Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பவுர்ணமியை முன்னிட்டு” திரண்டு வந்த பக்தர்கள்…. அருள்காட்சி அளித்த சுந்தர மகாலிங்கம்….!!

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோவில் அமைந்திருக்கின்றது. அந்த கோவிலுக்கு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு திரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீண்டும் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் வலியுறுத்தல்….!!

ஊரடங்கிற்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் உழவர் சந்தை செயல்பட தொடங்கி இருக்கின்றது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இவ்வாறு உழவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதை தவிர்க்க வேண்டும்…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்த்தல், மின்சார, மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரியில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

லாரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மலை மன்னன் மீது வழக்குப்பதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஆடி மாத திருவிழா” கலந்துகொண்ட பக்தர்கள்…. சிறப்பு அலங்காரத்துடன் அம்மன்….!!

அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருக்கின்றது. அதேபோன்று இந்த வருடம் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து பெரும்பாலான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து வந்த கஷ்டம்…. பட்டாசு வியாபாரியின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் காமராஜர் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசுகளை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் ரவிச்சந்திரன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு குருணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கல் கிடங்கு நீரில் மூழ்கி குளித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கே.மடத்துப்பட்டி ராஜீவ்காலனியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவகாசி அருகில் எம்.துரைச்சாமிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு இறுதிச்சடங்கில் கலந்து விட்டு பின் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மணியம்பட்டி கல் கிடங்கு அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் குளித்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் மகன் ஞானகுருசாமி திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 156 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 156 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் மருத்துவர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா போன்றோர் அடங்கிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது ரொம்ப தப்பு…. வசமா சிக்கிய 5 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மேட்டுத் தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், விஜயன், கணேசன், முரளி, மூக்காண்டி போன்ற 5 பேரும் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்து 350 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பரவலாக பெய்த மழை…. யாரும் பறிக்க முடியாது…. முகாமிட்டு இருக்கும் பறவைகள்….!!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை ஆரஞ்சு மற்றும் மாதுளை பழங்கள் பழுத்து தொங்குகின்றது. விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்து இருக்கின்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் அழகாக மலை ஆரஞ்சு பழங்களும், மாதுளை பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றது. இந்தப் பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் பெரும்பாலான பறவைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.செவல்பட்டி கிராமத்தில் குருவாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இதில் சதீஷ்குமாருக்கு உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில் விற்பனை செய்த புஷ்பம் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட நிலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகரில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடைசெய்யப்பட்ட ஒரு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆமத்தூர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரியில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய வாலிபர்…. மடக்கி பிடித்த தாசில்தார்….!!

லாரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தாசில்தார் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் அலுவலக பணி காரணமாக தனது வாகனத்தில் விருதுநகர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வடமலாபுரம் அருகில் முன்னால் சென்ற லாரியை  தாசில்தார் சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தாசில்தாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி மகன் மலைமன்னன் என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேசிய பசுமை தீர்ப்பாயம்” எங்களுக்கு நிவாரணம் வழங்கனும்…. கலெக்டரிடம் மனு….!!

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 25 நபர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கப்படாத நிலை இருக்கின்றது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. சட்டென நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேன் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்போடை கிழக்குத் தெருவில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா மீது அவ்வழியாக வந்த காய்கறி வேன் மோதியது. இதனால் குழந்தை சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஓட்டலில் நுழைந்து மர்ம நபர்கள் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடையை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அய்யனார் மறுநாள் காலை வந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொலை மிரட்டல் கொடுக்காங்க…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் விசாரணை….!!

கடனை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜகோபால் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் ராஜகோபாலின் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிரதோஷத்தை முன்னிட்டு” திரண்டு வந்த பக்தர்கள்…. காட்சி அளித்த சுந்தரமகாலிங்கம்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தனர். இதனையடுத்து அதிகாலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. மளமளவென பரவியது…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சி….!!

சிக்கரி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தன் மான சிக்கரி ஆலை இந்நகர் ரோசல்பட்டி சாலையில் இருக்கின்றது. இந்த ஆலையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென ஆலயம் முழுவதும் பரவியதால் உடனடியாக விருதுநகர், அருப்புகொட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில பேர் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நாடார் சிவன் கோவில் அருகில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாம் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் 100-க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. வசமா மாட்டிய வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக தென்காசி மாவட்டம் உமையதலைவன் பட்டியைச் சேர்ந்த சீனிபாண்டி என்பவரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சீனிபாண்டி மீது விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சீனிபாண்டியை மதுரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமான செயல்” விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் விளம்பட்டி காமராஜர் காலனியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து எம்.சாண்ட் என்ற பெயரில் அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாநில அளவிலான கராத்தே போட்டி” மாணவனின் ஏழ்மை நிலை…. நிதி உதவி வழங்கிய கலெக்டர்….!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவியை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சக்திவேல் முருகன்-முத்துரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஹரி பிரசாத் என்ற மகன் இருக்கின்றான். இந்த மாணவன் சாலியர் மகாஜன பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இவர் மதுரை கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார். இந்நிலையில் ஹரி பிரசாத் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தடுப்பூசி முகாம்…. 630 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு நகர வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார சுகாதாரதுறை மேற்பார்வையாளர் சரவணன், மருத்துவர் சங்கர நாராயணன் போன்றோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள 3, 4-வது வார்டு மற்றும் 23, 24- வது வார்டு பகுதியில் 630 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனம் மோதி விபத்து…. அய்யோ பாவம் இப்படி ஆயிட்டு…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சுக்கிலநத்தம்-மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகில் காயமடைந்த நிலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் அபீஸ் செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாதாந்திர பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில் மின்தடை…. அதிகாரியின் தகவல்….!!!

ஆலங்குளம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் தடை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு. எதிர் கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிற் பயிற்சி நிலையம்…. மீண்டும் திறந்தாச்சு…. சமூக இடைவெளியுடன் மாணவர்கள்….!!

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தொழிற்பயிற்சி நிலையம் அனைத்தும் உரிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கையும் தொடங்கியிருக்கின்றது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட தொடங்கி இருக்கின்றது. இவ்வாறு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. 926 நபர்களுக்கு தடுப்பூசி…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 926 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வெம்பக்கோட்டை துணை சுகாதார நிலையம், மேலஒட்டம் பட்டி, கோட்டைப்பட்டி, இ.ராமநாதபுரம், விஜயகரிசல்குளம், கணஞ்சாம்பட்டி போன்ற பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 926 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்போது தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் போன்றோர் முகாமில் கலந்து கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு உதவுமா…? மகசூல் குறைவா இருக்கு…. கவலையில் விவசாயிகள்….!!

ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் மகசூல் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம், தொம்பக்குளம், கோடாங்கிபட்ட, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கம்பு பிராய்லர் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுகுறித்து விவசாயி வேல்முருகன் கூறியபோது, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பு சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக்கடையில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லான்செட்டிபட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து காவல்துறையினர் 7 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கூரையில் பணிபுரியும் போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் சோகம்….!!

மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் சிமெண்ட் சீட் அமைப்பதற்காக மேற்கூரையில் அவரது பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து கண்ணனை அருகில் இருப்பவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதாந்திர பராமரிப்பு பணிகள்…. நாளை இங்கே மின்தடை…. கோட்ட செயற்பொறியாளரின் தகவல்….!!

துணை மின்வாரிய நிலையத்தில் மாதாந்திரத்தின் பராமரிப்பு பணி என்பதால் நாளைய தினம் மின் தடை செய்யப்படுகின்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் வலையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருக்கின்றது. இதனால் கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையப்பட்டி, பாட்டக்குளம், விழுபனுர், கூனம்பட்டி, கிருஷ்ண பேரி, நிறைமதி, கோபாலன்பட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கொரோனா நிவாரண நிதி” ஆசிரியரின் வியக்க வைக்கும் செயல்…. பரிசளித்த கலெக்டர்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக தங்க நகையை ஆசிரியை கலெக்டரிடம் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கவிதா என்ற ஆசிரியர் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து வந்த நிலையில் விபத்தில் இறந்துவிட்டார். எனவே தவித்து வந்த கவிதாவுக்கு கணவரின் பெற்றோர் வீட்டில் இருந்தும் எந்த உதவியும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் மனிஷ் விஷ்வாவையும் பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர். எனவே தனக்கு ஆறுதலாக இருந்த மகனை கவிதா நீதிமன்றத்தின் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படியா பண்றீங்க…. வசமா சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

நாணய மாற்று தொழிலில் ஈடுபட்டவரை கடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் நாணயமாற்று தொழில் செய்யும் சரவணன் என்பவரை கடத்தியதாக ஆமத்தூர் காவல்துறையினர் 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகசாமி, சாலை புதூரை சேர்ந்த ராம் கனகசபாபதி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மற்ற 3 பேரையும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெய்த தொடர் மழை…. சமையலுக்கு பயன்படுத்த முடியாது…. ரொம்ப அழகா இருக்கு….!!

தொடர் மழையின் காரணமாக மலைப்பகுதியில் வண்ண காளான்கள் முளைத்து அழகாக காட்சி அளிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் முளைத்து அழகாக காட்சியளிக்கின்றது. இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறியபோது, தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காளான்கள் முளைத்து இருக்கின்றது. ஆனால் இந்த காளான்களை உணவுக்கு பயன்படுத்த முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீடு வாடகைக்கு கிடைக்குமா…. என்று நைசாக பேசி…. மூதாட்டியிடம் பெண் செய்த காரியம்…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெருவில் வசிப்பவர் அன்னம்மாள்(61). இவர் யாரும் இல்லாமல் தனியாகத்தான் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த  கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ள சண்முகத்தாய் (37) என்பவர் வாடகைக்கு வீடு பார்ப்பது போல வந்துள்ளார். அப்போது வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்ட அந்த பெண் அன்னம்மாளிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அன்னம்மாள் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிராமத்தில் இப்படி பண்றாங்க…. சிக்கிய போலி மருத்துவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீரசோழன் கிராமத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில், மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பஞ்சாட்சரம் என்பவர் தனது குடியிருக்கும் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பலகையை இப்படி பண்ணிட்டான்…. பெறப்பட்ட புகார்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் தங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருத்தங்கல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் தங்கம் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் சத்யா நகருக்கு செல்லும் வழியில் கட்சியின் பெயர் பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பலகையை அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைத்து விற்பனை…. தப்பிக்கவே முடியாது…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மயிலாடுதுறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மதுபான கடையின் அருகில் முட்புதரில், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று அதிவீரன்பட்டியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

3 மாதம் தரவில்லை…. உடனடியாக வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு….!!

நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு 3 மாதமாக நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு கலெக்டர் உத்தரவுவிட கோரி மனு கொடுத்துள்ளனர். மேலும் செவிலியர்கள் பணி நீட்டிப்பு செய்து தருமாறும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை தூர்வாரனும்…. கவுன்சிலர்களின் கோரிக்கை…. ஒன்றியக்குழு தலைவரின் நடவடிக்கை….!!

கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சீனிவாசன் கூறியதாவது, தங்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாக இருப்பதனால் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னை அவங்க கூட சேர்த்து வைங்க…. டிரைவர் தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

போலீஸ் சூப்பிரண்டின் அலுவலகத்திற்கு முன் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் குறிஞ்சி நகரில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் முகம்மதுக்கும் அவரது மனைவி லட்சியமா பானுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் லட்சியமா பானு தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கையும் விட்டு வைக்கல…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சொக்கநாத சாமி கோவிலில் கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாத சாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்ட உண்டியலில் பணம் திருட்டு போனது. இதனையடுத்து கோவிலில் கொள்ளயடித்துச் சென்ற வாலிபரை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகிலுள்ள ஆனைகுழாய் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கோவில் உண்டியலில் கொள்ளையடித்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை ரத்து செய்யனும்…. நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி, கிருஷ்ணன்கோவில், விருதுநகர், காரியாபட்டி, ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் போன்ற 8 இடங்களில் மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடைபெற்றது. இதில் 200 நபர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் ஷெட்டுக்குள் இதுவா இருக்கு…? பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சி….!!

கார் ஷெட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள கார் ஷெட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில். தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்தபோது அது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மரக்கன்று நடும் நிகழ்ச்சி” 30 இடங்களில் நட்டு வச்சாச்சு…. பழைய மாணவ-மாணவிகள் ஏற்பாடு….!!

எஸ்.ஆர்.என். என்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற முன்னாள் தலைவரும், பள்ளியின் பழைய மாணவருமான தொழிலதிபர் சபையர் ஞானசேகரன் தலைமை தாங்கி 30 இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஆர்.என். (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் பாண்டியன், எஸ்.ஆர்.என் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நூர்ஜஹான், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி உட்கோட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பார்த்திபன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனயடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாதர் சங்கத்தின் பயிற்சி முகாம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்…. நன்றி தெரிவித்த மாவட்ட செயலாளர்….!!

விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை  நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. இந்த முகாமில் மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி, பொருளாளர் அங்கம்மாள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலச் செயலாளர் சுகந்தி போன்றோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அதன்பின் மாவட்ட செயலாளர் தெய்வானை வரவேற்றுப் பேசி இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. வசமா சிக்கிய 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் சிலர் சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வடக்கு மலையடிப்பட்டி முனிசிபல் காலனியில் சுந்தரம், வெங்கடேஷ், முனியாண்டி, பரஞ்சோதி போன்றோர் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, […]

Categories

Tech |