மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை ஆவார். இவர் துஜ்யத் ஜீவ ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சாங்லி கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹாலோண்டி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று கல்யாணியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக […]
Tag: விபத்தில் பலி
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டவர் என்.ஆர் இளங்கோ. திமுக மாநிலங்களவை எம்.பியுமான இளங்கோவின் மகன் ராகேஷ், கார் விபத்தில் பலியானார். புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் போது சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதில்அவர் மகனுடன் காரில் பயணம் செய்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது, பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் , பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக,இறுதிக்கட்ட வாக்கு பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து கட்சி அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்திலுள்ள ,ஆரியநாடு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ள ,சபரிநாதன் […]
உதவும் மனப்பான்மை கொண்ட சிறுமி விபத்தில் உயிர் இழந்ததால் அவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 10ஆம் தேதி பியூரி நகரில் 11 வயது சிறுமி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் சிறுமியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ராயல் மான்சிஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது […]