ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.
Tag: விளாடிமிர் புதின்
ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகுலுக்கிய மருத்துவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 8,72,447 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,269 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தான் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு நாளுக்குநாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. […]