Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “சூடு பிடித்த களம்”… “10 அணிடயும்” எவ்ளோ தொகை மிச்சமிருக்கு…. முழு விவரம் இதோ…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வைத்து நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிபோட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கியது போக எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த முழு விவரம் பின்வருமாறு: மும்பை – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “தமிழக வீரர்கள்” மீது நம்பிக்கை இல்லையா CSK….? எழுந்த கேள்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்…!!

பெங்களூரில் நடந்த 2 நாள் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒரு தமிழக வீரர்களை கூட எடுக்கவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று மற்றும் இன்று ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக பங்கேற்றுள்ள 10 அணிகள் ஒவ்வொரு வீரரையும் போட்டிபோட்டு எடுத்துள்ளது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “ரஹானேவை” தூக்கிய கொல்கத்தா…. எத்தன கோடிக்கு தெரியுமா…? வெளியான தகவல்….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் ரஹானேவை 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடப்பாவமே…! “CSK” வ என்னால மறக்க முடியல…. குமுறிய “டுபிளெசிஸ்”….!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலத்தில் டுபிளெசிஸ்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்துள்ள நிலையில் அவர் சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்களை தன்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான தோனியின் நண்பர் மற்றும் சிஎஸ்கே அணியில் இருந்து பிரிக்க முடியாத வீரராக டுபிளெசிஸ் இருந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியாவில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான முதல் நாள் ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் டுபிளெசிஸ்ஸை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனல் பறக்கும் ஏலம்”… “விஜய் சங்கரை” தவறவிட்ட CSK…. கடும் போட்டியில் குஜராத்….!!

2 ஆம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் விஜய் சங்கரை தவற விட்டுள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் CSK தமிழக வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக கடுமையாக போட்டி போட்டுள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.40 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சூடுபிடிக்கும் 2 ஆவது நாள்” ஏலம்…. போட்டி போடும் அணிகள்…. 2 “இந்திய வீரர்களை” தூக்கிய “குஜராத் டைட்டன்ஸ்”…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்திய வீரர்கள் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள். அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: தெறிக்கவிட்ட அணிகள்…. “லியம் லிவிங்ஸ்டனை” 11.5 கோடிக்கு தூக்கிய “பஞ்சாப் கிங்ஸ்”….!!

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ஒடியன் ஸ்மித்தையும், லியன் லிவிங்ஸ்டனையும் எடுத்துள்ளது. பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓடியன் ஸ்மித்தை 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மக்களே…! துவங்கியாச்சு 2 ஆவது நாள் மெகா ஏலம்…. தென்னாப்பிரிக்க வீரர் இருவரை தட்டித் தூக்கிய “ஹைதராபாத் அணி”…. எத்தன கோடிக்குன்னு தெரியுமா?…!!

பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது நாள் ஏலம் இன்று துவங்கியுள்ளநிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென் ஆப்பிரிக்க வீரர் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலத்தில் விடப்படவுள்ளார்கள். இந்நிலையில் 2 ஆவது நாள் ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “லக்னோ வலுவான அணியை உருவாக்கும்”…. கடுமையாக நடந்த போட்டி…. கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளார்கள். ஐபிஎல் தொடருக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புதிதாக வந்துள்ளது. இதோடு சேர்த்து மொத்தமாக 10 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருந்துள்ளது. அதன்படி லக்னோ அணி ஹைதராபாத் அணியுடன் போட்டி போட்டு ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் வாங்கியுள்ளது. அது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சூடு பிடித்த ஏலம்”…. அடுத்த வீரரும் போச்சா…? கதறும் “CSK ரசிகர்கள்”…..!!

சிஎஸ்கே அணி எவ்வளவோ போட்டிபோட்டும் கூட டெல்லி அணி ஷர்துலை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது. ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் கலந்துகொண்டுள்ளார்கள். மேலும் இதில் 217 வீரர்கள் ஏலமிடப்படவுள்ளார்கள். இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி ஏற்கனவே டுபிளெசிஸை தவற விட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயன்றும் கூட டெல்லி அணி கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்படியா…! “தோனியை” விட இவரு தான் அதிக ஏலத்துக்கு போயிருக்காரா…? எத்தன “கோடிக்குனு” தெரியுமா?…!!

சிஎஸ்கே அணி தோனியை 12 கோடிக்கு தக்க வைத்துள்ள நிலையில் இவரை விட அதிகமாக மும்பை அணி கிஷனை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலமிடப்படவுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 12 கோடிக்கு தோனியை தக்கவைத்துள்ளது. மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடி தூள்…! “இந்திய வீரருக்கு” போட்டிபோட்ட அணிகள்… “12.25 கோடிக்கு” ஸ்ரேயஸை தட்டி தூக்கிய கொல்கத்தா…!!

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான ஸ்ரேயஸின் ஆரம்ப விலை 2 கோடியாக இருந்த நிலையில் அவரை கொல்கத்தா 12.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”… தென் ஆப்பிரிக்க வீரர் “காகிசோ”…. 9.25 கோடிக்கு தட்டி தூக்கிய “பஞ்சாப் அணி”….!!

பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரரான காகிசோ ரபடாவை 9.25 கோடிக்கு எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அட்ராசக்க…! “Trent Boult ஐ” 8 கோடிக்கு எடுத்த ராஜஸ்தான் அணி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து அணியின் வீரரான trent Boult ராஜஸ்தான் அணி 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இவ்வாறு இருக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”… ரூ. 7.25 கோடிக்கு ஏலம் போன “பேட் கம்மின்ஸ்”…. எந்த அணி அவர ஏலத்துல எடுத்தாங்க?….!!!

பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் வைத்து தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”…. “ஷிகர் தவானை” தட்டி தூக்கிய “பஞ்சாப் அணி”…. எத்தன கோடிக்குனு தெரியுமா?…!!

ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு இந்திய அணியின் வீரரான ஷிகர் தவானை எடுத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: “IPL மெகா ஏலம் துவக்கம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. “CSK ல” யாரெல்லாம்னு பாருங்க….!!

ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் துவங்கியுள்ள நிலையில் CSK அணி பல முன்னணி வீரர்களை தக்கவைத்து 48 கோடியை மீதம் வைத்துள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் 298 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட மொத்தமாக 590 பேர் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இல் முதல் கட்டமாக அஷ்வின், போல்ட், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

துவங்கியாச்சு “ஐபிஎல் ஏலம்”… “CSK” ல இவரு இருந்தா நல்லா இருக்கும்…. விருப்பம் தெரிவித்த “பிரபல நடிகர்”…!!

ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் சி.எஸ்.கே வில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் வைத்து ஐ.பி.எல்15 ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ள எலத்தில் சி.எஸ்.கே அணி தமிழகத்தை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்படி சி.எஸ்.கேவில் ஆல்ரவுண்டரான அஸ்வின் இடம்பெறுவது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாருக்கான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்படியா…! “ஐ.பி.எல்” இல் இவருக்கு தான் “மவுசு அதிகமா இருக்கும்”… நம்பிக்கை தெரிவித்த “ஆகாஷ் சோப்ரா”….!!

ஐ பி.எல் இன் மெகா ஏலம் இன்று துவங்குகின்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 590 வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த சாருக்கான் அதிக விலைக்கு ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மக்களே…! இதோ துவங்குது “ஐ.பி.எல்” ஏலம்…. CSK யாரெல்லாம் எடுக்க போறாங்க… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 590 பேர் கலந்துகொள்ளவிருகின்ற நிலையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 590 வீரர்களில் யாரையெல்லாம் வாங்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“ஆர்.சி.பி யில்” இணைவாரா கோலி…? இந்த அணியின் தப்பே இதுதான்… சுட்டிக்காட்டிய மூத்த வீரர்…!!

ஆர்.சி.பி இன் கேப்டன் பொறுப்பை விராட் கோலி மீண்டும் ஏற்றுக்கொண்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடப்பு மாதத்தின் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் மிக சிறந்த வீரர்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

IPL: “இந்த அணிகளோட பேரு இதுதான்”… வெளியான அதிரடி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த 15 வது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் இன் மெகா ஏலம் வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ என்ற புதிய இரண்டு அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இத மட்டும் செய்யுங்க…. வீரர்களுக்கு வேண்டுகோள்… கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

சூப்பர்…! 5 ஆவது முறை… “பட்டம் வென்ற இந்தியா”… பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா…. வெளியான ட்விட்டர் பதிவு….!!

5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பி.சி.சி.ஐ செயலாளர் 40 லட்ச ரூபாய் ரொக்க தொகையை அறிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணி 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் பி.சி.சி.ஐ தலைவரான சவுரவ் கங்குலி வாழ்த்தியுள்ளார். இதனையடுத்து பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், துணை பணியாளர்களுக்கும் பி.சி.சி.ஐயின் செயலாளரான ஜெய் ஷா வெகுமதிகளை அறிவித்துள்ளார். […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“நம்ம சாருக்கு என்ன ஒரு தில்லுடா”… “மழை பெஞ்ச கேப்புல” இப்படி பண்ணிட்டீங்களே…. எச்சரித்த பயிற்சியாளர்….!!

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் மைதானத்தில் வைத்து புகை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மினிஸ்டர் குரூப் டாக்கா மற்றும் கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதவிருந்துள்ளது. ஆனால் அந்தத் ஆட்டம் மழை காரணத்தால் பாதிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் களத்திலிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் விக்கெட் கீப்பர் முகமது ஷாஜாத் மைதானத்தில் வைத்து […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“என்னால தாங்க முடியல”… இன்னும் வலிக்குது… வெறும் “8 ரன்” தான்… நினைவு கூர்ந்த கேப்டன்….!!

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லாதது இன்னும் வலிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற 9 ஆவது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளார். இவருடைய அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 9 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த விளையாட்டில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

இதோ… ஆரம்பிச்சாச்சு “ஒருநாள் கிரிக்கெட் தொடர்”… இலக்கைத் தொடுமா பிரபல ஜோடி…? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்….!!

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 81 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி ரோஹித் சர்மா விராட் கோலி ஜோடிகள் 4904 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மற்றும் கங்குலி சேர்ந்து விளையாடுவது தலைசிறந்த ஜோடியாக தெரியும். இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 176 இன்னிங்சில் விளையாடி 8227 ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து விராட் கோலி ரோகித் சர்மா ஜோடிகள் 5000 ரன்களை எடுக்க இன்னும் 96 ரன்களே தேவைப்படுகிறது. இந்நிலையில் நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL-ல் ரசிகர்களுக்கு அனுமதி?”…. BCCI திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அண்மையில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியிருந்தார். மேலும் போட்டிகள் அனைத்தும் வான்கடே மைதானம், டி. ஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடு ரகிட ரகிட!…. “புதிய சாதனை படைத்த CSK”…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

ஒரு நிறுவனத்தின் மதிப்பு எப்போது 1 பில்லியன் டாலர் அளவீட்டை தொடுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தை “யூனிகார்ன்” என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் முதல் முறையாக இந்திய விளையாட்டுத்துறையில் ஒரு அணி “யூனிகார்ன்” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்றால் அது CSK-வாக தான் இருக்கும். அதாவது இந்தியாவில் முதல் “யூனிகார்ன்” நிறுவனம் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( ரூ.7,500 கோடி ) மதிப்புள்ள ஒரு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“நா இத சொல்லிருக்கவே கூடாது”…. அவரசப்பட்டுட்டேன்… வருத்தம் தெரிவித்த இந்திய டென்னிஸ் வீராங்கனை….!!!!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவை சேர்ந்த ராஜீவ் ராமுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் களமிறங்கினார். அதில் சானியா மிர்சா தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இந்த ஆண்டில் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சானியா மிர்சா ( வயது 35 ), “தனது ஓய்வு முடிவை அவசர கதியில் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஓய்வை பற்றி யோசிக்கவில்லை. அதற்காக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இவரை மயக்கினாள் ரூ. 50 லட்சம் தருகிறேன்…. பிரபல டென்னிஸ் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட நபர்…. மாடல் அழகி எடுத்த முடிவு…!!

செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடேங்கப்பா”ஐபோன் நொறுங்கும் அளவுக்கு…. வெறித்தனமா பயிற்சி எடுக்கும் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!

ஐபோன் நொருங்கும் அளவுக்கு வெறித்தனமா பயிற்சி இருக்கிற எடுக்கிற ஏபி டிவிலியர்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரரான 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஏபி டிவில்லியர்ஸ். இவர்  நீண்ட காலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியின் சார்பாக விளையாடி வருகின்றார். அந்த வகையில்  இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான வலைப் பயிற்சியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தந்தைக்கு போட்ட மீம்ஸ்” தரமான பதிலளித்த வாஷிங்டன் சுந்தர்…. வைரலாகும் ட்விட்…!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரின் மீம்ஸ்-க்கு தரமான கருத்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தரின் பதில் வைரலாகி வருகின்றது. இந்தியா –  இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் போது இந்திய அணியின் வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும்  வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடியுள்ளார்.இதில் ரிஷப் பண்ட் சதமடித்து அதன்பின் அவுட்டாகி உள்ளார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களை எடுத்து இறுதிவரை நின்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யாரோ கோபப்படுகிறார்கள்” குறிப்பிட்ட இந்திய வீரர் ரிஷப் பண்ட்…. வைரலாகும் வீடியோ…!!

இந்தியா – இங்கிலாந்து அணியின்  4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரை குறிப்பிட்டு ரிஷப் பண்ட கூறிய வார்த்தை வைரலாகி வருகின்றது.. இந்தியா – இங்கிலாந்து அணி 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி மதிய இடைவேளை வரை 74 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாக் க்ராவ்லி 9 ரன்களிலும், சிப்லி 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பணத்திற்கு தன் முக்கியத்துவம்”…. ஐபிஎல் ஆடினால் எனக்கு கிரிக்கெட் மறந்துவிடும்…. மன்னிப்பு கேட்ட வேகப்பந்துவீச்சாளர்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தை விட பணத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலும் விளையாடி வருபவர் டேல் ஸ்டெய்ன். இவர் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். மேலும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. அங்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?, ஏலம் எவ்வளவு பணம் எடுக்கலாம்? என்பதுதான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டநாயகனுக்கு 5 லிட்டர் பெட்ரோல்”…. கிரிக்கெட் தொடரில் நடந்த…. சுவாரசிய சம்பவம்…!!

மத்தியபிரதேசத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற கிரிக்கெட் வீரருக்கு பரிசாக 5லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கரூரில் பெட்ரோல்பங்க் உரிமையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் தினத்தன்று பிழையில்லாமல் திருக்குறள் சொல்லியவர்களுக்கு  ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கியுள்ளார். இதையடுத்து பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து  பெட்ரோல் பங்கில் ஒருவர் கிரிக்கெட் மட்டை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் தொடரில்…. இவர்கள் மூவருக்கு ஓய்வு…. வெளியான தகவல்…!!

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் மூவருக்கு ஓய்வு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் மார்ச் 4 அன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை யடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் மார்ச் 23 அன்று பூனேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்  […]

Categories
விளையாட்டு

“500 முதல் 1000 விக்கெட்டுகள்” அகமதாபாத் பிட்ச்க்கு…. கருத்து தெரிவித்த யுவராஜ்சிங்…. பதிலளித்த கௌதம் கம்பீர்…!!

இந்தியா – இங்கிலாந்து அணியின் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் பற்றி யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளனர். அகமதாபாத் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து  அணியின் இரண்டு நாட்கள் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீசியுள்ளார். மேலும் நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் சரியில்லை என்றும், இதில் ஹர்பஜன்சிங் அல்லது அணில் கும்ப்ளே ஆகியோர் பந்துவீசி இருந்தால் 800 முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை கைப்பற்றனும்”…. வாழைப்பழத்தியில் எழுதி…. ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் வழிபாடு…!!

 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற ரசிகர்கள் வழிபாடு செய்துள்ளனர் . ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 13 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த 13 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு தடவை கூட வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதே இல்லை. இந்த அணி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறுகின்றது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மதம் நடைபெற உள்ள ஐபில் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அதிக சிக்சர்களை அடித்து”…. சர்வதேச டி20 தொடரில்…. சாதனை படைத்த வீரர்…!!

நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் சர்வதேச டி20 தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 127 சிக்சர்களை அடித்து இந்திய அணியின் அதிரடி வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அதனை முறியடித்த கப்தில் 132 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நியூசிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என் அம்மா சொன்னது சரிதான்”… ஐபிஎல் ஏலம் குறித்து … ட்விட்டரில் பதிவிட்ட தினேஷ் கார்த்திக்…!!

ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவது குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.  2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெற இருப்பதால் நேற்று முன்தினம் சென்னையில் இதற்கான சிறிய ஏலம் நடை பெற்றது. இதில் சுமார் 292 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதிக தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். 16.25 கோடிக்கு கிரிஸ் மோரிஸ், 14 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனும் ஏலத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரின் தகுதி என்ன..?” அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே… கிருஷ்ணப்பா கவுதம் பெற்ற புதிய சாதனை…!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஐபிஎல் தொடரின் 14வது போட்டி வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. தற்போது சென்னையில் இதற்கான மினி ஏலம் நடக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்கள் 22 பேர் உட்பட 57 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து 143 கோடியே 69 லட்சத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் ஐபிஎல் எலத்திலேயே கிருஷ்ணப்பா கௌதம் இம்முறை புதிய சாதனையை படைத்திருக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விறுவிறுப்பாக நடைபெற்ற IPL ஏலம்”…. அதிக விலைபோன TOP-5 வீரர்கள் யாருன்னு தெரியுமா…? முழு விபரம் இதோ…!!

IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட 5  கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் எடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களையே அதிக கவனத்துடன்  IPL அணி குழுவினர் தேர்வு செய்தனர். இதில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிஸை பஞ்சாப் அணி 16. 5 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்து 15 கோடி ரூபாய்க்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவா உணர வச்சிட்டாங்க”… அவங்களுக்கு ரொம்ப நன்றி… ட்வீட் செய்த அஸ்வின்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை  317 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என்ற கணக்கில்  இந்திய அணி சமநிலை ஆக்கியது. இந்த கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர்  அஸ்வின்  முதல் இன்னிங்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில்… இங்கிலாந்தை மிரட்டி வரும் இந்தியா… அலற விட்ட அஸ்வின்…!!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 134 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது.  சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இதில் தமிழக வீரரும் அணியின் சுழற்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டிக்கு நடுவே… ஸ்டோக்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்ட்… வைரலாகும் வீடியோ…!!

சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் பென்  ஸ்டோக்ஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்களுக்கு கைகுலுக்க மாட்டேன்… மறுத்த கத்தார் இளவரசர்… இது தான் காரணமா…?

உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் விருது வழங்கிய போது கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார்.  உலககோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்குவதற்கான விழா நடைபெற்றுள்ளது. கத்தாரில் டைக்ரஸ் UANL மற்றும் பேயெர்ன் மூனிச் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றியுள்ள நடுவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை யாரும் பெற்றிராத சாதனை… டெஸ்ட் தொடரில் சதம் அடித்த… ரோஹித் சர்மா அசத்தல் …!!

ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் 7 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார்.  சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து உடனடியாக ஆட்டமிழந்தனர். எனினும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாவது டி-20 தொடர்… 6 விக்கெட் வித்தியாசத்தில்… பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி…!!

லாகூரில் நடைபெற்ற இரண்டாம் டி20 தொடரில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.  லாகூரில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் விக்கெட் கீப்பரான ரிஸ்வான் அரைசதம் விளாசி 51 ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார். மற்றோரு புறம் 30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்… இந்த தொடரில் பங்கேற்கும் நடராஜன்… பிசிசிஐ அறிவிப்பு…!!

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.   இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தன் அபார திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் பின்பு இங்கிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இவர் இந்திய அணிக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் […]

Categories

Tech |