கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் யோகா பயிற்சியாளரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் யோகா குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணன் மைசூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கிருஷ்ணன் புதுக்கோட்டை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி கையில் தேசிய கொடியுடன் நடை பயணம் செய்து பொதுமக்களிடம் யோகா குடித்து விழிப்புணர்வை […]
Tag: விழிப்புணர்வு ஊர்வலம்
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது. பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தேர்தல் பிரிவு சார்பாக நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக ஆரம்பமானது. இதனை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் […]
சமரச தினவிழாவை முன்னிட்டு சமரச மையம் சார்பில் நீதிபதிகள் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சமரச தினவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சசிரேகா தலைமை தாங்கிய நிலையில் மாவட்ட சிறப்பு நீதிபதி நந்தினி ஊர்வலத்தை தொடக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஊர்வலத்தில் நீதிபதிகள், சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், சமரச மைய வக்கீல்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் […]
மக்களுக்கு உணர்த்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்று உள்ளது. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்று உள்ளது. இந்த ஊர்வலத்தில் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது தடுப்போம்!தடுப்போம்!, MDR TB தடுப்போம், முழு மருந்து திட்டம் முழுமையான சிகிச்சை, காசநோய்க்கு முறைப்படி சிகிச்சை எடுப்போம் என்று வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து […]
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்டித்து இந்த ஊர்வலம் நடந்தது. மேலும் நாமக்கல் […]
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பழனி-திண்டுக்கல் சாலை வழியாக ஒட்டன் சத்திரம் பேருந்து […]