மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]
Tag: விழிப்புணர்வு
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். மேலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது உஷாராக இருப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அவர் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பிஎப் 7 சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு […]
போலீஸ் இன்ஸ்பெக்டரின் விழிப்புணர்வு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் அண்மைக்காலமாகவே திருட்டு, ஜேப்படி உள்ளிட்ட சம்பவங்களும் இணையதளம் மோசடி, செல்போன் மூலம் ஓடிபி, ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் எப்படியும் ஏமாற்றி மோசடி செய்து விடுகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவில் […]
உலக கோப்பை ஆக்கி போட்டி தொடங்க உள்ளதை முன்னிட்டு வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக விழிப்புணர்வு ஆக்கி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கோவில்பட்டி நகர சபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மேலும் பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கியுள்ளார். இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இறுதிப் போட்டியில் திட்டங்குளம் பாரதி […]
விவசாயிகள் விளைபொருட்கள் இல்லாமல் விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே இருக்கும் சங்கரன் பந்தலில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்களை விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த முகாமில் நாகை விற்பனை குழு அலுவலர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் உழவர் நல துறையின் நலத்திட்டங்களையும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டம் குறித்தும் விற்பனை கூட வசதிகள் […]
ஆன்லைன் மோசடி குறித்து ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, சோசியல் மீடியாவில் மக்களிடம் நண்பர்களாகி ஈஸியாக ஏமாற்றி வருகின்றார்கள். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்வதை மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர்க்க […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி […]
போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். அவர்கள் சட்டம் மற்றும் […]
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது. தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, […]
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு […]
உலக அளவில் பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோய் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்களுக்குத்தான் அதிக அளவில் ஏற்படும் என்று கூறப்படுவதால் பெண்கள் வருடம் தோறும் முறையாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதன் பிறகு சிறிய வயதில் வயதுக்கு வருவது மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து வருவது, குழந்தைகளுக்கு […]
வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் […]
வாகன சட்டத்திருத்தம் மூலமாக மிக கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது அதனால் அபராத கட்டண உயர்வை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் […]
முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]
சின்னசேலம் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கு பட்டாசு வெடிக்கும் போது நீளமான பத்துக்குச்சியை பயன்படுத்த வேண்டும். கால்களில் காலணிகளை அணிந்திருக்க வேண்டும். நாட்டு வெடிகளை பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது. அருகில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு […]
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17ஆம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சார்பாக உலக விபத்து காய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு துணைத்தலைவர் டாக்டர் முகமது ரபிக் தலைமை தாங்க மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உறைவிட மருத்துவ அதிகாரி ஷியாம் சுந்தரம் முன்னிலை வகித்தார்கள். இதை டீன் ரவிச்சந்திரன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி […]
அண்மை காலமாக ஆன்லைன் வாயிலாக பல்வேறு வகை மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்புகொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன்ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புது ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் கும்பல் உங்களது அலுவலகத்தில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள். உங்களது இன்பாக்ஸில் வந்து, என் கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என […]
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், பல்லவன் இல்லத்திலிருந்து இன்று இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் முதற்கட்டமாக காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை போன்ற […]
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை போலீசார் நடத்தினார்கள். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் கிராம மக்களிடம் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட்டர் மருதமுத்து, போலீஸ் உமா உள்ளிட்டோர் சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்கள் கூறியதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஒவ்வொரு காவல் நிலையத்தில் செயல்படும். பெண்கள் உதவி மைய […]
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொது சபை வருகின்ற 2023 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் மக்காச்சோளம், தவிர சிறு தானியங்கள் உற்பத்திய உயர்த்தவும் பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் இறை இறையன்பு […]
நாகை ஆரிய நாட்டு தெரு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிமாறனின் மகன் ஹரிஹர மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த மாதம் 18ம் தேதி நாகையிலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரம் தூத்துக்குடி கன்னியாகுமரி ஊட்டி கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்ட ஹரிஹர மாதவன் இன்று 27 நாட்களுக்குப் பின் நாகை […]
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க இருக்கின்றார். இந்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கின்றது. பொதுவாகவே தனது படங்களில் போதை பொருட்கள் பற்றி குறிப்பிடுவது லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கின்றார். அது ஏன் என்பது குறித்த அவர் பேசியபோது தற்போது போதை பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகின்றது. இதை முற்றிலுமாக […]
செட்டி நாயக்கன்பட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தாலும் அது மக்களிடையே எளிதில் சென்றடைவதில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதற்காக பேரணி, கலை நிகழ்ச்சிகள் என பலவற்றை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆனது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி […]
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மற்றும் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிகளில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல்லை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்த விவசாயத்திற்காக ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நெல் விவசாயம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் தற்போது பெய்த தென்மேற்கு பருவ மழையால் அணைகள், குளம் மற்றும் குட்டைகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஆனைமலை […]
கல்வராயன் மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மலைக்கு செல்லும் பாதை மிகவும் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடந்தது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பற்றிய மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இவற்றில் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை போன்ற துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மோட்டார்சைக்கிளில் போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த […]
சென்னை புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (55). இவர் மகாத்மாகாந்தியை போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா முழுதும் தன் மனைவி, மகள் ஆகியோருடன் நாகராஜன் பயணம் மேற்கொண்டு காந்திகொள்கை பற்றி மக்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கொடுங்கையூர் பகுதியிலுள்ள மதுக்கடை முன் காந்தி வேடம் அணிந்த நாகராஜன் தன் குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குவந்த மதுபிரியவர்களிடம் இருகைகளையும் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மெகா மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், எம்எல்ஏ போன்றோர் கலந்துக்கொண்டனர். தமிழகம் முழுதும் பெருகி வரும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுத்திடவும், போதைப்பொருட்கள் கடத்தலை இரும்புகரம் கொண்டு தடுத்திடவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வகையில் […]
கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பற்றி போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் கடந்த சில தினங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமை தாங்கினார். அவர் மீனவர் கிராம மக்களிடம் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கியுள்ளார். மேலும் யாரேனும் போதே பொருட்கள் விற்பது பற்றி தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை ஆட்சியர் வழங்கினார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை அடுத்து கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கூறியுள்ளதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை […]
75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் விதமாக நூதனமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்துரை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்பவர் தன்னுடைய கண் விழிகளில் […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திர தின விழாவை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஸ் உலகின் கண்கள் மாமல்லபுரத்தில் குவிந்துக்கிடக்கிறது. இதனிடையில் போட்டிக்கான விழிப்புணர்வுகளை அரசு ஒருபக்கம் செய்து வந்தாலும், தன்னார்வலர் ஒருவர் செய்த விழிப்புணர்வு அனைவரின் கவனத்தையும் அதிகரித்துள்ளது. அதாவது தண்ணீருக்கு அடியில் செஸ்விளையாடி அசத்தி இருக்கிறார் சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த். ஆழ்கடல் இவருக்கு நல்ல சிநேகிதம் ஆகும். மேலும் இவர் Scuba Diving என கூறப்படும் ஆழ்கடல் நீச்சல்பயிற்சியில் வித்தகர். அத்துடன் […]
பள்ளி மாணவர்களிடையே மனநலம் மற்றும் உடல் நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அசோக் நகர், அரசு மகளை மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது […]
பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகளில் […]
தூத்துக்குடியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்று பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆட்சியர் தலைமையிலான வீரர்களுக்கு செஸ் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியுள்ளதாவது, மாணவர்களாகிய நீங்கள் ஆர்வம் இருப்பதை படிக்கலாம், விளையாடலாம். படிப்பாக இருந்தாலும் சரி விளையாட்டாக இருந்தாலும் சரி தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஞாபக சக்தி, திட்டமிடுதல் ஆகிய […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு வ உ […]
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் ரம்யா, கவிதா போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தின் போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் துணி பையை பயன்படுத்துவோம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு என்ற பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் சார்பில் நேற்று “என் குப்பை என் பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி, துணை தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜேந்திரன், செயல் அலுவலர் குகன், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இவர்கள் அரிச்சந்திரா நதியின் ஆற்றங்கரையில் இருந்த […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முககவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் […]
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையத்தில் உள்ள சிகிச்சை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி […]
வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ” ‘பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்’ என்ற தலைப்பின் கீழ் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றது. தேனாம்பேட்டை லூத் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மை பணி மற்றும் […]
குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய் பற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குரங்கு காய்ச்சல் கொரோனா பரவிய அதே பாணியில் பரவரவில்லை. எனவே கொரோனா ஒழிப்பிற்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டும் என அவசியமில்லை. இருந்தபோதிலும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கின்றது. இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதுவே சந்தேகமாக […]
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்காக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்தி தலைமையில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான […]
துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் […]
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பேருந்துகளை நிறுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்வதால் எதிர்பாராத விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார்கள் அதிகம் வந்திருக்கின்றது. இதனால் ஆட்சியர் சாலை பாதுகாப்பு கூட்டத்தொடரில் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது என விழிப்புணர்வு […]
ரயில் பயணம் செய்யும்பொழுது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடியில் இருக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ்காரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ரயிலில் பயணிக்கும் பொழுது செல்பி எடுப்பது, செல்போன் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அவர்கள் பறை இசைத்து நடனத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆணையர் ஏகே பிரீத் பங்கேற்றார்.
ஆயுஷ்மான் பாரத் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக (Health Insurance) உள்ளது. நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியானது “இ-சஞ்சீவனி” முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் […]
சைபா் குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு பாடங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று சைபா் குற்றப்பிரிவு டிஜிபி அம்ரேஷ் புஜாரி வலியுறுத்தினாா். சென்னை அடையாறு டாக்டா் எம்ஜிஆா்-ஜானகி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய இணையவெளி கூட்டமைப்பு சாா்பாக “மின்வெளி ஏமாற்றுக்காரா்களிடம் ஏமாறாதே” எனும் பெயரில் கருத்தரங்கு நடந்தது. அந்த கருத்தரங்குக்கு கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் என்.காா்த்திகேயன் தலைமை தாங்கினார். அத்துடன் முன்னாள் தலைவா் பாலு சுவாமிநாதன், துணைத் தலைவா்கள் விஜயகுமாா், வி.என்.பிரேம் ஆனந்த் போன்றோர் […]