இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை அலிஸ் கார்னெட் மற்றும் போலந்து நாட்டின் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஸ்வியாடெக் 37 வெற்றிகள் பெற்றிருந்தார். மேலும் அலீஸ் கார்னெட் 4-வது சுறறுக்கு முன்னேறி உள்ளதால் ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
Tag: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றாகிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியானது லண்டன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15வது வரிசையிலுள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24 ஆம் நிலை வீராங்கனையான எலிஸ்மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற 3வது சுற்றுப்போட்டிகளில் 3-வது வரிசையில் உள்ள ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) போன்றோர் வெற்றி பெற்றனர். 5 […]
உக்ரைனில் ரஷ்ய தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க, இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டேனிஸ் மெத்வதேவ், ஆண்ட்ரி ரூப்ளேவ் ஆகியோர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியானது, ஜூன் மாதம் 27 முதல் ஜூலை மாதம் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிக், 20- வது நிலையில் இருக்கும் சிலி வீரர் கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி 6-2, 6-4, […]
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையருக்கான முதல் சுற்றில் இந்திய ஜோடி போபண்ணா, சானியா ஜோடி அபார வெற்றி பெற்றது . ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையருக்கான பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஜோடி சக இந்திய ஜோடியான ராம்குமார் , அங்கீதா ரெய்னாவுடன் மோதியது. இதில் குறிப்பாக கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரு […]
காயத்தால் மன்னாரினோ விலகியதால் ,ரோஜர் பெடரர் 2 வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீரரான அட்ரியன் மனாரினோவுடன் மோதினர் . இதில் இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் வீரர் […]
முதல் சுற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார் . கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.இதில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]