ற 15ம் தேதி கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா […]
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தேமுதிக தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்த […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி, தன் குடும்பத்துடன் செல்பி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான விஜயகாந்த் 68 வயது முடிந்து தனது 69வது வயதை தொடங்குகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற அவரின் இல்லம் முன்பு கூடிய தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கொரோனா பரவல் […]
இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இன்று பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நல்ல முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் […]