சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கிய சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம் மற்றும் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி மைதானதில் வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த கிரிக்கெட் முகாமில் 6 முதல் 23 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் […]
Tag: விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கூறியுள்ளதாவது, ‘இது நல்ல வெற்றி. குறைந்த அளவில் உள்ள ஸ்கோரை விரட்டும் போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். இறுதியில் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு சென்று விடக்கூடாது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு […]
கடந்த 26ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 6 பந்துகளில் […]
வங்காளதேசஅணியானது தென்ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் இன்று மோதியது . இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக சரல் எர்வீ மற்றும் கேப்டன் டீன் எல்கரும் ஆடத்தொடங்கினர். இதில் சரல் எர்வீ 41 ரன்கள் எடுத்தும் அணியின் கேப்டனான எல்கர் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இதையடுத்து அடுத்த ஆட்டக்காரர்களான ரியான் ரிக்கல்சன் 21 ரன்னிலும் மற்றும் கீகன் பீட்டர்சன் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா […]
ஐபிஎல் ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக இருந்த ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து போட்டியிட்டு வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எந்த அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததால் வர்ணனையாளராக மாறியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அனைத்து அணிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பான அணிதான் எனத் தெரிவித்த அவர், இம்முறை பெங்களூர், சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள்தான் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது எனத் […]
முதல் ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களின் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகள் எடுத்து 7வது இடத்திலிருந்து 8-வது இடத்திலும் முன்னாள் கேப்டனான விராட் கோலி 742 புள்ளிகள் எடுத்து 9-வது இடத்திலிருந்து 10 வது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளார்கள். இதை அடுத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா […]
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்ற பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் ஏற்பட்டதால் டி20 போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார். ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி அணி விலைக்கு வாங்கியது. சர்வதேச போட்டி இருப்பதால் முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மிட்செல் மார்ஷல் டெல்லி அணியுடன் இணைகிறார் என்பது தெரியவந்துள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி போட்டியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்தது. இந்த அணியின் கேப்டனான சாம்சன் அதிகமாக 55 ரன்கள் அடித்தருந்தார். ஐதராபாத் அணியானது 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மார்க் ராம் 57 ரன்களும் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் […]
கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு மும்பை சாம்பியனுக்கும் இடையில் மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்றது. அதனால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். இந்த மேட்சில் டெக்கான் சார்ஜஸ் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை குவித்தது. இதில் ரோகித் சர்மா 38 ரன்களை அடித்திருந்தார். இதன்பிறகு களமிறங்கிய மும்பை சாம்பியன்ஸ் அணி 15 ஓவரில் 103 […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ஆட்டகளில் முதல் 3 நாட்களில் நடந்த போட்டியில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஆடிய ஹெட்மயர் 13 பந்தில் 32 ரன்னும், படிக்கல் 29 பந்தில் 41 ரன்னும், கேப்டன் சஞ்சு […]
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டத்தில் இடம் பிடித்துள்ள 4 அணிகள் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் 5 முதல் 8-வது இடத்தை பிடித்துள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஆட்டத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து 2 நாள் இடைவேளைக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் […]
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மோதிக்கொண்டன. இதில் இளம் வீரரான பதோனி எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளார். மேலும் இந்திய இளம் வீரராக 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து 22 வயதில் அரைசதம் அடித்தது பெருமை கொள்ளத்தக்கது. இந்நிலையில் முதல் வீரராக டெல்லி அணியில் இடம் பிடித்த கோசுவாமி 19 வயதில் அரை […]
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஆட்டத்தை வென்றார். மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் […]
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து மற்றும் தாய்லாந்து வீரரான பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இதில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பி வி சிந்து பூசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் இந்திய வீராங்கனையான பி வி சிந்து வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”சுவிஸ் ஓபன் 2022ல் […]
நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் எதிர் எதிராக மோதிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மெதுவாக பந்து வீசி ஆட்டத்தை அதிக நேரம் இழுத்து சென்றதால் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதிக்கொண்டன. கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு மகேந்திர சிங் தோனி பங்கேற்ற முதல் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டத்தை விளாசினார். தனது 24வது அரைசதத்தை வெறும் 38 பந்துகளில் அவர் அடித்துள்ளார். 3 ஆண்டுகள் கழித்து தோனி அடித்த அரை சதமாக இது விளங்குகிறது. தோனியின் கடைசி அரை சதம் 2019 ஆண்டு ஏப்ரல் […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியானது அடுத்த ஆண்டு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் கேப்டனான கங்குலி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான ஐ.பி.எல் காட்சி போட்டியானது 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த காட்சி போட்டி நடைபெறாததால் இந்த ஆண்டு ஐ.பி.எல். காட்சி போட்டியினை நடத்தவுள்ளது. ஐ.பி.எல். பிளே ஆப் போட்டி நடைபெறும் தினத்தன்று 4 காட்சி போட்டிகளும் நடக்க […]
CSK வின் பலம், பலவீனம்: சென்னை அணியை பொறுத்த வரை அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று எடுத்துக்கொண்டால் அதற்க்கு முழு காரணம் டோனியின் கேப்டன்சி என்றே கூறலாம். அவர் இதுவரை சென்னை அணிக்காக நான்கு கோப்பைகள் வென்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த 2022 வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது கேப்டன் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்து, ஜட்டு வை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL லில் சிறந்த அணி என்று […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக சிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ்.டோனி திடீரென பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஜடேஜாவை சி.எஸ்.கே அணி நியமித்தது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, எம். எஸ்.டோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான […]
15 வது ஐ பி எல் போட்டியானது கோலாகலமான முறையில் ரசிக பெருமக்களுடன் இன்று தொடங்கியது. இதில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் லீக் போட்டியானது மும்பை […]
IPL 2022 இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR மோத உள்ளனர். CSK- சென்னை அணி தரப்பில் கேப்டனாக செயல் பட்டு வந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜடேஜா கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நிலையில் அவர் கூறியதாவது:- எனக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது என்றும், டோனி எனக்கு துணையாக உள்ளர். எனவே நான் தயக்கம் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் சிறந்த ஆட்ட வீரரான ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் ஜடேஜா 385 புள்ளிகள் எடுத்து முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாஸன் ஹோல்டர் 357 புள்ளிகள் எடுத்து 2 வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளன. அதில் விராட் கோலி […]
கொரோனா தொற்று காரணமாக சிறிது காலம் விளையாட்டு அரங்கத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காத நிலையில் ஐ.பி.எல் போட்டி அமைப்பு குழு சார்பில் ஒரு செய்தி ஒன்று வெளியிடப்பட்டடுள்ளது. அந்த செய்தி குறித்து கூறியுள்ளதாவது கொரோனா தொற்று காரணமாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்துக்கு திரும்பும் ரசிகர்களை ஐ.பி.எல். போட்டி வரவேற்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதோடு மும்பை, நவிமும்பை, புனேயில் நடைபெறும் இந்த போட்டியானது மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும் […]
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம், வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய நீச்சல் வீரர்களான கெனிஷா குப்தா, சஜன் பிரகாஷ், மானா படேல் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. சஜனுக்கு, ரூ.15.1 லட்சமும் , ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும் , மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு […]
மும்பையில் வருகிற 26-ந்தேதி 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வகை ஜெர்சியானது தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் மூலம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 முறை கோப்பையை கைப்பற்றியதால் 4 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மற்றும் மூன்று சக்கர […]
வருகிற மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதால் முதல் போட்டியில் களமிறங்குவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருடன் ஐபிஎல்-ல் அறிமுக வீரராக டேவோன் கான்வே களமிறங்குவார். மேலும் மொயின் அலி 2-வது போட்டியில் பங்கேற்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இங்கிலாந்து வீரரான ஆல்-ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொயின் அலி தற்போது இங்கிலாந்தில் இருந்து வரும் நிலையில் இந்தியா வருதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் . ஆனால் அவருக்கு இன்னும் பயணத்துக்கான விசா கிடைக்காத்ததால் சென்னை […]
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கவுள்ளது . 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது. லக்னோ அணிக்கு கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் அந்த அணிக்கு ஆலோசகராக உள்ளார். லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது:- என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் […]
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் முதல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐ.பி.எல். ஏலத்தில் […]
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. இதனால் சுரேஷ் ரெய்னா அடுத்த அவதாரமாக இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஏற்கனவே வர்ணனையாளராக உள்ள நிலையில் இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார். எனவே இது எனக்கு மிக […]
ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர் ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. […]
2022 ஆம் ஆண்டு வருகிற 26ந் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதோடு 27ந் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷேன் வாட்சன் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஷேன் வாட்சன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் ஒன்று டெல்லி. டெல்லி கேபிடல் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் […]
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியானது இன்று முதல் 27 தேதி வரை அந்நாட்டின் பாசெல் நகரில் வைத்து நடக்கவுள்ளது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்.எஸ்.பிரனாய், காஷ்யப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆகார்ஷி காஷ்யப், ஆகியோர் பங்கேற்கின்றனர். இதையடுத்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, துருவ் […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம் தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய கால்பந்து அணி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதோடு பக்ரைன் மற்றும் பெலாரஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் பக்ரைன் தலைநகரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்த்தும் இதைத்தொடர்ந்து வரும் 26 தேதி பெலாரஸ் அணியுடனும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 […]
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு எதிராக 3 வது டெஸ்டு போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் 3வது டெஸ்ட் போட்டி நேற்று லாகூரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்ததோடு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜாகளமிறங்கினார். இதில் எதிர்பாராத விதமாக 7 ரன்னில் டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் காவஜா சதம் அடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து […]
இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிக்கான இறுதி ஆட்டதில் இந்திய வீரரான லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்சல் சென்னை எதிர்த்து போட்டியிட்டார். இந்த போட்டியில் 21-10, 21-15 என்ற என்ற செட் கணக்கில் விக்டர் அக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இந்திய பேட்மின்டன் வீரரான லக்சயா சென் 2வது இடத்தை பிடித்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்ததோடு டுவிட்டரில் அவர் […]
கோவாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் சூப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணி போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதை தொடர்ந்து 1-1 என்ற விகிதத்தில் 2 அணியும் சமநிலையாக கோல் அடித்தது. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாமல் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை […]
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி பாரிபஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4ம் நிலையில் உள்ள ரபேல் நடால் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் மோதினர். இந்நிலையில் 20 வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் ஒரே செட்டில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார். நடால் அரையிறுதி போட்டியில் 3 மணி நேரமாக சக நாட்டை சேர்ந்த அல்காரசை போராடி தோற்கடித்து வென்றார். ஆனால் இறுதி ஆட்டத்தில் எதிர்பாராவிதமாக தோல்வியடைந்ததோடு இந்த […]
இலங்கையில் இந்த ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஜெனரல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் இருந்து வந்த ஜெய் ஷா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பதவி ஏற்றிருந்தார். அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. ” என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் இந்த பதவிக்கு தேர்வு செய்ததற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள […]
ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மலேசியாவின் நடப்பு சாம்பியனான லீக் ஜியாவுடன் போட்டியிட்டார். இந்த ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்றதோடு முதல் செட்டை லக்சயா […]
சுரேஷ் ரெய்னாவும் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் போட்டிக்கு வர்ணனையாளராக களமிறங்கவுள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கியவர சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பு வாய்ந்த வீரராக அவர் இருந்த போதும் இந்த ஆண்டின் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை. அதோடு மாற்று வீரராக கூட யாரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறந்த வர்ணனையாளராக […]
பெங்களூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது 238ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வாயிலாக டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதற்கிடையில் நான் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளேன். அதில் […]
பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 63 ஆகும். ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் பட்டம் வென்றுள்ளார். ஹால் வார இறுதியில் 3 மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் ஆதரவில் வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இவரது மறைவுக்கு WWE தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. ஸ்காட் ஹால் கடந்த 1984 ஆம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை […]
வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் பிப்ரவரி மாதத்திற்கான ICC -யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின்போது ஸ்ரேயாஸ் அய்யரின் வெறித்தனமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் விருத்தியா அரவிந்த், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி போன்றோரை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் அய்யர் பெற்றுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர், அகமதாபாத் மைதானத்தில் […]
2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில் விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் […]
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார். ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் ஆட்டத்தின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த லக்சயா சென் உலகச் சாம்பியனான விக்டரை எதிர்த்து விளையாடினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்தப் போட்டியில் 21-13,12-21,22-20 என்ற செட்களில் வெற்றி பெற்ற லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீரருடன் இந்திய வீரர் […]
டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தர வரிசையை ஐசிசி. வெளியிட்டது. அந்த வகையில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாவது இடத்தை பிடித்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர், 3-வது இடத்தில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கின்றனர். இதேபோன்று பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் இருக்கிறார். அதன்பின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் […]
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் பேட்டிங்கில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 6 விக்கெட் கைப்பற்றியதன் வாயிலாக சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். அதாவது கபில் தேவ் மொத்தம் 434 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். ஆனால் அஸ்வின் […]
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதுள்ள அஸ்வின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது “28 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்தபோது நான் என் தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். மேலும் கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையினை தாண்டுவேன் என […]
பள்ளிகளில் இறைவணக்கம், pet போன்ற வகுப்புகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலங்களில் பள்ளிகள் மூடப் பட்டிருந்தது. பாதிப்பு சற்று குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வான இறைவணக்கம், விளையாட்டு பாட வகுப்புகள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும் பள்ளிகளில் இது போன்ற தடைகள் இன்னும் நீக்கப்படாமல் தான் உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]