ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார். […]
Tag: வியாபாரிகள் சங்கம்
நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் […]
கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொடர் மழை மற்றும் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் காய்கறிகளின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் முடிந்தும் காய்கறிகளின் விலை குறைவு என எதிர்பார்த்த நிலையில் கடந்த சில தினங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயம் தக்காளி கேரட் பீட்ரூட் பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. கர்நாடகா […]