சாலையோர கடைகளை அமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவில் அருகே மற்றும் நெடுஞ்சாலை அருகே சாலைகளை ஆக்கிரமித்து 37 சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர். தற்போது கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் மீண்டும் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் […]
Tag: வியாபாரிகள் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் நகைக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியது முதல் நகைக்கடைகள் திறக்க அனுமதி […]
கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபார சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்