சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் 2023 ஆம் வருடத்திற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தி பட்டியலை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2023 செப்டம்பர் 18-ல் விநாயகர் சதுர்த்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி […]
Tag: விநாயகர் சதுர்த்தி
ஆந்திரா: திருப்பதி மாவட்டம், எம்மிராஜுலா கண்ட்ரிகா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் கலந்து கொண்டார். ஆனால் ஊர்வலம் முடிந்த பிறகு சிறுமி வீடு திரும்பவில்லை. சுமார் 3 மணி நேரம் கழித்து சிறுமி துணிகள் கிழிந்து உடலில் பல இடங்களில் ரத்தக்காயத்துடன் வீடு வந்து சேர்ந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கேட்டபோது தன்னை சிலர் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார். உடனே […]
திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள். பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். […]
பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரிடம் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கும் மு.க ஸ்டாலின் அவர்கள் எதற்காக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது தமிழர்களின் ஒரு மரபு. ஒரு குறிப்பிட்ட மரபினர் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. முதல்வர் […]
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒடிசாவில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப்பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையை […]
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊர்வலங்கள் வார இறுதியான செப்டம்பர் 3 மற்றும் நான்காம் தேதிகளில் கோலாகலமாக விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படவுள்ளன. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்று 1ரூபாய்,2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய், 500ரூபாய், 2000ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் […]
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழுதிப்பட்டி ஊராட்சியில் பாலதண்டாயுதமான சுவாமி திருக்கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கும், வைக்கப்பட்ட சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. இதேபோன்று மதுரை, தேனி, […]
விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை […]
இவ்வருடம் ரொம்பவே விசேஷமான யோகங்களையும் கொடுக்கக்கூடிய அற்புதமான விநாயகர் சதுர்த்தியாக வந்துள்ளது. 10 வருடங்களுக்கு முன் இந்த யோகம் இருந்தது உண்டு. அதே போல இவ்வருடம் ரவி யோகம் கூடிய நன்னாளாக விளங்குகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காலை 11.04 முதல் அன்றைய தினம் மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் […]
நாடு முழுவதும் இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அனைவரும் தங்களது வீடுகளில் விநாயகரை வைத்து வழிபடுவார்கள். அப்படி விநாயகரை வழிபட்ட பின்னர் அதனை நீரில் கரைப்பது வழக்கம். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்று விடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு களிமண்ணை கரைத்தால் அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமல் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளுடைய வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து […]
தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அதிகாரப்பூர்வ தளபதி விஜய் மக்கள் இயக்கம் ட்விட்டர் பக்கத்தில் […]
விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி(நாளை) விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடுவது அவசியம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும். முதன்மை தெய்வமாக விளங்கும் விநாயக பெருமானை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருள கூடியவர் கணபதி. விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் […]
பொங்கல், தீபாவளி உட்பட எதாவது பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.. இந்நிலையில்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும், பயணிகள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஈசனின் திருமகனாகவும், முருகப் பெருமானின் அண்ணனாகவும், அன்னை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும் சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்றிலும் கொண்டாடப்படும் விநாயக மூர்த்தி வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என […]
தமிழகத்தில் பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கும் […]
இந்திய முழுவதும் ஆகஸ்ட் 31ம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழுமையாக இறைச்சி விற்க மற்றும் இறைச்சிக்காக ஆடு கோழி போன்றவற்றை வெட்டத் தடை விதித்து பெங்களூரு பெருநகரக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தடை பெங்களூர் பெருநகரக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளன்றும் இதேபோன்று அங்கு இறைச்சி விற்பனை மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர்சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முந்தைய காலக்கட்டத்தில் இருந்து விநாயர் சிலையை வீட்டுக்கு வாங்கி வந்து வழிபடுவதன் மூலம் அழிக்கமுடியாத தீமைகளானது விலகிசென்று நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. நாம் சிலையை வீட்டுக்கு கொண்டுவரும்போது ஒருசில நடைமுறைகளை பின்பற்றவும். அதே நேரம் […]
நாளை மறுதனம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பிள்ளையார் சுழி உருவாகியதன் நோக்கம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் எசெய்யும் எந்த ஒரு மங்களகரமான செயலாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு தான் அந்த காரியத்தை தொடங்குவோம். விநாயகர் தன்னுடைய தாய் தந்தையர் ஆன உமையாள், உமையவளை துணையாகவும் முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக “உ” என்ற வார்த்தையை உருவாக்கியதாக கூறுவது உண்டு. முன்பு ஓலைச்சுவடிகளில் தான் முன்னோர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி […]
வாழ்க்கையில் வளத்தையும் செழிப்பையும் சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடிய இறைவன் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைத்து வழிபட உகந்த சில பழங்களையும், மலர்களையும் பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். விநாயகர் நம்முடைய கஷ்டங்களையும் கர்ம வினைகளையும் கலைப்பவராகவும் இன்னல்களை தீர்ப்பவராகவும் திகழ்கிறார். நம்மை அனைத்து கஷ்டங்களிலிருந்து பேணிக்காத்து வெற்றியை அள்ளித்தரும் விநாயகரை வழிபட கூடிய ஒரு சிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் […]
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர்சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் நம் சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் எவ்வாறு சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் விநாயகர்சதுர்த்தியை கொண்டாட முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவாக சந்தையில் கிடைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் (அல்லது) வேறு […]
இந்தியாவில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயக சதுர்த்தி விநாயகர் பிறந்தநாள் தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 10 நாட்கள் ஆடம்பரமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த 10 நாட்களில் விநாயகர் பெருமான் பூமியில் அருள்பாலித்து தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் ஞானத்தையும் செழிப்பையும் தருகிறார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து முதன்மை கடவுளாக […]
விநாயகர் சதுர்த்தி வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக எந்த ஒரு சுப காரியங்களையும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் விநாயகரை தான் வழிபட வேண்டும். விநாயகரின் வாகனம் எலி ஆகும். விநாயகப் பெருமானின் உருவமானது வலிமைமிக்க யானை தலை, உடைந்த தந்தம், பானை வயிறு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் விநாயகரின் ஒவ்வொரு சிறிய தனித்தன்மையும் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதற்கு பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாயத்தை தருகின்றது. ஆகையால் நீர்நிலைகளை […]
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது . அதன்படி , சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி. பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தல். சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் […]
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடுவற்காக மும்பையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மும்பைக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திரும்பி வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவிட கூடாது என்பதில் மும்பை மாநகராட்சி மிகவும் கவனமாக உள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே மும்பை மாநகராட்சிக்குள் வர வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து மும்பை […]
தடையை மீறி விநாயகர் சிலையை வைப்பதற்கு முயற்சி செய்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்தல், ஊர்வலம் எடுத்து செல்லுதல் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை மதிக்காமல் இந்து முன்னணியின் சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்வதாக அறிவித்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள […]
விநாயகர் சதுர்த்தியையொட்டி மார்க்கெட்டில் பூ விற்பனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வீட்டில் சிலை வைத்து வழிபட்டனர். இதனையடுத்து விநாயகர் சிலையை அலங்கரிப்பதற்கான பூக்களை தர்மபுரி மார்க்கெட்டில் பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி சென்றனர். அங்கு சாமந்தி, கனகாம்பரம், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டு […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்து செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசு நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து டெல்லியிலும் விநாயகர் சதுர்த்தி சிலை […]
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபடுமாறு அறிவித்துள்ளது.. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 261 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.. மத்திய ரயில்வேயில் 201, மேற்கு ரயில்வேயில் 42 கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படும் நேரம் வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை www.enquiry.indianrail.gov.in இல் அறியலாம்..
கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகையின் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட காரணத்தால். அங்கு கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் […]
அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தரும் போது, தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது வெளியில் விநாயகர் சிலையை வைத்து வழிபடக் கூடாது என்றும், வீட்டில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. கட்டுப்பாடுகளை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் விநாயகர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாஜக உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலைகளை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும், பொதுமக்கள் பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கடவுள் இல்லை என்று சொல்வோர் பேரவையில் கடவுள் பற்றியே விவாதித்து வருகின்றனர். நம்மை மொட்டையடிப்பதற்காகத்தான் மொட்டை போட இலவசம் என்று அறிவித்துள்ளார்கள்” […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவி விடக்கூடாது என்பதில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தியன்று பொதுவெளியில் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் […]
தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லா கொரோனா 3-ம் அலை […]
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைக்க சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சட்டசபையில் இன்று பாஜக எம்எல்ஏ காந்தி பேசும்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்ற வகையில் […]
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.. முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை பொது வழியில் வைத்து கொண்டாடக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து, வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்றும் அறிவுறுத்தியது.. ஆனால் இதற்கு பாஜக கட்டுப்பாடுகளை விதித்து பொது […]
மத்திய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை பொது வழியில் வைத்து கொண்டாடக்கூடாது என்று தடை விதித்து, வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்றும் அறிவுறுத்தியது.. ஆனால் இதற்கு பாஜக கட்டுப்பாடுகளை விதித்து பொது வெளியில் வழிபடலாம் என்று அரசு சொல்லி இருக்கலாம்.. ஆனால் கொண்டாட தடை விதித்தது ஏற்கத்தக்கதல்ல […]
விநாயகர் சிலை வைப்பதற்கு அரசு தடை விதித்ததால் வடமாநில தொழிலாளர்கள் சிலையை விற்பனை முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்தல், ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல் மற்றும் நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, அருகில் உள்ள நீரில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருடந்தோறும் இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு […]
தமிழக பாஜக அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு அதற்கு கட்டுப்பாடு […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்டிப்பாக நடைபெறும். விநாயகரை வைத்து அரசியல் செய்தால் அதே விநாயகர் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எழுவார் என்று ஆவேசமாக பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் […]
தமிழகத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் பொதுமக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே தடையை நீக்க கோரி கோவையில் இந்து முன்னணியினர் கோவில்களில் முறையிட்டு வேண்டுதல் செலுத்தினர். மேலும் தமிழக அரசு இன்னும் இதற்கு செவி சாய்க்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் […]
பொதுமக்கள் தங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஈரோடு மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது, கொரோனா தொற்றின் பாதிப்பை உணர்ந்து தமிழகத்தில் வருகின்ற 15-ஆம் தேதி வரை கொண்டாட இருக்கின்ற சமயவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் சிலை […]