Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொண்டு நாள் அனுசரிப்பு…. விழிப்புணர்வு பிரச்சாரம்…. பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்….!!

தீயணைப்பு தொண்டு நாளை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் தீயணைப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செங்கோடு பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஒரு வாரம்… சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சென்று வருவதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் இன்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் ….!!

பண்டிகை காலம் வரவிருப்பதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு கொரோனாவை கண்டறியும் சோதனைகளும் அதிகரிக்கபட்டுள்ளனர். எனினும் கொரோனா பரவல் குறையவில்லை இந்நிலையில் விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜென் அட்டோலன் என்ற மக்கள் […]

Categories

Tech |