செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குஜராத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஆம்.ஆத்.மி கட்சி வாக்குகளை பிரித்திருக்கின்றது. அதே போல ஒவைசி தலைமையிலான கட்சியும், பிஜேபி கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதற வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பதை விட… எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறி போனது என்பது தான் கவலைக்குரியது. 2024 தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாத வகையில், அனைத்து எதிர்கட்சிகளும்… பாஜக […]
Tag: விடுதலை சிறுத்தைகள்
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவார்கள் என்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த தனிநபர் மசோதாவை அவர்கள் மக்களவையிலும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மக்களவையில் அவர்களால் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு இருப்பதால், அங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள… ஒரு ஏதுவான சூழல் இருக்கலாம். ஆனாலும் கடைசியாக அது வாக்கெடுப்பில் வீழ்த்தப்படும் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 2016இல் போடப்பட்ட அரசாணை எண் 108 ரத்து செய்யப்பட வேண்டும், 1998க்கு முன்பு இருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், கோவில் மனையில் நீண்டகாலமாக வசித்து வரக்கூடிய… மாதம் மாதம் இ.எம்.ஐ_யாக வாடகை பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் அவரவர் வசிக்கும் […]
அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில் திரண்டு நின்று, போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ? எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான் இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல, அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார் மொழிபெயர்த்தார். ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார், மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி, இவங்களா தப்பான கருத்துக்களை நுழைச்சு, இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து, திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது, பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால், விசிகவோ மற்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள். அவர்களால் ஆதார் அட்டைகளை காண்பிக்க முடியவில்லை, உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை, அவர்களின் முகவரி என்ன ? பொறுப்பாளர்கள் யார் யார் ? மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள், முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அவர்களால் தர முடியவில்லை, இதுதான் இன்றைக்கு எதார்த்தமான உண்மை. எனவே நாங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால், அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே ஆகும். சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் […]
கோவை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கிறது என்று நிலையில், தேசிய புலனாய்வு முகமை இதை ஆய்வு செய்கின்ற நிலையில், அதற்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்தியாகும். பாஜகவினருக்கு இது பெரிய வாய்ப்பு. இதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்வார்கள். இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாம் தொடர்பு படுத்த முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் நான் இதில் தொடர்பு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்ன தவம் செய்தோம் என்று நீங்கள் தலைப்பிட்டீர்கள் ? அதை படித்த போது எனக்கு வள்ளுவன் ஐயனின் குறள் நினைவுக்கு வந்தது, மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் – என திருக்குறளை குறிப்பிட்ட திருமா, அப்பாவுடைய கடமை என்ன ? மகனை அவைக்கு முந்தி இருப்பச் செயல். அதை செய்து முடித்து விட்டார். அவைக்கு முந்தியிருப்பேன் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி, இந்த தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வரை, தொடர்ந்து திராவிட கழக முன்னேற்ற கழகத்தோடு பற்றோடும், பாசத்தோடும் நெருக்கத்தோடு, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சகோதரனாக… தம்பியாக இருந்து, உற்ற துணையாக இருந்து, அறனாக இருக்கக்கூடிய தொல் திருமாவளவன் அவர்களுடைய விழா என்பது, உள்ளபடியே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் […]
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம், சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்ற கூடாது சொன்னதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், காவல்துறைக்கு கடிதம் எழுதி அனுப்பி இருக்காங்க. எனக்கு பாதுகாப்பு வேண்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த திருமாவளவன், பல இடங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற இயலாத […]
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி என்ற இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உடைய படத்தை வைத்து மலர் மாலை செலுத்துவதற்கு, அஞ்சலி செலுத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் முயன்றார்கள். காவல்துறையினர் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அனுமதி வழங்கி இருந்தால் இந்த பிரச்சனை பெரிதாக உருவெடுத்திருக்காது. பல இடங்களில் சாதிப் பிரச்சினைகள் எழுவதற்கு காவல்துறையின் அணுகுமுறைகளே காரணமாக உள்ளன.சேலம் ஓகுரில் அப்படித்தான் நடந்தது, அங்கே வேறு எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் உங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் வண்ணார், புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட கூடியவர்களாக உள்ளனர். அரசும் அவர்களை பொருட்படுத்துவதில்லை, காலம் காலமாக அவர்கள் ஊராரை நம்பி மட்டுமே வாழும் அவலம் தொடர்கிறது. அவர்களுக்கென குடியிருப்பு இல்லை, இறந்த பிறகு அடக்கம் செய்வதற்கான இடுகாடு அல்லது கல்லறையில் வசதி இல்லை, அனைத்துக்கும் பிற சமூகத்தினரை சார்ந்து வாழ வேண்டிய ஒரு நெருக்கடி உள்ளது. இந்த அவலத்தை பொதுவெளியில் மைய நீரோட்டத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற […]
திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக மக்களின் வறுமையைப் போக்குவதற்காக அவர் சிந்திக்கவில்லை. மக்களை கல்வி அடிப்படையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிந்திக்கவில்லை. மக்களிடையே ஒரு முற்போக்கான கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது. மக்கள் நல்லிணக்கத்தோடு மதம் ஜாதி, என்ற பிளவுகள் இல்லாமல், மோதல்கள் இல்லாமல், ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அல்ல அவர்களின் நோக்கம். மக்களிடையே இருக்கின்ற ஜாதி உணர்வையும், மத உணர்வையும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்திற்கு […]
திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், திரிபுராவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எண்ணற்ற பல வன்முறைகள். முதலில் இடதுசாரிகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், லெனின் சிலை தகர்க்கப்பட்டது, நாடு அமைதியாக இருந்தது. இவையெல்லாம் மிக மோசமான ஒரு கலாச்சாரம். ஆட்சிமாற்றம் ஏற்படுகின்ற போது அதிகாரத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்திலிருந்த ஆட்சியாளர்களின் அடையாளங்களை எல்லாம் அழித்து, ஒழிப்பது என்கின்ற முறையில் களமிறங்கினால் என்னவாகும். […]
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கேரளாவில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரையில் தண்ணீர் எட்டுவதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக அணையை திறந்து விட்டு இருக்கிறார்கள். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள். இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலந்துரையாட வேண்டும். இது குறித்ததமிழக அரசின் நிலைப்பாட்டை விவசாயிகளின் நலன்கருதி அதற்கான விவரத்தை அறிவிக்க வேண்டும் விடுதலை சிறுத்தை கட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. திமுக பொறுப்பேற்றதும் அதற்கான அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு வந்தது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அவசர அவசரமாக அரசியல் ஆதாயத்திற்காக அதிமுகவும், பாமகவும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று திடுதிப்பென்று முடிவெடுத்தார்கள், அறிவித்தார்கள். இது சட்டப்படி நாளைக்கு பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அன்றைக்கு விடுதலை சிறுத்தை […]
செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று அதிலே எனக்கு மிகவும் என்னை கவர்ந்தது நான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஊன்றுகோல் தந்தபோது நீதான் முதுகெலும்பு தந்தாய், இது வந்து அப்படியே சிலிர்க்கிறது உடம்பு, மெய் சிலிர்ப்பு அப்படி என்று சொல்வார்கள் இல்லையா அப்படி மெய்சிலிர்க்கிறது . அதாவது கூனிக்குறுகி இருப்பவர் கையில் ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறது ஒரு பெரிய […]
2024ல் பாஜக 400எம்.பிக்கு மேல வைத்து ஆட்சி அமைக்கப் போவது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 2024இல் மீண்டும் மோடி ஆட்சி வந்தால் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என திருமாவளவன் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2024ல் ரெண்டு விஷயம். காங்கிரஸ் கட்சி இருக்காது. காங்கிரஸ் என்ற கட்சி இருந்தால் தானே திருமாவளவன் கூட்டணி வைப்பார், காங்கிரஸ் இருக்காது. அதனால் திருமாவளவனுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். […]
போலீசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் வெற்றி என திருமாவளவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராடுவதே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான். போராட்டம் என்பதே அரசின் கவனத்திற்கு நம்முடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்வதற்காக தான், விளம்பரத்திற்காக அல்ல. அந்த வகையில் மோரூரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து மூன்று கட்ட போராட்டத்தை எனது தலைமையில் நடத்துவது என அறிவிப்பு செய்தேன். முதற்கட்டம் சென்னையில், இரண்டாவது சேலம், மூன்றாவது மதுரையில் என்று […]
மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும், இந்திய அளவில் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு. தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. கல்வி வணிக மயமாகி வருகிறது மற்றும் மாநில அரசுகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றுவதில் ஏற்ப்பட்ட மோதல் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திருப்பூர் பக்கத்திலிருந்து உள்ள கணியூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ஒரு நோட்டீஸ் கொடுத்து இருந்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கொடியை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் தீர்ப்பு இருந்தால் அது தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடைமுறைபடுத்த வேண்டும் அல்லது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் […]
விடுதலை சிறுத்தைகள் கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார். தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் விளக்கிய திருமாவளவன், அண்மையில் சேலம் மாவட்டம் காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்ற தடைவிதித்து நடந்த வன்முறை தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டோம். பல கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகளின் கொடியை பறக்க ஏன் அனுமதிக்கவில்லை என்று அந்த கிராமத்து […]
அதிமுக தீர்மானம் தான் நிறைவேற்றியதே தவிர மசோதாவை நிறைவேற்றவில்லை, திமுக சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார். நீட் தேர்வு நிலைப்பாடு குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இரட்டை நிலைப்பாடு இல்லை. ஒரு நம்பிக்கை மக்களுக்கு வந்து நீட் தேர்வால் இருக்கின்ற அச்சத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கருத்து. விடுதலைசிறுத்தைகளும் தான் சொல்லியிருக்கிறது நீட் கூடாது என்று ஆனால் எல்லாவற்றிலும் ஒரு முறை இருக்கிறது. சட்டத்தை நாம் மசோதாவை நிறைவேற்ற முடியும், […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவர் மறைந்து விட்டார் பாவம் அவரை பற்றி சொல்ல கூடாது. எத்தனை மேடைகளில் பார்த்து விடலாமா? மோதி விடலாமா ? நீ பண்டார பையன் என்பார். சாதியை சொல்லி திட்டுவது. ஏனென்றால் இவர் இப்படி உசுப்பேற்றுவது, மேடையில்…. மகனை மட்டும் முதலமைச்சராக காட்டுவது, அடுத்த முதலமைச்சர் என சொல்வது. ஆனால் காடுவெட்டி குருவை ரவுடியாக காட்டுவது. இன்றைக்கு அந்த சமூகத்தில் இளைஞர்களை […]
அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், சமீபத்தில் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு கொலைகள் சம்பவம் நடைபெற்றது. உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒன்று உயிர் .அந்த உயிரை எடுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. கொலை செய்யப்பட்ட அந்த இரு நபர்கள், அவர்களுக்கு குடும்பங்கள் […]
அரக்கோணம் கொலை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொல்லப்பட்டவர் எந்த கட்சிக்காரன் என்பது அல்ல, அவர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த குடிமகன். எங்கள் சாதியாக இருந்தால் தான் போராடுவோம், எங்கள் மொழியை பேசுபவனாக இருந்தால்தான் போராடுவோம், எங்கள் மதத்தை சார்ந்தவராக இருந்தால் தான் போராடுவோம், என்பது மாதிரி ஒரு அறியாமையை உருவாக்கவில்லை. உலகத்தில் எங்கு பாதிப்பு நேர்ந்தாலும், மனிதகுலத்திற்கு பாதிப்பு நேர்ந்தாலும் எவன் கொந்தளித்து எழுகிறானோ அவன்தான் உண்மையான புரட்சியாளன், அதனால் தான் […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எஸ்.சி என்று தெரிந்தாலே அவனை இழிவுபடுத்துவது, அவனை தாக்குவது.ஏன் இதுவரைக்கும் வேறு எந்த சமூகத்திலும் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்படுவது இல்லை. இந்தியா முழுவதும் குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பாக மட்டும்தான் இருக்கிறது. ஏன் இதுவரை எந்த பகையிலும் இன்னொரு சமூகத்தின் குடியிருப்பை இன்னொரு சமூகம் தீ வைத்தார்கள் என்று ஒரு சான்று கூட இல்லை. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்த கொலை என்பது திட்டமிட்ட படுகொலை. இது ஏனோ தானோ என்று ஆத்திரப்பட்ட ஒரு கும்பல் தெரியாமல் செய்துவிட்ட ஒரு கொலை அல்ல. ஒரு வேளை முதல் கொலை கூட… ஆத்திரத்தில் பண்ணிவிட்டான் என்று சொல்லலாம். அப்படி போதையில் இருப்பவன் கூட தெளிந்து ஐயையோ தப்பு செய்து விட்டோமே…. நாம் ஏதோ நினைத்து அடித்தோம் இறந்து விட்டானா… அப்படி என்று அவன் பதறுவான்,பதறி விட்டு ஓடுவான். ஆனால் […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், மதவாத சக்தியாக இருக்கிற பாஜக என்கிற ஒரு அமைப்பு, தமிழ்நாட்டுக்குள் கால் ஊன்றுவது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கே பேராபத்து விளையும் என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்டிய இயக்கம். வெறும் மொழி உணர்வும், இன உணர்வும் தமிழ் தேசியமாகாது. சனாதன எதிர்ப்புக்குள் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சனாதன எதிர்ப்புக்குள் தான் சமூகநீதி இருக்கிறது. சாதிவெறி, மதவெறி எதிர்ப்பில் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சாதிவெறி, மதவெறி, எதிர்ப்புக்குள் தான் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அரக்கோணம் இரட்டைக் கொலை ஏன் நடந்தது. ஊடகங்களில் திசை திருப்புகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள். சில தலித் இயக்கங்களும் கூட தவறான கருத்துக்களை முன் மொழிகிறார்கள். எப்பொழுதுமே அடிப்படை பிரச்சனை என்ன ? என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், முதன்மை பிரச்சினை என்ன ? என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய அடிப்படையான பிரச்சினை சாதிய வேறுபாடுகள், சாதியை முரண் பாடுகள், […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருமாவளவன், இதற்கு முதல்வர் எடப்பாடி அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென அக்கரை இருக்குமேயானால் இதை தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிற பொழுது மத்திய […]
மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இரண்டு மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை சைபர் குற்றப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகம் புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. இது சமூக நீதிக்கான யாத்திரை அல்ல, மொழி இன உரிமைகளை யாத்திரை அல்ல, வறுமையை ஒழிப்பதற்கான யாத்திரை அல்ல, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான யாத்திரை அல்ல, சமூக நல்லிணக்கத்துக்கான யாத்திரை […]
சிதம்பரத்தில் பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக வினர் இன்று குஷ்பு தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதே சமயத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் விடுதலை சிறுத்தை மகளிர் அணியும் போராட்டம் நடத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. இதனால் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் எந்தவிதமான போராட்டத்திற்கு அனுமதி இல்லை என […]
100ஆண்டுகளுக்கு பின்பும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி இழிவாக திருமாவளவன் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு திருமாவளவன் பேசியது திட்டமிட்டு தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகின்றது. அவர் மனுநூலில் உள்ளதையே பேசினார் என திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். இதனிடையே பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய […]
பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் பாரிமுனையை சேர்ந்த திரு. அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை திருமாவளவன் இந்து பெண்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை தூண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக திரு. அசுவத்தாமன் தனது […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெண்களை இழிவுபடுத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. கூட்டணி கட்சியான திமுக தலைவர் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்று சமூக தளங்கள் எல்லாம் கருத்துகள் வந்தன. இந்த நிலையில் தன்னுடைய ஆதரவை திருமாவளவனுக்கு […]