பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் அடித்துப் பிடித்து வாங்கி சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த சந்தையில் கருவாடும், ஆடுகளும் வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றது. இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பெரும்பாலான ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முந்தைய […]
Tag: விழுப்புரம்
திடீரென பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கரை பகுதியில் ஷமிலுதீன்-நஸ்ரீன் என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் பிரசவத்தின்போது நஸ்ரீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குழந்தையை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எனவே நஸ்ரீன் இறந்த பிறகு அவரது குழந்தைக்கு நசீபா என்று பெயர்சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். அதன்பின் […]
டீக்கடையில் வைத்து முதியவரிடம் மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் வசந்த புரத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு யாசினி என்ற மகள் இருக்கின்றார். இவரை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக ரவி காரில் புறப்பட்டார். அந்தக் காரை அண்டபள்ளத்தை சேர்ந்த குப்பன் மகன் அருள் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி- திண்டிவனம் […]
பேருந்தின் மீது கல்லை வீசி விட்டு தப்பி சென்ற 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 11 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை காஞ்சிபுரம மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் அரசு விதிகளின்படி 50% பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பேருந்து கிழக்குக் கடற்கரைச் […]
காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
அரிசி மில் குடோன்களில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு, […]
கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பாலை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் படியில் இறங்கியபோது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் தலையில் […]
நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதித்தது. மேலும் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு […]
ஆபாச வீடியோவை எடுத்து பிளஸ்-1 மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காட்டுகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு, அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 பயிலும் 16 வயதுடைய மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி முருகன் அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்ததோடு, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து முருகன் வீடியோவை மாணவியின் செல்போனுக்கு அனுப்பி […]
பெண் தலையில் கல் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரணி தாங்கள் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செஞ்சி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் கற்கள் ஆங்காங்கே சிதறின. இந்நிலையில் கல்குவாரியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் தலை மீது ஒரு பெரிய கல் விழுந்தது. இதனால் […]
போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டி.எம்.ஜி. நகரில் வசிக்கும் டாக்டர் மணிகண்டனிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஆறுமுகத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கம் போல் டாக்டர் மணிகண்டனிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது டாக்டர் மணிகண்டன் ஆறுமுகத்திற்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துள்ளார். […]
விபத்து ஏற்பட்ட வாலிபருக்கு முதலுதவி அளித்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் கோலியனூர் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பனங்குப்பம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் ராகவன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த விபத்தில் […]
கூப்பனில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணேசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசு கூப்பன் என்று கூறி ஒரு சீட்டை அடையாளம் தெரியாத நபர் மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூப்பனில் மிக்ஸி, சமையல் கேஸ் அடுப்பு போன்ற பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனாட்சி […]
கடைகளில் விற்பனை செய்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான உணவு போன்றவை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு குழுவினர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென […]
முகக்கவசம் அணியாமல் வந்த 30 நபர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த 30 நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் காவல்துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவர்களிடம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மூதாட்டியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இந்திரா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தாமரைக் குளத்தின் பின்புறம் ஆடுகளை மேய்த்துள்ளார். இதனை அடுத்து மாலை நேரம் ஆகியும் இந்திரா வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் இந்திரா […]
பெண்களுக்கான உதவி மையத்தை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுரை கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மையம் 18 காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியனால் இணையதளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் உதவி மைய காவல் அலுவலர்களுக்கான அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சீமாஅகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் மத்திய அரசின் நிர்பயா […]
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முக்கிய இடங்களான ஒலக்கூர், கல்லூரி சாலை சந்திப்பு, ஓங்கூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது விபத்துகளை தடுப்பதற்காக இன்னும் அதிக எண்ணிகையிலான பேரி கார்டுகள் வைத்து கண்காணிக்க […]
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி.குன்னத்தூர் பகுதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நர்மதா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நர்மதாவின் தந்தையான குமரவேல் இறந்துவிட்டதால் ஏனாதிமங்கலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தாய் ஜோதியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் […]
சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கணவன் மனைவி இருவரும் நின்று பேசியுள்ளனர். இதனை அடுத்து வேறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் […]
ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற கிராமத்தில் சுரங்கப் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் […]
மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துடுப்பாக்கம் கிராமத்தில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாலை நேரத்தில் சூறைக் காற்று வேகமாக வீசியதால் அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியானது சீனிவாசனுக்கு சொந்தமான 4ஆட்டின் மீது விழுந்து விட்டது. இதனால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகளும் […]
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மணி பசு மாடுகளை கழுவெளி நிலப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். இதனையடுத்து அனைத்து மாடுகளும் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மணி அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அருகில் இருந்த பசுமாடு ஒன்று சரிந்து விழுந்து இறந்ததை […]
சொத்து தகராறு காரணமாக கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்குச்சிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசக்தி, ஜெயசக்தி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் ஜானகிராமனின் உறவினரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரதராஜன் என்ற […]
ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் […]
14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்றுடன் முடிவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ உப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ சர்க்கரை, 1 கிலோ ரவை, அரை கிலோ உளுந்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, கால் கிலோ புளி, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 […]
காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழ விற்பனைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் சம்பத், சுரேஷ் மற்றும் […]
மினி லாரியில் ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஞானோதயம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் மினி லாரியை சோதனை செய்யும் போது அதில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் […]
67 வயதான கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 67 வயதான கிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரின் மனைவி சாரதாம்பாள். இவர் கடந்த 19ஆம் தேதி இரவு தனது மனைவியை கடுமையாக தாக்கி, அருவாமனையால் சாரதாம்பாளை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து […]
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில் வெறிபிடித்த ஆதிக்க சாதியினர் பட்டியல் இன மக்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஓட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் கோவில் திருவிழா நடத்தியது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால், திருவிழாவை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். பின்னர் திருவிழா நடத்திய பட்டியலின மக்கள் காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வீடு திரும்பியுள்ளனர். […]
மனைவி வாழ வராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரபுவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதால், மனைவி கோபத்தில் குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றார். இதனால் தளர்ந்து போன பிரபு தன் மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார். ஆனால் மனைவி தன் கணவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் மிகுந்த […]
மருத்துவர் வீட்டில் 1 1/2 பவுன் தங்கம் மற்றும் ரு.3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகின்றார்.கடந்த 3ஆம் தேதி கோகுல் தனது வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து கோகுல் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள். இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உப்பளம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்பு எட்டப்பட்டுள்ளது. உப்பு ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கொரோனா தொற்று அச்சத்தால் வேலைக்கு ஆட்கள் செல்லாத சூழல் நிலவி வருகிறது. மேலும் உப்பின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் 250க்கும் […]
விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் […]
பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் ஒரு அரசு […]
இளம்பெண்ணை வழிமறித்து இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் என்ற ஊரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் லேனா (25). இவர் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]
விழுப்புரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்துமதி தம்பதியினர், கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் காரில் செந்தில் நாதனின் மகன் முகிலன் (24) மற்றும் சகோதரர் குருநாதன் ஆகிய அனைவரும் வந்தனர். அந்த கார் திண்டிவனம் அருகே பாதிரி பகுதியில் சென்னை-திருச்சி […]
விழுப்புரத்தில் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் […]
விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அது விரைவாக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . முன்பு தினசரி 04:20மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வைரஸ் பரவல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் விழுப்புரம் மதுரை இடையே […]
முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கணவரின் பென்ஷன் பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள சின்ன குப்பத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2010 ஆம் வருடத்தில் காலமானார். இதையடுத்து அவருடைய இரண்டாவது மனைவி கமலம்(69) கணவனுடைய பென்ஷன் பணத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜகவால் அச்சுறுத்த முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனத்தில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, மருத்துவக் கல்வியிலும் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிய செய்தது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் முதலமைச்சர் […]
நபர் ஒருவர் தாம்பத்ய குறைபாடை மறைத்து திருமணம் செய்த்துள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை வீட்டில் பெற்றோர்கள் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தன்னுடைய மகனின் தாம்பத்திய குறைபாட்டை மறைத்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் ஆன சில நாட்கள் கழித்து பெண் வீட்டார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பெண்வீட்டாரின் புகாரின் […]
பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வி.நெற்குணத்தில் பிளஸ்டூ மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவி அளித்துள்ள புகாரின் பேரில் சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகையில் கோயிலில் 50 வயது பெண், தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வன்கொடுமை […]
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடுமையான சட்டங்கள், தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெண் குழந்தைகள் வெளியில் அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குன்றத்தில் திருமண ஆசைகாட்டி பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அளித்த புகாரின் பேரில், […]
குழந்தைகள் இருவர் கோவிலுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் மகள் கீர்த்தனா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் […]
கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் நிலா என்கிற சர்மிளா(24). இவர் எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் சர்மிளா நேற்று பசுமாட்டை மேய்ச்சலுக்காக தங்களுடைய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நாகலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகள் பிரேமலதா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரேமலதா தனது தம்பியுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது பிரேமலதா கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது சிறுமி கிணற்றுக்குள் எந்த அசைவும் இல்லாத […]
ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் விரக்தியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய […]