‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என ஒரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ், விவேக், மோகன்ராஜா, கருபழனியப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் […]
Tag: விஜய் சேதுபதி
பெங்களூரு விமான நிலையத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது பெங்களூர் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஏனென்றால் அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியான “மாஸ்டர் செப்” என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.. அதன் 2 நாள் படப்பிடிப்புக்கு நேற்று நள்ளிரவு விஜய் சேதுபதி பெங்களூர் சென்றிருந்தார்.. அப்போது ஒரு நபர் அவரை கேலி செய்ததாகவும், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இவரின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு திரைப்பட குழுவினருடன் இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்களால் நாம் இன்றுவரை நசுக்கப்பட்டு வருகிறோம். இதனால் மத்திய […]
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய […]
தர்மதுரை2 படத்தை நான் இயக்கவில்லை என சீனு ராமசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் […]
தர்மதுரை2 பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் […]
ஹிந்தியில் தயாராகும் வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார்.. தமிழ் திரையுலகில் பிசியான நடிகருள் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி.. தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார். இந்த வெப் தொடரை ‘ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த தொடரின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. […]
கைதி திரைப்படத்தில் முதலில் யார் ஹீரோவாக நடிக்க இருந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், தீனா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் கைதி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதிதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்காததால் கைதி திரைப்படத்தில் அவரால் நடிக்க […]
அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து கடல் படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த அவர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் தனது […]
Master Chef, BB 5, Survivor ஷோக்களை தொகுத்து வழங்க பிரபல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மாஸ்டர் செஃப்பும், ஜீ தமிழில் புதிதாக சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கூடிய […]
சூரி வீட்டு திருமண விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவரின் நகைச்சுவை திறமைக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். மேலும் சூரி தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு நேற்று மதுரையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை […]
விஜய் சேதுபதி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவாக்காற்று (2010), பீட்ஸா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்(2012), நானும் ரவுடி தான்(2015), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இந்நிலையில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கும் ககாத்துவாக்குல 2 காதல் என்ற படத்திற்கு 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி வேலை தேடி வந்த இடத்தில் தற்போது தனது புகைப்படம் வரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் சேதுபதி ஆரம்ப காலங்களில் பல துன்பங்களையும் சந்தித்துள்ளார். ஆனால் விடா முயற்சியின் காரணமாக சிறு வேடங்களில் நடித்து பிறகு பல படங்களிலும் […]
இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டுக்கொண்டு இணையத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், விக்ரம், லாபம் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி இந்தியில் தயாராகி வரும் முபைக்கர் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CRtVO4EHZIw/?utm_medium=share_sheet இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் விஜய்சேதுபதி போலவே அச்சு அசலாக மேக்கப் போட்டு தன்னை […]
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் மாறன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் […]
நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார். சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் […]
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைபடம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்கள் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்னும் திரைப்படம் விரைவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு பெயரிடாத திரைப்படமும் நேரடியாக […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை விஜய்சேதுபதி நிறைவேற்றியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு மக்கள் செல்வன் என்று பட்டம் வழங்கப்பட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் விஜய்சேதுபதியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை பட்டுள்ளார். மாஸ்டர் […]
பிரபல வில்லன் நடிகர் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேதாளம், றெக்க, காஞ்சனா3, அருவம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் கபீர் சிங். இவர் தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தன் திரைப் பயணத்தை பற்றி கூறும்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியை பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, விஜய் சேதுபதியுடன் நடிக்க […]
பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார், பிச்சுமணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி […]
விஜய் சேதுபதி பட இயக்குனர் ஆர்யாவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இதையடுத்து அவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ எனும் திரைப்படத்தையும், ‘குட்டி ஸ்டோரி’ எனும் ஆந்தாலஜி படத்தையும் இயக்கினார். இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கி வந்த நலன் குமாரசாமி தற்போது ஆர்யாவுடன் கூட்டணி […]
நடிகர் கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கொரோனா பரவல் குறைந்த பின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு […]
சன் டிவியின் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சன் டிவி புதிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. அதன்படி சமையல் போட்டியை மையமாக வைத்து “மாஸ்டர் செப்” எனும் நிகழ்ச்சியை துவங்க இருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்று […]
விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 நட்சத்திரங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் மே 7-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் […]
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள […]
பிரபல தொகுப்பாளர் ரக்ஷன் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் இவர் தொகுத்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ரக்ஷன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாடல் வெளியான 24 மணிநேரத்தில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் […]
விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இத்திரைப்படத்தினை மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் லாபம் […]
நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி […]
இன்று வெளியாக இருக்கும் லாபம் படத்தின் இரண்டாவது சிங்கிலை மறைந்த எஸ்பி ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் யாழா யாழா […]
ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் முன்னணி நடிகைகள் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார்.ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து புதிய படம் […]
கமல் படத்தில் விஜய்சேதுபதியின் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. அதன் பிறகு இப்படத்தில் பஹத் பாசில் ஒப்பந்தமான தான் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை […]
அவர் செய்த புண்ணியம் கூட அவரை காப்பாற்ற வில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் […]
மாஸ்டர் மகேந்திரன் புது கார் வாங்கியதற்கு விஜய் சேதுபதி வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திலும் மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் புதிய கார் ஒன்றை […]
முன்னணி நடிகர் விஜய்சேதுபதி கர்ணன் திரைப்படம் எக்ஸலண்ட் மூவி என்று ட்விட் செய்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். நேற்று உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இத் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் […]
நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜ் கைகளில் முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்க்கும் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அதிலும் சில திரைப்பிரபலங்கள் தங்களது […]
நடிகர் துருவ் விக்ரம், விஜய் சேதுபதி அழகான மனிதர் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரமின் மகனும், நடிகரும் ஆனவர் துருவ் விக்ரம். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த […]
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்ட விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு ஆர்வம் காட்டி நடித்து வருகிறாரோ, அதேபோல் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக திகழ்கிறார். குறிப்பாக கஷ்டம் என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் […]
கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹிட் படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமலை வைத்து “விக்ரம்” என்னும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால் நடிகர் கமல் தேர்தல் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தேர்தல் நிலவரம் தெரிந்ததும் […]
சாதி மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் அஜித், விஜய்,சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் மதியம் 2 மணி அளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது ஓட்டை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க […]
தமிழகம் முழுவதும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திரைபிரபலங்கள் பலரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார். இந்நிலையில் நேற்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியிடம், ஜாதி மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என ஏற்கனவே சொல்லி இருந்தீங்க ? என கேள்வி கேட்கப்பட்டதற்கு, அது நான் 2019இல் சொன்னது என தெரிவித்தார். இப்போது அந்த நிலைப்பாட்டில் எப்படி இருக்கீங்க ? என்ற கேள்விக்கு, எப்போது அதான் நிலைப்பாடு. என்னை பொறுத்த வரை மனுஷன் […]
விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பை காண்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அந்த மண்டபம் முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் […]
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகர் ராமராஜன் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் அதன்பின் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். தற்போது இவர் நீண்ட வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் 44 படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதை அம்சம் […]
தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி மற்றும் தனுஷிற்கு அவர்கள் பயின்ற பள்ளியில் இருந்து வாழ்த்துக்கள் வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருது சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அசுரன் படத்திற்காக தனுஷிற்க்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் படித்த தாய் சத்ய எம்ஜிஆர் பள்ளியின் நிறுவனரும் நடிகருமான தீபன் தேசிய […]
தேசிய விருதுக்கான பட்டியலில் பிரபல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். 67 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் “அசுரன்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]
மாநகரம் ரீமேக்கில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் […]
திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து […]
தளபதி விஜய் நடித்து கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த படம் மாஸ்டர். திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு கொரோனா காரணமாக 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. அதாவது 250 […]
விஜய் சேதுபதி விலகிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் “புஷ்பா”. சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் […]