விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரவில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆதித்யன் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Tag: விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவர் பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே ஜான்சி ராணிக்கு 17 வயதாக இருக்கும் பொழுது கிளின்டன் என்பவரோடு அவருடைய குடும்பத்தார் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சி ராணி கடந்த 18ஆம் தேதி அன்று தன்னுடைய காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று […]
விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் அப்துல் கலாம் வாலிபர்கள் விளையாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு குழுவின் சார்பில் கைப்பந்து, கபடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு தனி தனியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு வாலிபர்கள் மனு […]
அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதம் பூண்டி பகுதியில் இருந்து பனைமலை பேட்டை வரை நந்தன் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலமாக மாவட்ட முழுவதும் உள்ள 22 ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால், 5300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளை நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. […]
கல்லூரியின் முன்பாக மாணவர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பத்தம் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பாக செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரசாந்த் என்ற மாணவன் தேர்வு எழுத செல்வதற்கு முன்பாக கல்லூரி வாயிலின் […]
தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல..யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் சிலர், விபரீத முடிவுகளை […]
ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கும் சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுக்கும் சுவைக் கொண்டது. இவ்வாறு இனிப்பும், புளிப்பும் ஒரு சேர கலந்த வித்தியாசமான சுவையை கொண்ட மாம்பழங்கள் கோடை கால சீசன் பழமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கோடை கால சீசன் […]
பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர் வழங்கிய நிலப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் சாந்தகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தங்களது மகளான தேவசேனா என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கம் கூறியதாவது, எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் நல்லாபாளையத்தில் உள்ளது. அந்த […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்க செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஞானசேகரன். இவர் விவசாய சங்க செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஞானசேகரன் […]
அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று கல்லூரியில் படிக்கும் ரோசனை என்ற மாணவரை அதே கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி உள்ளனர். ஒரு மாணவரை 10க்கும் அதிகமான மாணவர்கள் தாக்குவதை பார்த்த அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து […]
அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து பார்த்த வருவாய் ஆய்வாளர் லட்சுமிநாராயணன், இதனை பற்றி விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.அந்த தகவல் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன்,2 ஏட்டுகள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் […]
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், அதாவது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா […]
மார்ச் 26 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடக்க உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளாக படித்து முடித்த இளைஞர்கள், வேலை இல்லாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பி வருகிறது. இதையடுத்து அரசுத் தரப்பில் பல வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு […]
முத்தாலம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 7-தேதி அன்று தொடங்கி 11-ஆம் தேதி சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, செல்லியம்மன் குதிரை புறப்பாடு, இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 12-ஆம் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி […]
வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பொய்யபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்யும் இவர் தனது வேலைதொடர்பாக சென்னை சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு திருச்சியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றனர். இந்நிலையில் சென்னை சென்ற சண்முகம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த […]
பள்ளியில் அரசு பாட புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு,அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உடை,புத்தகம் ஆகியவை வழங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டம்,நல்லாபாளையம் என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சின்னத்தம்பி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 187 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் தலைமையாசிரியர் […]
மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் […]
இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரமணி உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயந்தி என்பவருடன் சென்னையில் இருந்து விளந்தைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 3:30 மணி அளவில் விக்ரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். […]
அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் 56 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதனைப் பார்த்த […]
குளித்துக்கொண்டிருந்த போது அண்ணன் – தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தணி கிராமத்தில் குமார் – சங்கரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ் என்ற மகனும், சத்யஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மாவான பெரியநாயகி என்பவர் உடல்நலக் குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து சங்கரின் குடும்பத்தினர் ஆசூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தினேஷ் மற்றும் சத்யஸ்ரீ இருவரும் […]
ஆன்லைன் வகுப்பினால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தலைமுடியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஆன்லைன் மூலமே கல்வி கற்று வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
தற்கொலை செய்து கொண்ட மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளர்களான பாஸ்கர் – தனசேகரி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு கோகுலபிரியன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தனசேகரி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காகவே அவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்று வலி […]
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் 262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சரான பொன்முடி கலந்து கொண்டார். அவர் கோவிலில் வேலை செய்யும் […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி 4 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பண்ணகுப்பம் திருவள்ளுவர் நகரில் செல்வம் – குணசுந்தரி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குணசுந்தரி தனது வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து குணசுந்தரியின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் […]
கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளிக்குப்பம், தொரவி மற்றும் வெட்டுக்காடு போன்ற கிராமங்களில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகாரிகள் அந்த கிராமங்களை தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஊரக வளர்ச்சி இயக்குனரான காஞ்சனா பாதிக்கப்பட்ட இடத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார். […]
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பெரியார் நகரில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் அபி ஏஞ்சல் என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவி அபி ஏஞ்சல் தினந்தோறும் செல்போனை அளவுக்கு அதிகமாக […]
போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கும்பல் போலியான மதுபானங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கொடியம் […]
2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மாசிலாமணி. மயிலம் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,19,868 ஆகும். மயில் வடிவ மலையாக மாறி தவம் புரிந்த சூரபத்மனின் கோரிக்கையின் படி மயிலசலம் என அழைக்கப்பட்டு அதுவே மருவி மயிலம் ஆனதாக கூறப்படுகிறது. வெண்மணியாத்தூரில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிப்காட் அதிமுக அரசால் கண்டுகொள்ளபடாமல் விடபட்டதாக […]
விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி உரியிழந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் முத்தமிழ் செல்வன். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது அரசு கலை கல்லூரி உருவாக்கபடும், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றபடும் என பல வாக்குறுதிகளை […]
செஞ்சி சட்ட மன்ற தொகுதியை திமுக 8 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மஸ்தான். செஞ்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,60,159 ஆகும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்றும், மலை உச்சிகளில் உள்ள கோட்டைகளை காண ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்றும் மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுகின்றனர். […]
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வென்றுள்ளார். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏவாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,60,970 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த தொகுதியில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கரும்பு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்க படாததால் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கு […]
விழுப்புரத்தில் முதல்வர் நிகழ்ச்சியில் அதிமுக கிளைச் செயலாளர் அய்யாவு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மாவட்ட வாரியாக முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பழனிச்சாமி அவர்கள் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி உறுப்பினர்களும் காத்திருந்தனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியானது 4 மணி அளவில் தொடங்க இருந்தது. ஆனால், பல மணி நேரமாக […]
சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னமாதேவி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை ஒட்டிய கடல் பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி உள்ள பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. மரக்காணம், கூனி மேடுக்குப்பம், அனிச்ச குப்பம், கோட்டகுப்பம், முதலியார் சாவடி, அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களில் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. படகு மட்டும் அலைகளை பாதுகாப்பான […]
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் வீட்டை இடித்து விட்டதாக புகார் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.
பரோலில் வெளி வந்துள்ள பேரறிவாளன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உடல்நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 9-ம் தேதி பரோல் வெளியே வந்தார். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு […]
ஸ்ரீபெரம்பத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இவரும் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த பெருச்சாப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனிவாசன் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். […]
விழுப்புரத்தில் காரை மறைத்து கேள்வி எழுப்பிய பெண்களை மாவட்ட ஆட்சியர் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனபுரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை இரண்டு பெண்கள் சாலையின் நடுவே நின்று மறைத்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த காரை விட்டு கீழே இறங்கிய மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை வழி மறைத்து நின்ற பெண்களை ஆண்கள் […]
அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்பது தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதாக கூறி தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதாக சி.வ சண்முகம் கூறியுள்ளார். சூரப்பாவின் இந்த செயல் ஒழுங்கீனமானது என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி […]