ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ராஜபாளையத்தில் நேற்று இரவு […]
Tag: வியாபாரிகள் வேதனை
ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பழம் மற்றும் பூ கடைகள் தனியாக பிரித்து தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழம் வியாபாரம் அதிகம் நடைபெறும் என […]
சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு குறு சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இல்லங்கள் அலுவலகங்களில் மலர்கள், பழம் வகைகள், வாழை கன்று, மாவிலைத் தோரணம், மஞ்சள் கிழங்கு, அவல், பொரி என இறைவனுக்கு படைப்பது வழக்கம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் கோயம்பேடு சந்தையையே அதிகம் நாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் […]
காஞ்சிபுரத்தில் புரட்டாசி 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இன்று புரட்டாசி மாதம் 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடுவதை ஒட்டி ஓசூர் கிருஷ்ணகிரியில் இருந்து சாமந்தி பூக்களை விவசாயிகள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்திருந்தனர். பூக்கள் அதிக விளைச்சல் காரணமாக அதிக அளவில் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டிற்க்கு வந்ததால் சாமந்தி பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ 40 […]