முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தனி நபர்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், தங்களது […]
Tag: விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை பரவாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிகளை அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கடந்த 2ஆம் தேதி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கு மனு கொடுத்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே வழிகாட்டுதலுடன் விநாயகர் […]
நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்தநிலையில் ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு விநாயகசதுர்த்தி வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லா தடைகளையும் கடந்து, இது […]
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவின் யானைகள் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உதகை தெப்பக்காடு யானைகள் முகாமில் 25 கும்கி யானைகள் இரண்டு குட்டி யானைகள் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா நாளான இன்று அனைத்து யானைகளையும் மாயாற்றில் குளிக்க வைத்து அலங்கரித்த பாகங்கள் முகாமுக்கு அழைத்து வந்து வரிசையில் அணிவகுத்து நிறுத்தினர். கிருஷ்ணா, மசினி என்ற இரு கும்கி யானைகள் விநாயகர் கோவிலில் மணி அடித்தும் […]
வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை அறநிலையத் துறையினர் சேகரித்து வைத்து நீர்நிலைகளில் கரைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு பிறகு கோவில்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேர்த்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு கொடுத்துள்ளது. இது குறித்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும், அவற்றை தனிநபர்கள் கொண்டு சென்று நீர்நிலைகளில் […]
அரசு போடப்பட்டுள்ள சட்டத்தை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்தன. இருந்தாலும் கொரோனா பயம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கான தடை […]
முதலமைச்சர் பழனிசாமி, விநாயகர் சதுர்த்தி பூஜையை தமது இல்லத்தில் செய்து, வழிபாடு நடத்தினார். சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. அப்பூஜையில் களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் சேர்ந்து தனி மனித இடைவெளியை பின்பற்றி முதலமைச்சர் வழிபாடு செய்தார். மேலும் பூஜையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் முக கவசம் அணிந்திருந்தவாறு பூஜை […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கொண்டாடப்படும் பூஜை போன்று இந்த வருடம் கொண்டாடப்படவில்லை. மேலும் எப்பொழுதும் நடக்கும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல் கோவையில் கொரோனா வைரஸ் உருவத்தை விநாயகர் வதம் செய்வது […]
நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், “பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்தாலும், கொரோனா […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக தலைவர் வேல்முருகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியான இன்று பாஜக தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆனை முகம், குழந்தை சிரிப்பு, எல்லோருக்கும் எல்லா காலத்திலும் முடிந்ததை வைத்து வணங்க வைக்கும் கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர், மஞ்சளிலும் பிடிக்கலாம், சாணியிலும் பிடிக்கலாம். சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கம் பூூ மாலை சாத்தலாம், அருகம்புல் போடலாம் இப்படி எந்தவித் நியமம், […]
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் கடைகளில் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் . சென்னை புதுவண்ணாரப்பேட்டை சந்தைகளில், கடைகளில், வீட்டில் வைப்பதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அவல், பொரி, கடலை என விநாயகருக்கு படைக்கும் படைப்பு பொருள்களையும் வாங்கி சென்றதால் வியாபாரம் மிகவும் ஆரவாரத்துடன் நடக்கிறது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட்களிலும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை – தாம்பரம், […]
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாக வருடம்தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களால் அலங்கரித்து, முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, கொய்யாப்பழம் ஆகிய பொருட்களை வைத்து […]
மத்திய அரசு வழிகாட்டுதலின்படியும்,நீதிமன்ற உத்தரவின் படியும் மத ஊர்வலங்களை மேற்கொள்ளாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தார். அத்துடன் மேலும் அவர் கூறியதாவது: வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2609 காய்ச்சல் முகாம்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு நடத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3350 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]
ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை எதிர்த்து இந்து மத சார்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். காவல் துறையினர் விதித்த கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் கட்டாயம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து துறைசர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக […]
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்க வேண்டுமென எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு […]
விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை. விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக செயற்கை குளங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொதுமக்கள், மண்டல்களை அறிவுறுத்தி இருக்கிறது. இந்தநிலையில் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி செயற்கை குளங்களை அமைத்து உள்ளது. அதன்படி மும்பையில் 167 செயற்கை குளங்களை அமைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மாநகராட்சி செயற்கை குளம் […]
பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி பாஜகாவை சேர்ந்த வழக்கறிஞர் […]
கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் கொடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை […]
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், ஊர்வலத்தை நடத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும். பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து இந்து அமைப்புகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, சிலைகளை கரைப்பது குறித்து 17 இந்து அமைப்புகளுடன், தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் தற்போது கரோனா தொற்று […]