தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள். தேனி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதி மீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவியாளர் சிவகுமார் கூறியுள்ளதாவது, […]
Tag: விதிமுறை மீறல்
தெலுங்கானா மாநிலத்தில் விதியை மீறி சென்று அமைச்சரின் காருக்கு அபராதம் விதித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் கே டி ராமராவ். இவர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இவர் காரில் செல்லும் பொழுது போக்குவரத்து விதியை மீறி சென்றுள்ளார். காரை ராமராவின் கார் டிரைவர் ஓட்டியுள்ளார். இதை கவனித்த டிராபிக் கான்ஸ்டேபிள் வெங்கடேஷ்வரலு, சப்- இன்ஸ்பெக்டர் இளைய்யா ஆகியோர் அவரது காருக்கு அபராதம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 590 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் பலரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 38 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 450 […]
கனடாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு நீதிபதி 5,000 டாலர்கள் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதித்துள்ளார். கனடா வான்கூவரிலிருக்கும் ஒரு வீட்டிற்குள் காவல்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு மக்கள் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி மதுவை அருந்தியதோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணத்தில் பெண்களும் நடனம் ஆடியதை கண்டனர். இந்த நிலையில் வீட்டினுடைய உரிமையாளரான முஹம்மத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து முகம்மதினுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, அவர் அவருடைய வீட்டில் வைத்து பார்ட்டியை […]
திருமண நிகழ்ச்சியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 நபர்களுக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 33 நபர்கள் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் யார்க் மற்றும் வாட்டலு உள்ளடக்கிய பல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். […]