Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியூருக்கு சென்ற மகன்…. மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்…!!

தாய் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஷ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ்ராஜ் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வனிதா ராணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செத்து மிதக்கும் மீன்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!

கண்மாயில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் இருக்கும் கண்மாய்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடந்த ஆண்டு நெல்லில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கண்மாய் தண்ணீர் வற்றி மீன் பிடிக்க ஏதுவாக இருப்பதால் மீன்பிடித் திருவிழாவும் நடைபெறுகிறது. தற்போது பள்ளப்பட்டி பெரிய கண்மாயில் இருக்கும் விரால் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே கண்மாய் நீரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி-மாமியாரை எரித்து கொன்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் பகுதியில் கூலி தொழிலாளியான முருகபாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு முருக பாண்டி தனது மனைவி மற்றும் மாமியார் கமலா ஆகியோரை வீட்டிற்குள் பூட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரியும் காட்டு தீ…. பாதிக்கப்படும் விலங்குகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நீராவி பிட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசியதால் காட்டு தீ வேகமாக பரவியது. இந்த தீயில் ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீ தடுப்பு மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் யானை, காட்டெருமை, […]

Categories
மாநில செய்திகள்

மீண்டுமா!…. கலெக்டர் திடீரென போட்ட ரூல்ஸ்…. அச்சத்தில் மக்கள்….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தற்போது பரவலாக அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் அனைத்து மக்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபதாரம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்லாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் கருகி கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்க்கும் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமசாமி அவரது மனைவியுடன் வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது சமையலறையில் கோமதி தீக்காயங்களுடன் கிடப்பதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடு கிடுவென உயர்ந்த உளுந்தம் பருப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!

உளுந்து விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விருதுநகரில் வாரம் தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலானது வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரமும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட உளுந்தம் பருப்பின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அதிகரித்துள்ள பொருட்களின் விலைப்பட்டியல் குறித்து பார்க்கலாம். அதன்படி பட்டாணி பருப்பின் விலை 5,750 ரூபாய்க்கும், பர்மா எப்.ஏ.கியூ உருட்டு உளுந்தம் பருப்பு 9,100 ரூபாய்க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு 10,200 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ரெட்டியப்பட்டி பகுதியில் பரதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த பரதனை அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பரதனின் மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியின் வளைகாப்புக்கு சென்ற கணவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

மனைவியின் வளைகாப்புக்கு சென்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் பிரபு(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு ஆமணக்கு நத்தத்தில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபு திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உயிருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி…. நீதிமன்ற வாளாகத்தில் நடந்த சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை தாக்கிய நபரை கைது செய்யுமாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள செம்பட்டி வடக்குத் தெருவில் விஜயலட்சுமி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன்(56) என்ற கணவர் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி வேல்முருகனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ஜெயலட்சுமி அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வேல்முருகன் விஜயலட்சுமிக்கு மாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேடி அலைந்த உறவினர்கள்…. மர்மமாக இறந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை ஊராட்சி மன்ற தலைவராக நிரஞ்சனா(31) என்பவர் உள்ளார். இவருக்கு பெரியசாமி(40) என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற பெரியசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்பகுதியில் பெரியசாமியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கீழே கிடந்த செல்போன்…. நேர்மையாக செயல்பட்ட மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

கீழே கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் செல்போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதனை அதே பகுதியில் வசிக்கும் 6-ஆம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவி பார்த்துள்ளார். இந்நிலையில் மாணவி அந்த செல்போனை எடுத்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். நேர்மையாக செயல்பட்ட மாணவியை காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். இதனை அடுத்து செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னக்காமன்பட்டியில் பஞ்சவர்ணம்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பன்குளத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன் பண்ணை வச்சிருக்கீங்களா…? உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு சிறு குறு விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்கள் ஆகியவை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுகிறது. விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மீன்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயனாளிகள் தேர்வு செய்ய முகமையில் முன்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. முகமையில் பதிவு செய்த உறுப்பினர்கள் தங்களுடைய மீன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கியிருந்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோணம்பட்டி விலக்கு அருகில் கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூதாட்டி சிவகாசி-சாத்தூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. ஏமாற்றிய இன்ஜினியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் என்ஜினீயரான ராஜேஷ் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மருமகள்…. மாமியார் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரியம்மாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மருமகள் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாளும், ரேவதியும் இணைந்து குழு மூலம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் ரேவதி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மருமகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவாகரத்து கேட்ட மனைவி…. வேன் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தங்கராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனர் ஆவார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா தங்கராஜை விட்டு பிரிந்து சென்றார். கடந்த 18-ஆம் தேதி தங்கராஜ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது அனிதா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாலிபரை காதலித்த மாணவி….. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் தலைமலை(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்நிலையில் தலைமலை அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் இருந்த மாணவி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பனியன் ஜவுளிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சீதாராமன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சி மயானம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் சீத்தாராமன் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 24 பேர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையில் இருந்து 42 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விஷ பூச்சி கடித்துவிட்டது” மயங்கி விழுந்து இறந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள தடங்கம் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனி செல்வி(27) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்த செல்வி தனது காலில் ஏதோ விஷ பூச்சி கடித்ததாக கூறி விட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபர்…. வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரியவள்ளிகுளம் ராமசாமிபுரத்தில் பாரதி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரதீப்குமாரை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 7 மாதங்களாக பிரதீப் குமார் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பிரதீப் குமார் யாருடனும் பேசாமல் மது குடிப்பதற்கு பணம் கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. மரத்தில் மோதி கோர விபத்து…. 43 பயணிகள் படுகாயம்….!!!

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ராஜபாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விளக்கு பகுதிக்கு வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் அருகே இருந்த ஒரு மரத்தில் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில் மொத்தம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உலக சாதனை படைத்த கலெக்டரின் 3 வயது மகள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

மாவட்ட ஆட்சியரின் 3 வயதுடைய மகள் உலக சாதனை படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு தீபிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய மீரா அரவிந்தா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி 58 நடன முத்திரைகள் மற்றும் நவரசபாவனைகளை 10 நிமிடங்களில் செய்து காட்டி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்நிலையில் மீரா அரவிந்தாவின் குரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. விருதுநகரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிமல்(19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிமல் அவரது நண்பர்களான நாகூர்கனி, சுதர்சன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெம்பக்கோட்டை அருகே இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சிவகாசியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி கிராமத்தில் கார்த்திக்ராஜா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்ராஜா தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் காரியாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி கார்த்திக் ராஜாவின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் பகுதியில் மீராசாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுநரான பீர் முகமது(34) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பீர்முகமது பாலக்காட்டில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் காயல்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது தூக்கம் வந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்…. தலைகுப்புற கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அஜித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் திருமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் ராஜபாளையத்தில் வைத்து மது அருந்திவிட்டு லாரியை வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தேவதானத்திற்கு முன்பாக இருக்கும் வளைவில் திரும்ப முயன்றபோது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளுத்து வாங்கிய மழை…. சாய்ந்து விழுந்த மரங்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கனமழை பெய்ததால் சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, காந்திநகர், பாலையாம்பட்டி, புளியம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து காந்திநகர் சர்வீஸ் சாலை, வி.வி.ஆர் காலனி உள்ளிட்ட பல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சித்திரை வேலு(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கல்யாணி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்திரை வேலு தனது மனைவி கல்யாணி, மகன் சபாபதி(32), மருமகள் சோபி(28), பேரன் ராம்(5), பேத்தி பூஜா(2), உறவினர்களான இசக்கி(29), அகிலா(62), தனுஷ்(7) ஆகியோருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஷேர் ஆட்டோ மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த கல்லூரி மாணவர்கள்…. விருதுநகரில் கோர விபத்து…!!

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு ஷேர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை சுரேஷ் கிருஷ்ணன்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கல்லூரி அருகே மாணவ- மாணவிகளை இறக்கிவிட சுரேஷ் ஆட்டோவை நிறுத்திய போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தை…. இளம்பெண் சாவில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் தாய்-குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முத்து அதே ஊரில் வசிக்கும் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் காயத்ரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் ரக்சன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துவிற்கும் காயத்ரிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் விவசாயிகளே…. இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று  காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ளார். நடப்பு ஆண்டிற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியராக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மூலம் தெரிவித்து பயன்பெற முடியும். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தையுடன் மர்மமாக இறந்து கிடந்த இளம்பெண்…. அதிர்ச்சிடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் இளம்பெண் குழந்தையுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்துவுக்கும் காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று வீட்டு மாடியில் மர்மமான முறையில் காயத்ரியும், குழந்தையும் இறந்து […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….. போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்….. கலெக்டர் வெளியிட்ட தகவல்…. மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் மேகநாதரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம். […]

Categories
மாநில செய்திகள்

ரிப்பேர் ஆன ஃபோன் வாங்கிட்டிங்களா…..! இனி இங்கே புகார் கொடுங்க…..!!!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த செல்போனை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் அந்த மொபைல் விற்பனை நிலையத்திற்கு சென்றும் குறைபாட்டை சரி செய்து தரவில்லை. இதுகுறித்து சிவச்சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தரமற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பிரமுகரை பார்க்க சென்ற நண்பர்கள்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. விருதுநகரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயராஜ்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் ஜெயராஜ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நண்பர்களான மதுரைவீரன், எட்வின் நோவா ஆகியோருடன் கட்சி பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் கட்சி பிரமுகரை பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்….. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. விருதுநகரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாத்தூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள படந்தால் சந்திப்பு சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமார் என்பவர் சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் செந்தில்குமார் ஒலி ஒலித்தபடி பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலையின் நடுவே பேருந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 2 மாதத்தில் இறந்த மனைவி…. ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டியில் ராஜபாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சாரண, சாரணிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யபூரணி(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யபூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்த 6 மாதத்திற்குள் மனைவி தற்கொலை செய்தால் ராஜபாண்டி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென மாயமான கணவர்…. ரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் காளீஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினத்திலிருந்து லட்சுமணனை காணவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே கேட் அருகில் ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சடலம்…. தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

முன்னாள் ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான சுப்புராம்(51) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுப்புராமின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று சுப்புராம் வீட்டிற்குள் இறந்து கிடப்பதாக பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பெருமாள் அங்கு சென்று பார்த்த போது தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நூல் வாங்கிக்கொண்டு ரூ 8 3/4 லட்சம் அபேஸ்… 5 வருடங்கள் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது…!!!

நூலை வாங்கிக்கொண்டு ரூ 8 3/4 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவர் ஸ்பின்னிங் மில் மேலாளர்.  ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்த குழந்தைவேல் என்ற பழனியப்பன்(51). இவர் சென்னிமலையில் டெக்ஸ்டைல் நடத்தி வருகிறார். இவர்  கடந்த 2010ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரூ 8,88,000-க்கு  நூலை அழகப்பனிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரில் ஓட்டுநரான செந்தில்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு முனியாண்டி(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் முனியாண்டிக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஸ்வநத்தம் புதூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவேணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூவேணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் ஆத்து மேட்டு பகுதியில் சிவசங்கரி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிவசங்கரிக்கு சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுந்தரம் சிவசங்கரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசங்கரி கூறியதற்கு சுந்தரம் மறுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு நிர்ணயித்தபடி சம்பளம், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி… ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு…!!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதியில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது, நாங்கள் கடந்த 2014ஆம் வருடம் முதல் 240 பேர் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றோம். பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“10,000 ரூபாய் லஞ்சம்” சப்-இன்ஸ்பெக்டர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!.

லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே சின்னம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எல்லை கற்கள் உடைக்கப்பட்டது. இதுகுறித்து தங்கராஜ் பாண்டியன் என்பவர் எம். ரெட்டியார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் தங்கமணி, கோவிந்தராஜ் மற்றும் அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்குவதற்காக சப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலுள்ள தளவாய்புரம் வணமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் 22 வயதான ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு […]

Categories

Tech |