கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகிய விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெறுகிறது. இவற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல்நடால், அமெரிக்க நாட்டின் டெய்லர் பிட்சுடன் மோதினார். ஆரம்பம் முதலே இரண்டு பேரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதன்காரணமாக முதல், 3-வது செட்டை டெய்லர்மற்றும் 2-வது, 4-வது செட்டை நடால் கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 5-வது செட்டை நடால் வென்றுள்ளார். முடிவில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற […]
Tag: விம்பிள்டன் டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரேட்டினியை வீழ்த்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினியை எதிர்கொண்டார். இந்த போட்டி கிட்டத்தட்ட 3 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 6-7,6-4,6-4 6-3 […]
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, கரோலின பிளிஸ்கோவா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் […]
விம்பிள்டன் டென்னிசில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் இந்திய ஜோடி சானியா, போபண்ணா வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனை சேர்ந்த எமிலி வெப்லி – ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனையான சினி கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு […]
லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் , பிரான்ஸ் நாட்டு வீரரான காஸ்குட்டுடன் மோதி ,7-6, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெடரர், 3-வது […]
லண்டனில் நடைபெற உள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் விலகியுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகின்ற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் உலகின் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவை சேர்ந்த டோமினிக் திம் விலகியுள்ளார். இவருக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீள மேலும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், இந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவர் […]
உலகின் 2 ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். உலகின் 2 ம் நிலை வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த நவமி ஒசாகா 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அப்போது செய்தியாளர் சந்திப்பை மறுத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும் இதில் இருந்து மீள்வதற்கு […]