கர்நாடகாவில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் ரோஜா பூக்களை சாலையோரத்தில் கொட்டியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ரோஜா மல்லி போன்ற பூக்களை விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிக்பல்லப்பூர் மார்க்கெட்டில் ரோஜா மற்றும் மல்லி பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கிலோ ரோஜாப்பூ ஐந்து ரூபாய்க்கு விற்பனை […]
Tag: விலை வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தக்காளிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை சாலையோரம் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், நெய்க்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டுகள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால் தக்காளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதால் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, வேடசந்தூர், குரும்பபட்டி, அய்யர்மடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காயை அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் வெண்டைக்காய் அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டதால் மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் வரத்து அதிகமானது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டூர், குட்டம், அழகாபுரி, கல்வார்பட்டி, எரியோடு, புது ரோடு ஆகிய பகுதிகளில் தக்காளியை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தக்காளி விலை கிலோ […]
திண்டுக்கல்லில் கொரோனா ஊராடங்கினால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் பகுதியில் உள்ள வாழை இலைகள் சுமார் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் வெளி மாநிலங்களிலும், தமிழகத்திலும் இதற்கு நல்ல மவுசு உள்ளது. மேலும் திருமண மூகூர்த்தங்கள் வைகாசி மாதத்தில் அதிகமாக இருக்கும். இதனால் வாழை இலையும் அதிக அளவில் தேவைப்படும். எனவே ரூ. 2000 வரை 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு விற்பனையாகும். ஆனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கும், மண்டிக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக விளைச்சல் அதிகமாக உள்ளதால் […]
முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டதாலும், விலை வீழ்ச்சி அடைந்ததாலும் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த உள்ள பல்வேறு கிராமங்களில் முல்லைப்பூ 1000 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை ஆண்டுதோறும் முல்லைப்பூ சீசன் காலமாகும். நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் சீசன் காலத்தில் முல்லைப்பூ பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பனிப்பொழிவால் இலைகள், பூச்செடிகள் உதிர்ந்து வேதாரண்யம் பகுதியில் பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. […]
மைசூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு சாலை பகுதிகளில் தரகுமண்டி இயங்கி வருகின்றது. இந்த தரகுமண்டிகளுக்கு திருப்பூர், திண்டுக்கல்லின் சுற்றுப்புற பகுதிகள், மராட்டியம் உட்பட வட மாநிலங்களில் இருந்து பல்லாரியும், தாராபுரத்தில் இருந்து சின்ன வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது. சின்ன வெங்காயம் கடந்த மாதம் ரூ.70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்பு ரூ. 35 முதல் ரூ. 50 வரை விலை குறைந்து […]
திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகரில் புளி வரத்து அதிகரிப்பால் வாரச்சந்தையில் புளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நத்தம், கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் புளிய மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்களில் விளையும் புளி அதிக சுவை கொண்டதாக இருக்கும். இதனால் நத்தம் புளி மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நத்தம் தாலுகாவில் மக்கள் புளி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே கடந்த வருடம் முடிவில் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில் சடையன் காடு, சல்லிக்குளம், நாட்டான் காடு உள்ளிட்ட இடங்களில், சுமார் 700 ஏக்கரில் செண்டு பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கி உள்ள நிலையில், ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி பூ […]