திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் […]
Tag: விரைவு ரயில்
விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது. அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து […]
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அடுத்த தோமோஹானி அருகே கவுகாத்தி – பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவு ரயிலில் சில பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரயிலில் பயணித்த பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.சுமார் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூரில் 50 வயது நபர் ஒருவரின் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் மீது டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஒன்று அவர் மீது மோதியது. ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த ரயில் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தினார். பின்பு இந்த தகவலை கோயம்பத்தூர் ரயில்வே காவலரிடம் […]
விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அது விரைவாக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . முன்பு தினசரி 04:20மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வைரஸ் பரவல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் விழுப்புரம் மதுரை இடையே […]