தமிழக அரசு விலையேற்றத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் மீது விலையேற்றத்தை திணிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை கடந்த மார்ச் மாதம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்றமானது சாதாரண நடுதட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு […]
Tag: விலையேற்றம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை […]
அமெரிக்க நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் போன்ற காரணங்களால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதன்படி, அமெரிக்க நாட்டில் கடந்த 1981 ஆம் வருடத்திற்கு பின் முதல் தடவையாக உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மேலும், எரிபொருள் விளையும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது […]
இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது […]
இலங்கை அரசு பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாட்டு மக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். கடுமையாக உயர்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு, தினசரி பல மணி நேரங்கள் மின்தடை போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு, நிதி நெருக்கடியை […]
பெருவில் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் அதிகரித்த நிலையில் நேற்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், கச்சா எண்ணெய் விலை பல நாடுகளில் அதிகரித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே உணவு பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, பெரு நாட்டில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகரில் […]
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி அதிகரித்ததால் மக்கள் தவித்து வருகிறார்கள். பால் போன்ற அத்யாவசிய பொருட்களின் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆளும்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கேபினெட் அமைச்சர் […]
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல் தினமும் பல மணி நேரங்களாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களை […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உக்ரைன் போர் நீடிக்கும் பட்சத்தில் கொரோனாவின் போது எதிர்கொண்ட நிதி நெருக்கடியை காட்டிலும் கடும் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைனில், ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக திகழும் விற்பனை சங்கிலியில் பெரிதாக தாக்கம் உண்டாகி, பொருட்கள் பல மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஹெர்பெர்ட் டைஸ் கூறியிருக்கிறார். எனவே, ஐரோப்பிய நாடுகள் அதிக […]
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]