கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான […]
Tag: விபத்து
ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹீரோ சுஷில் மான், கார் விபத்தில் இருந்து பயங்கரமான தருணங்களை நினைவு கூர்ந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளான முழு சம்பவத்தையும் பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் விவரித்தார். டிசம்பர் 30ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் கூறினார். […]
வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் […]
டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், சொகுசு கார் மோதி தீப்பிடித்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு உதவிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகியோரை ஹரியானா ரோட்வேஸ் நேற்று கவுரவித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அந்த இடத்திலேயே உதவிய ஹரியானாவை சேர்ந்த இருவர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். விபத்து […]
கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, ரூர்க்கியில் ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த உடனேயே எடுக்கப்பட்ட ரிஷப் பந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். புத்தாண்டுக்காக தனது குடும்பத்துடன் இருப்பதற்காக டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் நேற்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விபத்துக்குள்ளானார், இதன் விளைவாக அவரது முகம், முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது, அவரது […]
நாமக்கல் பட்டாசு வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்திருக்க கூடிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். நாமக்கலில் நாட்டு வெடி பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.பட்டாசு பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், மனைவி பிரியா, தாய் செல்வி, பெரியக்காள் உள்ளிட்டோர் பலியாகியுள்ளனர்.
தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங் பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், “கவனமாக ஓட்டுங்கள்” என்று ஷிகர் தவான் ரிஷப் பந்திடம் 2019 இல் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் தனது குடும்பத்தினரை பார்க்க டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு பயணித்த போது பயங்கர கார் விபத்தில் சிக்கியது. அவர் தனது பென்ஸ் (Mercedes GLE coupe) காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது அது டிவைடரில் மோதியது மற்றும் அதிவேகமாக சாலையில் […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, “பிரார்த்தனை” என்ற தலைப்புடன் வெள்ளை ஆடை அணிந்த ஒரு ரகசிய புகைப்படத்தை வெளியிட்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பென்ஸ் காரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்டுக்கு இன்று அதிகாலை செல்லும் போது விபத்தில் சிக்கினார். ரூர்க்கி செல்லும் வழியில் ஹம்மத்பூர் ஜாலுக்கு அருகில் உள்ள ரூர்க்கியின் நர்சன் எல்லையில் டிவைடரில் அவரது கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த […]
ரிஷப் பண்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷபண்டின் உடல்நிலை சீராக உள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். தாக்க காயங்களுக்கு அவர் சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ரவுமா சென்டரில் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டார். ரிஷப்பின் […]
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]
நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]
கர்நாடகாவில் கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கொரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். மேலும் கொரியர் […]
செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]
தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து […]
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், திடீரென்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால், காரின் உள்ளே இருந்த 10 வயது சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியபோது இந்த துயரம் நடந்துள்ளது.
லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் முட்டாஞ்செட்டி சாலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பிரியா, தங்கராஜன், சந்திரா, தினேஷ்குமார், சுதா, பிரீத்தி, ராஜம்மாள், சரோஜா, செண்பகம், ரேவதி, கவிதா உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை […]
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ பிடித்தது. ஆனால் நள்ளிரவு நேரம் என்ற காரணத்தினால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் […]
தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் கடலூர் மாவட்டம் அருகே வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த டெம்போ வேனில் பயணித்த 9 பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி […]
துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]
மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]
தேனி மாவட்டம் குமுளி மலைப்பகுதியில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடிந்து விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த காயத்துடன் குழந்தை உட்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]
தேனி மாவட்டம் குமுளி அருகே ஏற்பட்ட விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து தற்போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் […]
வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ராயர்பாளையம் பகுதிகள் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஸ் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது தாஸ் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் காங்கயத்தில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென கார் மீது மோதியது. இந்த […]
தூத்துக்குடி அருகே புல்லாவெளியில் கார் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது லாரி மோதியதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி சென்ற பால் முத்து பிரபு (39) பாண்டியம்மாள் தேவி (69) சற்குண லில்லி (37) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. […]
மணிப்பூரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், 20 மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் […]
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இது மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியதில் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் விமானம் நிலை தடுமாறியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின் இயல்பு நிலை திரும்பியவுடன் விமானம் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து பயணம் செய்தது. இதனையடுத்து ஹூஸ்டன் […]
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் கூப்பும் என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகார்வப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படாத நிலையில், […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கிக் […]
பிரபல நாட்டில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2 பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து […]
சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும். மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம் ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது […]
தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிக அளவில் […]
பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]
தஞ்சாவூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு முக்கிய திமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் என்பதும் மற்றொருவர் திமுக நகரச் செயலாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் […]
மராட்டிய மாநிலத்தின் கிழக்கு விரார் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அதன் உரிமையாளர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் ஒரு சில நிமிடங்களில் அது கருகிப்போனது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாரும் அருகே இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதற்குள் […]
பிரபல நாட்டில் விமானம் ஓடு பாதையில் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று போர் விமானம் ஒன்று தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடு பாதையில் விமானம் மோதியது. இதனையடுத்து விமானி உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு […]
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் தமிழக அரசு சொகுசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று காலை திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]
சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.