Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடராஜனை பார்த்து நடந்துக்கோங்க…. கோலியை சாடிய கவாஸ்கர்…!!

நடராஜனை பார்த்து கத்துக்கோங்க என்று கவாஸ்கர் கேப்டன் கோலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியும், டி20 தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள்  போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் மோசமான தோல்வி…! காரணமான 4 விஷயங்கள் …!!

இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள் என்ன. அலசுவோம்.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா கடுமையான போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயங்கர சொதப்பலான செகண்ட் இன்னிங்ஸ் மூலம் இரண்டரை நாளிலேயே தோல்வியை தழுவியுள்ளது. வெறும் 36 ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் வரலாற்றில் நான்காவது குறைவான ஸ்கோரைப் பதிவுசெய்துள்ளது. இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள் என்ன. அலசுவோம். அணித்தேர்வு: போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாகவே இந்திய அணி ப்ளேயிங் லெவனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி இல்லாத இந்திய அணி…! மீட்க யாரும் இல்லை… மிகப்பெரிய சிக்கலில்…!!

“கோலி இல்லாத நிலையில், இதுபோன்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்க யாரும் இல்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கோலி இல்லாத இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒய்ட்- வாஷ் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருப்பது அவர்களை உளவியல் ரீதியாகக் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியிருக்கிறார். அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான பகல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து…. முக்கிய வீரர் விலகல்…!!

இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் எஞ்சிய டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பேட் செய்தபோது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் எஞ்சிய மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஷாமி ஆட மாட்டார். அவருக்கு பதில் யார்கர்  மன்னன் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான…. இந்திய அணியில் இடம்பெறுவார்? – நடராஜன்…!!

தமிழக வீரர் நடராஜன் அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இருக்கும் நான்கு முக்கிய பவீரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதால் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அற்புதமாக விளையாடி அனைவரையும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரன் மெஷினுக்கே 1st இடம்….! புதிய சாதனை படைக்க போகும் கோலி…. !!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியாக 9.30க்கு தொடங்குது….. வரலாற்றில் இதுவே முதல் முறை…. வெளியான ருசிகர தகவல் …!!

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில், பிரத்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விகாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், மொகமத் சஷி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டியை சந்திக்க உள்ளது இதுவே முதல் முறை. ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸி.க்‍கு எதிரான டெஸ்ட் இந்திய அணிக்‍கு சவாலாக இருக்‍கும் …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய அனைத்து பிங்க் பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் முதல் போட்டி விருவிருப்பான போட்டியாக இருக்கும். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல வருடங்களுக்குப் பிறகு மோதுகிறது. இந்தப் போட்டி மிகவும் சிறப்பாக இருக்கும். இரவு – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் – வெளுத்து வாங்கிய ஐகோர்ட் ..!!

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்க கோரி பரசுராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இதே நிலைதான் இருக்கின்றது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். விளையாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பான்டிங்கின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் கோலி …!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு – பார்தீவ் பட்டேல் அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்தீவ் பட்டேல் அனைத்து வகை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பார்தீவ் பட்டேல் மார்ச் மாதம் 9ஆம் தேதி 1985 ஆண்டு பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்தார். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மவனே என்ன மோதிட வாடா” அதிரடி பேட்ஸ்மேன்களிடம் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்…. வைரலாகும் MEME….!!

இந்திய அணி தோற்ற நிலையிலும் 2 தமிழக வீரர்களின் சிறப்பான விளையாட்டை கண்டு தமிழக மக்கள் பூரிப்படைந்துள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IND vs AUS” 11-வது ஓவரில் நடந்த குழப்பம்…. தோல்விக்கு காரணம் இது தான்….?

டி-20 போட்டியின் 3 வது தொடரில் இன்று இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை முழுவதுமாக வாஷ் அவுட் செய்யும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டு… அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்… என்னென்ன தெரியுமா..?

2020ஆம் ஆண்டு டுவிட்டரில் தாக்கம் செலுத்திய பதிவுகள் குறித்து ட்விட்டர் நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றது. சமூக வலைதளங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. அதிலும் கொரோனா காலம் என்பதால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் எப்பொழுதும் செல்போனும் கையுமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி கொண்டேதான் இருந்திருக்கின்றனர். மக்கள் பிரபலங்கள் அதிகம் நாடும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான பயன்பாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நட்டு இந்தியாவின் சொத்து” கோலி பாராட்டியதால்…. உலக கோப்பை தொடரில்…. நடராஜனுக்கு உறுதி…!!

கோலி, நடராஜனை வெகுவாக பாராட்டியதன் மூலம் அவர் வரும் உலக கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின்  வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் நடராஜனை புகழ்ந்து தள்ளி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி நடராஜன் இந்திய அணிக்கு சொத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸர்களை விளாசி” ஆஸ்திரேலியாவை பாண்டியா பந்தாடிட்டாரு…. இந்திய அணி வெற்றி…!!

இரண்டாவது டி-20 போட்டியில் பாண்டியா விளாசிய சிக்ஸர்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இன்று 2வது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியா வெற்றி பெற்ற 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஜோடி பவர் பிளே ஓவரில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு… விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி..!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கான விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி அதற்கு அடிமையாகி, பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பலரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல ஆந்திரா மாநிலத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க… நடராஜனின் சாதனை பயணம் தொடரட்டும்… ஓ பன்னீர்செல்வம் ட்வீட்..!!

இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகுது FAU-G… டவுன்லோட் பண்ணனுமா… அப்ப இத பாருங்க..!!

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு இணையான  புதிய விளையாட்டு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளிவர உள்ளது. சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட FAU-G விளையாட்டு விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய ப்ரி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug ப்ரிரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன ஐடியா வச்சிருக்காரு” ஒண்ணுமே புரியல…. கோலி மீது பாய்ந்த கம்பீர்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி செய்த தவறுகளுக்காக கம்பீர் அவரை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சு பெரிதாக இல்லை என்றும், இதற்கு காரணம் விராட் கோலி தான் காரணம் என்றும் முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மேட்சுக்கு நடுவே டான்ஸ்… பட்டையை கிளப்பிய வார்னர்… வைரலாகும் வீடியோ..!!

மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் திடீரென்று புட்டபொம்மா பாட்டிற்கு நடனம் ஆடியது வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது வார்னர் தனது மனைவியுடன் டிக்டாக்கில் நடனமாடி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது அனைத்தும் பயங்கர வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வார்னர் புட்டபொம்மா நடனம் உலகையே கலக்கியது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தின் போது பில்டிங் செய்த வார்னர் திடீரென்று முட்டபொம்மா ஸ்டெப்பை […]

Categories
விளையாட்டு

என் ஹீரோ…. உங்களுக்காக தான் பார்த்தேன்…. வருத்தம் தெரிவித்த கங்குலி…!!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ஹீரோ மறைந்து விட்டதாக கூறி கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கால்பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவானாக திகழ்ந்தவர் டீகோ மரடோனா. அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தனது வீட்டில் இருந்தபோது 60 வயதான மரடோனா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

BREAKING: மிக பிரபல விளையாட்டு ஜாம்பவான் மரடோனா காலமானார் ..!!

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கடற்கரையில் குழந்தையை புதைத்து விளையாடிய தம்பதி… பாதுகாப்புத் துறையினர் எச்சரிப்பு..!!

கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர். அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி வேற மாதிரி ஆள்… சத்தமாக சிரிப்பாரு… நெகிழ்ந்து போன ஆடம் ஸம்பா …!!

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் நவ.27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி தொடர் குறித்தும், விராட் கோலி பற்றியும் ஆடம் ஸம்பா மனம் திறந்துள்ளார். அதில், ”ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றபோது, நான் எனது ஓய்வறையில் இருந்தேன். அப்போது திடீரென எனது அலைபேசிக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படினாலும் OK தான்… மெர்சலான ஹிட்மேன்… அதிரடி பேட்டி

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது எந்த வரிசையில் வேண்டுமானலும் களமிறங்கி விளையாட தயாராகவுள்ளேன் என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ரோஹித் […]

Categories
கால் பந்து விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இன்று தொடங்கிய போட்டி…. முதல் வெற்றியை பதித்த அணி….!!

இன்று தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோஹன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் இன்று முதல் கோவாவில் வைத்து ஏழாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவர் இல்ல இருவர்.. இந்திய அணிக்கு பெரிய இழப்பு… ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கப்போவது என்ன ?

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடர் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2ஆம் தேதியோடு ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன் இந்த அவசர முடிவு ? வெளியான அறிவிப்பால்… க்ளோஸ் ஆன எதிர்பார்ப்பு …!!

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் லங்கா பிரிமியர் லீக்.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்கா லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிங்கா கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இந்த முறை 10 இல்ல 11…. அதிகரித்த போட்டிகள்… யாரு சாம்பியன்….?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகளுடன் புதிதாக பதினோராவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இணைந்துள்ளது கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் ஏழாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டில் 10 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக சேர்ந்துள்ளது. கால்பந்து ரசிகர்களை அதிக அளவு கொண்ட மேற்கு வங்கத்திலிருந்து இரண்டாவது அணியாக ஈஸ்ட் பெங்கால் […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

கால்பந்து ரசிகர்களுக்கு…. “இந்தியன் சூப்பர் லீக்” நாளை முதல் ஆரம்பம்….!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய CSK…! ”களமிறங்கும் 5வீரர்கள்”… முடிவு எடுத்த நிர்வாகம்..!!

அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி எந்த 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான விளையாடியதால் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தொடரிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டன் டோனி தற்போது புதிய அணியை அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக அடுத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய அணி… ODI, T20 போட்டி அறிவிப்பு… பிசிசிஐ

அடுத்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்  20ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணி மோத இருக்கும் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்றது. இங்கிலாந்து, தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி வேண்டாம்….15 கோடி சென்னை அணி நஷ்டப்படும்…. முன்னாள் இந்திய வீரரின் கருத்து…!!!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி விளையாடினால் 15 கோடி இழப்பு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என  பிசிசிஐ தலைவரான கங்குலி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்தில் விளையாடாமல் அவரை கழட்டி விட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருக்கு கொரோனா – அதிர்ச்சியில் கிரிக்கெட் பிரியர்கள் …!!

வங்கதேச தேர்வுக்குழு தலைவர் ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது . உலகெங்கும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் பல்வேறு பிரபலங்களும்  பாதிக்கப்பட்டனர் . ஆல்ரவுண்டர் முஹமுதுல்லா, வங்கதேச கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் மோமினுல் ஹாக் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வங்கதேச தேர்வு குழு தலைவரான ஹபிபுல் பஷருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் பாதுகாப்பாக இருந்தும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் 102 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு பெருமையா இருக்கு…. இது எங்களுக்கான நேரம்…. தாதா அதிரடி ட்விட் …!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் 2021 உலகக்கோப்பை இது இந்தியாவுக்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தன்று ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெரியாம கொண்டு வந்துட்டேன்… இனி இப்படி நடக்காது… அபராதம் கட்டிய குருணால் பாண்டியா…!!

குருணால் பாண்டியா அளவுக்கு அதிகமான தங்கத்தைத் கொண்டு வந்ததற்காக அபராதம் கட்டி மும்பை விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.   மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.பின் அந்த அணியினர் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பினர். மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான குருணால் பாண்டியாவிடம் கடிகாரம், அளவுக்கதிகமான தங்கம் உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தது தெரியவந்தது.   பின்னர் அவரிடம் நடத்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020…. யாருக்கு என்ன விருது ? முழுப்பட்டியல் …!!

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,  ஐந்தாவது முறை சம்பியன் பட்டம் வென்றது.இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டன. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை அணியை சார்ந்த போல்ட் தேர்வு செய்யப்பட்டார். மதிப்பு மிக்க வீரர் என்ற தொடரில் தொடர் நாயகன் விருது ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதே எங்களுக்கு சாதனை தான்… அடுத்தமுறை கோப்பையை வெல்வோம்… ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை …!!

ஐபிஎல் இறுதிப்போட்டி வரை வந்ததே மிகப்பெரிய சாதனைதான்  என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஐபிஎஸ் சீசனின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியுற்று தடுமாறியது. அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோற்றதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஹிட் மேன்” வெறியாட்டம்…. ”5-வது முறை” கோப்பையை வென்று ”அசத்திய மும்பை” ….!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் – பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர், 20 ஓவர் கிரிக்கெட், டெஸ்ட் போட்டி என அடுத்தடுத்து மூன்று தொடர்களில் விளையாட இருக்கின்றது. இதற்காக இந்திய அணி வீரக்ளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் தற்போது விராட் கோலி விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெல்லியை” எகிறி அடித்து… கெத்தாக பைனலுக்கு பறந்த ”மும்பை”…! 57 ரன்களில் அபார வெற்றி …..!!

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ப்ளே ஆப் சுற்றில் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் மும்பை – டெல்லி அணி ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த முறை #IPLCup இவர்களுக்குத்தான்..! முன்பே கணித்த ஜோதிடர் …!!

இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என்ன நடக்க போகிறது ? என்பதை ஜூன் மாதமே ஜோதிடர் கணித்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த முறையை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்கபோகிறது ? என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். மிதுள் என்ற நபர் ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டு உள்ளார். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளசுகளே மண்ட பத்திரம்…. கவனமா விளையாடுங்க…. அறிவுரை சொன்ன சச்சின் …!!

இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் யாருக்கு இருக்கு வாய்ப்பு ? புள்ளி பட்டியல் இதோ …!!

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. 13வது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் நாலு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மீதமுள்ள 6 அணிகளுக்கிடையே பிளே ஆப் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. யார் பிளே ஆப் செல்வார் என்று எதிர்பார்ப்பு 6 அணி ரசிகர்கள் மத்தியிலே இருந்து வருகிறது. இன்றைய போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பைக்கு அடுத்து நாங்க தாண்டா…! பாய்ச்சல் வேகத்தில் செல்லும் ஹைதராபாத் …!!

பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.  இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!!

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்தை கிண்டல் செய்த சேவாக் – கொந்தளித்த ரசிகர்கள் …!!

காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், ரோகித் சர்மாவை வடா பாவ் என அழைத்தார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரோகித்சர்மா மட்டுமின்றி சவுரப் திவாரியையும் சமோசா பாவ் என சேவாக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணி கலக்கிக் கொண்டு இருந்தாலும், ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார பாத்து என்ன சொன்னீங்க ? எங்களை பாருங்க… ருத்ராஜ் கெய்க்குவாட் பதிலடி …!!

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்குவாட் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். துபாயில் நடந்த  ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணியில் விராட் கோலி 50, ஏபி டி வில்லியர்ஸ் 39 ரன் எடுக்க அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெய்க்வாட் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!

சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார். அதன்படி […]

Categories

Tech |