Categories
உலக செய்திகள்

போக்குவரத்து சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் சிறிய வகை விமானம் ஒன்று, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் திடீரென்று ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு விமானம் புறப்படும் போது எரிபொருள் போன்றவை குறித்து உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் உயிர் பிழைத்த… 5-ஆவது நாளில்…. விமானி-துணை விமானி திருமணம்..!!!

அமெரிக்க நாட்டில் விமான விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்து, பயணிகளை காப்பாற்றிய விமானி மற்றும் துணை விமானிக்கு திருமணம் நடந்திருக்கிறது. வாஷிங்டனில் வசிக்கும் அலீன் கிங் மற்றும் ரோசினா ஆகிய இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. விமானிகளான இருவரும் கடந்த 20-ஆம் தேதி அன்று சிறிய வகை விமானத்தில் பயணித்தனர். அப்போது, நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பதறிப்போன இருவரும் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று நினைத்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற விவாகரத்து பெற்ற தம்பதி…. குழந்தைகளோடு விமான விபத்தில் பலியான பரிதாபம்…!!!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்திய தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் என்னும் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். தற்போது, அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி-வைபவி பண்டேகர் என்ற தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்துக்குப் பின் வருடந்தோறும் 10 நாட்கள் தம்பதியர் இருவரும் குழந்தைகளோடு ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம்… 14 பேரின் சடலங்கள் மீட்பு…!!!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருக்கும் போகாரா என்னும் நகரத்திலிருந்து 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமானமானது, சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த 4 நபர்களும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேபாள ராணுவத்தினர் விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து விமானம் சனோஸ்வெர் என்னும் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் விபத்துக்குள்ளான விமானம்…. குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளாகி 5 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கிரெனோபில் என்னும் நகரத்திற்கு அருகில் இருக்கும் வெர்சௌட் விமான நிலையத்திலிருந்து 5 நபர்களுடன் ஒரு சுற்றுலா விமானம் சென்றிருக்கிறது. அதனைத்  தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அந்த விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. எனவே உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் 60 பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, அங்கு குழந்தை […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் மோதி வெடித்து சிதறிய விமானம்…. மொத்த பயணிகளும் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்காவில் ஒரு விமானம் தொழிற்சாலையின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு அனைத்து பயணிகளும் மொத்தமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் இருக்கும் ஜெனரல் மில்ஸ் தொழிற்சாலையின் மீது கோவிங்டன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து சென்ற சிறிய வகை விமானம் மோதியது. இந்த விபத்து இரவு 7:05 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று விமானத்தில் பழுது ஏற்பட்டதால் ஆலை மீது மோதி சிதறிவிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளும் […]

Categories
உலக செய்திகள்

துணை விமானி தான் காரணம்?…. சீனாவில் நடந்த கோர சம்பவம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த மார்ச் 21-ஆம் தேதி “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று சீனாவின் குன்மிங் நகரிலிருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த விமானத்தில் கிட்டத்தட்ட 9 பணியாளர்கள், 123 பயணிகள் என மொத்தம் 132 பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து சீனாவில் உள்ள வுசோ என்ற நகரின் அருகே மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 132 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் பறிபோன 95 உயிர்…. இவங்கதான் காரணம்…. மீண்டும் குற்றசாட்டு வைத்த போலந்து…..!!!!!

போலந்துஅதிபா் லெக் கச்சின்ஸ்கி மற்றும் பாதுகாப்புப்படையினா் உட்பட 95 போ் இறந்த விமான விபத்திற்கு ரஷ்யாதான் காரணம் என்று அந்நாடு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. போலந்து நாட்டின் பெண் அதிபா் லெக் கச்சின்ஸ்கி உட்பட 95 போ் சென்ற சோவியத் தயாரிப்பு விமானம் கடந்த 2010, ஏப்ரல் 10ம் தேதி ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிபா் உட்பட அனைவரும் உயிரிழந்தனா். இச்சம்பவத்துக்கு ரஷ்யாவின் சதிச்செயல்தான் காரணம் என்று போலந்து முன்பே குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவில் பயங்கரம்…. ஒன்றோடொன்று மோதிய பயிற்சி விமானங்கள்… 3 விமானிகள் பலி…!!!

தென்கொரிய நாட்டில் பயிற்சி விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் விமானிகள் மூவர் பலியாகியுள்ளனர். தென்கொரிய நாட்டின் சச்சியோன் நகரத்தில் இருக்கும் விமானதளத்திற்கு அருகே இரு பயிற்சி விமானங்கள் நடுவானத்தில் ஒன்றின் மீது ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் விமானிகள் மூவர் பலியானதோடு ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் விமான படை, தற்போது வரை உயிர்பலிகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் கூறவில்லை. தற்போது, தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். மீட்பு பணிகள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்… மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. 132 பயணிகள் பலி…!!!

சீன நாட்டில் 132 பேருடன் சென்ற போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்குரிய போயிங் 737 விமானம் குன்மிங்  நகரத்திலிருந்து குவாங்சு நகரத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், விமான ஊழியர்களுடன் சேர்த்து சுமார் 132 பேர் இருந்தார்கள். விமானம், ஷூவாங் மாகாணத்தின் வுசோ  நகருக்கு அருகே இருக்கும் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று விமானம் மலையில் மோதி, விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து பயங்கர […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. கேள்விக்குறியான பயணிகள் நிலை…!!!

சீன நாட்டில் சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய போயிங் 737 வகை விமானமானது குன்மிங் நகரத்திலிருந்து வுஜோ நகரத்திற்கு சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்டு சென்றிருக்கிறது. விமானம் குவாங்சி என்ற மாகாணத்தின் மலைப்பகுதியில் சென்ற சமயத்தில் திடீரென்று மலை மீது மோதியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் விமான விபத்து… பயிற்சி விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட  இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் இன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயிற்சியாளர் உட்பட 2 விமானிகள் உயிரிழந்து உள்ளனர்.   பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 என்ற விமானமானது ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லா என்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானமானது ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் என்ற அகாடமிக்கு சொந்தமானது […]

Categories
உலக செய்திகள்

தீடீரென தீப்பிடித்த விமானம் …. 2 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீஸார்….

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா  பகுதியை கோரியாகி  எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே ஆன் ,2 எனும் ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று பறந்து சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது.  இச்சம்பவத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என கவர்னர் விளாடிமிர் சோலோடோவ்  கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ…! தீ பிடிக்குது…. காப்பாத்துங்க…. காப்பாத்துங்க… பிரான்ஸ் நடுவானில் பரபரப்பு …!!

பிரான்ஸ்  நாட்டில்  நடுவானில் சென்று  கொண்டிருந்த  விமானம்  தீப்பிடித்து  விமானி  பத்திரமாக தரை இறக்கினர் .   ஜனவரி 21 ஆம் தேதி அன்று பாரிஸிலிருந்து பிரான்சில் பெர்பிஞன்   என்னும் இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது.   நடுவானில்   சென்று   கொண்டிருந்தபோது  திடீரென அதன் இஞ்சின்களில் ஒன்று வெடித்தது. இதனால் 2 மீட்டர் உயரத்திற்கு இறக்கையில் அடியில் தீப்பிடித்து எரிவதை கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தை  விமானி  தரை […]

Categories
உலக செய்திகள்

“பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி!” பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில்  லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக […]

Categories
உலக செய்திகள்

“4 பேர் உயிரிழந்த சிறிய விமான விபத்து!”.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சிறுமி..!!

அமெரிக்காவில் பீவர் தீவில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். மிச்சிகன் ஏரியில் சிறிய வகை விமானம், விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 11 வயது சிறுமி தற்போது மீட்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு நபர் மற்றும் சிறுமியை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி மட்டும் உயிர் பிழைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மிச்சிகனில் […]

Categories
உலக செய்திகள்

“மிக்சிகனில் விபத்துக்குள்ளான விமானம்!”.. 4 பயணிகள் பலியான பரிதாபம்..!!

மிச்சிகனில் இருக்கும் பீவர் தீவில் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பயணிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனின் உள்ள மேக்கினாவ் என்ற நகரத்திற்கு மேற்கில் இருக்கும் பீவர் தீவின் விமான நிலையத்தில் இரண்டு எஞ்சின்கள் உடைய ஒரு விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இந்த  விமானத்தில் 5 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 4 நபர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பான அடையாளங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை என்று கிரேட் லேக்ஸ் பிராந்திய கடலோர காவல் […]

Categories
உலக செய்திகள்

நாங்க இழப்பீடு வழங்க தயார்..! 2019-ல் நடந்த விமான விபத்து… பிரபல நிறுவனம் ஒப்புதல்..!!

போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தியேப்பியன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் வகை விமானம் கடந்த 2019-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் விமான விபத்தில் உயிரிழந்த 157 நபர்களுடைய குடும்பத்தினருக்கு போயிங் நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் முக்கிய பிரபல பாடகி மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!

பிரேசிலில் நடந்த விமான விபத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகி மரிலியா மென்டோன்கா(26) உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பாடல் தொகுப்புக்காக மரிலியா, தயாரிப்பாளர் மற்றும் உதவியாளருடன் இலகு ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் அருவி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவர்கள் 3 பேர் மற்றும் விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் செய்தால்…. விமான விபத்திலிருந்து தப்பலாம்…. விமானியின் முக்கிய அறிவுரை….!!

விமான விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த தந்திரத்தை விமானி ஒருவர் பகிர்ந்துள்ளார். பொதுவாக, விமானம் விபத்துக்குள்ளானால்  உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தோன்றினாலும் 95 சதவீத விபத்துகளில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், கடந்த வாரம் அமெரிக்காவில் Houston Executive ஏர்போர்ட்டில் இருந்து 20 பணியாளர்கள் மற்றும் பயணிகளுடன் சென்ற MD-80 ரக சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. இதனால் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் மாயம்.. தேடுதல் பணியில் பாதுகாப்பு குழுவினர்..!!

லெபனான் நாட்டில் ஒரு சிறிய வகை விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லெபனான் ஏவியேஷன் கிளப்பிற்கு உரிய ஒரு சிறிய வகை விமானமானது, மத்திய தரைக்கடலில்  விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருவர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிவில் பாதுகாப்பு குழுவினர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாயமான விமானம் மற்றும் அதில் பயணம் மேற்கொண்டவர்களை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சரான, Bassam Mawlawi கூறியிருக்கிறார். எனினும், […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி மருத்துவர்…. விமான விபத்தில் பலி…. தகவல் வெளியிட்ட பிரபல ஊடகம்….!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க நாட்டில் சிறியவகை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவா் உட்பட 2 போ் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனம் கூரியதாவது, “சுகதா தாஸ் என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆவர். அரிஸோனா மாகாணத்தின் யூமா மண்டல மருத்துவ மையத்தில் இருதய நோய் நிபுணராக சுகதா தாஸ் பணியாற்றி வந்தார். […]

Categories
உலக செய்திகள்

வீடுகளின் மேல் விழுந்த விமானம்…. 2 பேர் பலி…. தீவிர விசாரணையில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்….!!

விமானம் வீடுகளின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி-340 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானமானது சான் டியாகோ நகரின் வடகிழக்கில் இருந்து சுமார் 20 மைல்கள் அப்பால் புறநகர் பகுதியில் 2 வீடுகளின் மேல் விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

தீப்பற்றி எரிந்த விமானம்…. 4 பேர் பலியான சோகம்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

அமெரிக்காவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் அட்லாண்டா நகரில் உள்ள சாம்பிலீ கவுன்டி என்ற பகுதியில் தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மேலும் தீயை அணைக்கும் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி விமான விபத்தின்…. வீடியோ காட்சி வெளியீடு…. விசாரணையில் தேசிய விமான பாதுகாப்பு நிறுவனம்….!!

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற விமான விபத்து குறித்த வீடியோ விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக பி.சி-12 விமானமானது லிணட் விமான நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்கு சார்டிநியா தீவுகளில் உள்ள ஆல்பியா விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே முழுவதுமாக தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக மிலன் நகரின் அருகில் San Donato Milanese சுரங்கப்பாதை நிலையம் உள்ளது. இந்த பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

சுப நிகழ்ச்சிக்காக ஒன்றிணைந்த 2 குடும்பம்… எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

குழந்தையின் ஞானஸ்நான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்ற இரண்டு குடும்பங்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோமேனியாவின் செல்வந்தர்களில் ஒருவரும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரருமான Dan Petrescu (68), அவரது மகன் Dan Stefano (30), அவரது மனைவி Dorotea Petrescu Balzat (65) உள்ளிட்டோர், இத்தாலியை சேர்ந்தவரும் Petrescu-வின் நண்பருமான Filippo Nascimbene (32)-ன் மகனான Rafael-ன் ஞானஸ்நான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு வருகை தந்துள்ளனர். மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமான முறையில்…. காதலை வெளிப்படுத்த ஏற்பாடு …. விமான விபத்தில் பலியான சோகம்….!!

காதலியிடம் தன் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த சென்ற இளைஞர் விமான விபத்த்தில் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலை பலவிதமான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கனேடியர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று இரவு சிறிய ரக விமானம் மூலம், ‘will you marry me’ என்று எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டபடி  புறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் உயிரிழப்பு.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில் ஒரு சிறிய விமானம், அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட, 8 நபர்கள் ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமானம், இத்தாலியில் உள்ள மிலன் புறநகர்ப் பகுதியில் இருக்கும்  அடுக்குமாடி கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/03/8443588801733243586/636x382_MP4_8443588801733243586.mp4 இந்த விபத்தில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… உயரே பறக்க தொடங்கிய விமானம்… அரைமணி நேரத்திற்குள் நேர்ந்த சோகம்..!!

கனடாவில் விமான விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று மான்ட்ரியல் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விமானம் உயர பறக்க தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் அந்த செஸ்னா 172 என்ற விமானத்தில் இருவர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மற்றொருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்திற்கான காரணம் […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானம்…. கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள்…. 6 பேர் பலியான சோகம்..!!

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ள தகவலை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ரஷ்யா நாட்டில் கப்ரோவ்ஸ்க் நகரில் ஆன்டனோவ் ஆன் -26 ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மாயமானது. இந்த நிலையில் கபரோவ்ஸ்க் நகருக்கு அருகில் ஸ்பார்டக் ஸ்கை என்ற ரிசார்ட்டுக்கு பக்கத்தில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 70க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கோர விபத்து!”.. பயிற்சி விமானம் எரிந்து சாம்பலானது!..!!

பாகிஸ்தான் நாட்டின் விமானப்படைக்குரிய பயிற்சி விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்ற மாகாணத்தில் இருக்கும் Mardan என்னும் நகரில் வழக்கமாக நடைபெறும் பயிற்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, விமானப்படைக்குரிய பயிற்சி விமானமானது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்துள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானின் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், விபத்து நேர என்ன காரணம்? என்பது தொடர்பில் விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

துண்டிக்கப்பட்ட தொடர்பு…. விபத்துக்குள்ளான சரக்கு விமானம்…. மீட்பு பணி தீவிரம்….!!

கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பப்புவா மாகாணத்தில் நாப்ரே மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து இன்டன்ஜயாவிற்கு கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு விமானம் ஒன்று கடந்த புதன்கிழமை அன்று சென்றுள்ளது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த விமானம் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் சிக்கிய பயணிகள்…. தீவிர பணியில் மீட்பு குழு…. 4 பேர் பலியான சோகம்….!!

விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் தலைநகரான இர்குட்ஸ்க் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் எல்-410 வகை விமானம் ஒன்று தரை இறங்கும் பொழுது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் விபத்துக்குள்ளான விமானம்.. பயணித்த மூவரும் உயிரிழந்த சோகம்..!!

பிரான்ஸ் நாட்டில், ஒரு சிறிய வகை விமானம் விபத்தானதில், விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Nancy என்ற நகரத்திலிருந்து, நேற்று ஒரு சிறிய வகை விமானம், Essonne நகருக்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது, Dijon பகுதிக்கு சென்ற விமானம், எதிர்பாராத விதமாக  விபத்துக்குள்ளானது. எனவே, விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துவிட்டது. விசாரணையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். காலநிலை மோசமடைந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பரவிய காட்டுத்தீ.. அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.. 8 பேர் உயிரிழப்பு..!!

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களுக்குப் பிறகு… இறந்தவர் உயிருடன் வந்த அதிர்ச்சி… வெளியான புகைப்படக் காட்சி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர் ஒருவர் 45 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்த சஜ்ஜத் டங்கல் என்பவர் தனது 25 வயதில் நடிகை ராணி சந்திரா குழுவுடன் சேர்ந்து கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

எப்படி இங்க விழுந்துச்சு…. தீயை அணைத்த வீரர்கள்…. நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு….!!

சிறய வகை விமானம் வீட்டின் மேல் விழுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில்  கொலம்பியா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிய வகை விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனையடுத்து விமானமானது அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. வீட்டுக் கூரை மீது மோதி விபத்து….!!

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில்  Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி  விழுந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து  விமானம் விழுந்ததும் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…. கட்டுப்பாட்டை இழந்த விமானம்…தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சிறிய ரக விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒரேப்ரோ நகரத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு விமானி மற்றும் 8 ஸ்கை டைவிங் வீரர்கள் பயணித்துள்ளனர். இதனையடுத்து அந்த  விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான விமானம்.. தீயில் கருகி பலியான பயணிகள்..!!

ஸ்வீடன் நாட்டில்,  விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பயணிகள் மொத்தமாக பலியாகியுள்ளனர். ஸ்வீடனின் உள்ள Orebro என்ற நகரத்துக்கு வெளியில் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அதாவது, விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், ஓடுதளத்திற்கு அருகில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீ கோளமாக மாறியது. இதில் விமானத்தின் பயணி மற்றும் பயிற்சி மேற்கொண்ட ஸ்கைடைவர்கள் எட்டு பேர் தீயில் கருகி பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்…. விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு….!!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பயணத்தின் போது ஏற்பட்ட பழுது என்ன என்பதை கண்டறிய இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் சூலு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சி-130 வகையைச் சேர்ந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 46 ராணுவ வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். இதனிடையே கடந்த திங்கட்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்பு பெட்டி ஒன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பெட்டியின் மூலம் விமானிகளின் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்கள் பயணித்த விமானம் ….. தரையிறங்கும் போது நடந்த கோர விபத்து …. பதறவைக்கும் வீடியோ ….!!!

ராணுவ விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்சில் உள்ள sulu மாகாணத்தில் Cagayan de Oro என்ற  பகுதியிலிருந்து 85 ராணுவ வீரர்கள் உட்பட 92 பேருடன்  C130 என்ற ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது . அப்போது  Jolo விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து  Patikul என்ற நகரில் உள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்…. 2 பேர் உயிரிழப்பு….!!

விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சக்சஸ் மாகாணத்திலுள்ள குட்வுட் ஏர்ஃபீல்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த 2 நபர்களும் உயிரிழந்தனர். அதில் ஒருவர் Bulls Cross மற்றும் மற்றொருவர் Gosport […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது இப்படி ஆயிருச்சு…. நிலை தடுமாறிய விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

சிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில்  மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  5 பேர் படுகாயமடைந்தனர்.

Categories
உலக செய்திகள்

உணவகத்தின் அருகில் வெடித்து சிதறிய விமானம்.. உறவினரை காணச்சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies  பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து […]

Categories
உலக செய்திகள்

“கட்டுபாட்டை இழந்த ராணுவ விமானம்” …. “சிறுவன் உட்பட இருவர் தப்பி பிழைத்த அதிசயம்”…! “பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம்”….!!!

 ராணுவ விமான விபத்தில் சிக்கி  12 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   மியான்மரில் ராணுவ விமானம் 14  பயணிகளுடன்  பின் ஓ லிவின் என்ற இடத்திற்கு  புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அனிசகன்  என்ற பகுதியில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில்  விமானத்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் உட்பட […]

Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல நடிகர் விமான விபத்தில் மரணம்… Shocking…!!!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக நடித்திருந்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவில் டென்னசி என்ற விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறியரக விமானம் ஒன்றில் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் பயணித்தனர். இவருடன் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி […]

Categories
உலக செய்திகள்

இராணுவ அணிவகுப்பின் போது விமான விபத்து.. விமானி உயிரிழந்த பரிதாபம்..!!

லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில், விமான விபத்து ஏற்பட்டு, விமானி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    Benghazi நகரத்தில் லிபியன் தேசிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் மிக்-21 என்ற போர் விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஜமமால் இப்னு அமர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லிபியன் தேசிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் Khalifa al-Obeidi, விமானியின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். https://twitter.com/Libya_OSINT/status/1398733024754376709 லிபியன் தேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான அகமது […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! திடீரென ஏற்பட்ட விபரீதம்… நைஜீரியாவில் சோகம்..!!

நைஜீரியாவில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் அபுஜாவிலிருந்து கடுனாவுக்கு புறப்பட்ட போது கடுனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக நைஜீரிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமான குழுவினர், நைஜீரிய ராணுவ தளபதி இப்ராஹிம் அட்டத்திரு உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நைஜீரிய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அந்த விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் எதுவும் தெரியாததால் ராணுவம் தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம்.. கனடா அரசின் சலுகை.. ஏமாற்றமடைந்த பெண்..!!

ஈரானிலிருந்து கனடா சென்ற ஒரு விமானம், கடந்த 2020 ஆம் வருடம் சுடப்பட்ட நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா புதிய சலுகையை அறிவித்துள்ளது.  கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில், ஈரானிலிருந்து கனடா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் கனடா அரசு, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த கனடா மக்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதே விமான விபத்தில் பலியான Mansour Esnaashary Esfahani […]

Categories

Tech |