Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரஜினிகாந்த் என் வாழ்க்கை”… கட்சி தொடங்காத விரக்தியில்… உயிரிழந்த தீவிர ரசிகன்..!!

ரஜினி தன் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் விரக்தியில் இருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு “இப்ப இல்லனா வேற எப்பவும் இல்லை” எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி, ஜனவரியில் இருந்து கட்சி தொடங்குவார் என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்ணாத்த பட பிடிப்பில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உயிரிழந்த தேசிய பறவை…. மரியாதை செலுத்தி அடக்கம் பண்ணுங்க…. ஆட்சியர் உத்தரவு….!!

இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அடக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அதனை நேரில் பார்வையிட்ட பெரியதச்சூர் வி.ஏ.ஓ லோகநாதன் மற்றும் கால்நடை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் அம்மயிலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பின் விவசாய நிலத்தில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்து கலந்த உணவை உண்டு மயங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை… பரிதவிக்கும் பெற்றோர்…விழுப்புரத்தில் சோகம்…!!!

விழுப்புரத்தில் 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜான் பால் என்பவர். இவருக்கு 40 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜேஸ்மின்(35)   கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 8 வயதுடைய ரெமி எட்வின் எனும் மகன் இருந்துள்ளார். ரெமி எட்வின் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 வயது சிறுவன்… 10 அடி கழிவுநீர் தொட்டியில்… நடந்தது என்ன..?

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள  அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன்  அங்குள்ள  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் துணிகரம்… ஆசிரியை வீட்டில் கத்தி முனையில் கொள்ளை… மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்…!!

ஆசிரியை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சகாயராஜ் – வசந்தி. சகாயராஜ் தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . வசந்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார் . இவர்களது வீட்டில் 2 தளங்கள் உள்ளது . மேல்தளத்தில் ஆசிரியை சார்லட் என்பவர்  வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிபோன கால்கள்…. மருத்துவர்களின் விடாமுயற்சி…. மறுவாழ்வு பெற்ற இளைஞர்…!!

கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… சேதமடைந்த நெல் மூட்டைகள்… விவசாயிகள் கவலை…!!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்மலையனூர், அனந்தபுரம், ஆலம்பூண்டிமற்றும் சுற்றுப்புற வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களது சொந்த நிலத்தில் விளைந்த தானியங்களையும், பயிர்களையும் செஞ்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஒழுங்குமுறை கூடத்திற்கு 4000  நெல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சித்தியுடன் தகாத உறவு” பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணியா…? முந்தியடித்த மக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க  கூட்டம் அதிகரித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது.இதனால் அங்கே அதிக மக்கள் திரண்டதால் கடை உரிமையாளரை கைது செய்தனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்  என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று இன்னும் பல இடங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆயிரக் கணக்கில் பத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வட்டி கொடுமை ஒருபுறம்… தொழில் நஷ்டம் மறுபுறம்… 3 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!!

வட்டி கொடுமையால்  3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு  தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை  அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு… கணவன் மனைவி தற்கொலை… பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது. விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்த நாளில்…! “மனைவி இறப்பு”… கணவனின் வெறிச்செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு….!!

விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார்  கைது செய்தனர் . விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.  சுரேஷ், நந்தினிக்கும்  3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் சென்ற தொழிலாளி…. விரட்டி வந்த கார்…. பிறகு நேர்ந்த பரிதாபம் …!!

விழுப்புரம் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம்  மோதி கரும்பு வெட்டும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டதில் உள்ள புத்தா முண்டகபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வமூர்த்தி. 30 வயதுடைய இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார்.  செல்வமூர்த்தி ஊத்துக்கோட்டை அடுத்துள்ள ஆலங்காட்டில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.  ந.வ.27-ம் தேதி  இரவு ஊத்துக்கோட்டை வந்த அவர் அம்பேத்கர் நகர்  பேருந்து  நிறுத்தம் அருகே நடந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓட்டை போட்டு… ஆட்டைய போட்ட மர்ம நபர்…. வேட்டையாடும் போலீஸ் …!!!

விழுப்புதில்  நகை கடை  சுவற்றில் ஓட்டை  போட்டு  மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில்    அக்பர் நகரில்  வசித்து வருபவர் பாலமுருகன். இவரின்   நகை கடை பண்ருட்டி  அருகில் உள்ள  கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம்  தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில்  நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள்  மர்ம நபர்கள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன் மனைவி சண்டை…. விஷம் குடித்து மனைவி சாவு…. விழுப்புரத்தில் சோகம்…!!

கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சைக்கிள் கடையில் ரூ.1.73 லட்சம் திருட்டு… சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள்…!!!

விழுப்புரத்தில் சைக்கிள் கடையின் சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.73 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள நேருஜி சாலையில் இயங்கி வரும் பிரபல சைக்கிள் கடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சைக்கிள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இக்கடையை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர் . அன்று நள்ளிரவு கடையின் சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த மர்ம கும்பல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை […]

Categories
பல்சுவை வானிலை

1இல்ல, 2இல்ல…. 10மாவட்டத்துக்கு எச்சரிக்கை….. மக்களே உஷார் ….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் நிலவுகின்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தீவிரம் மழை பெற்றுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் , வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, காஞ்சிபுரம், விருநகர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறவைகள் சரணாலயமாக மாறிவரும் பொன்பத்திஏரி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி ஏரி  புதிய பறவைகள் சரணாலயமாக மாறி வருவதால் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செஞ்சி முதல் பொன்பத்திஏரி வரை உள்ள ஏரிக்கரை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அண்மையில் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாகவும் ஏரிப்பகுதி மாறி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ராகவன்பேட்டை மக்கள்…!!

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ராகவன் பேட்டை பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டு ராகவன் பேட்டை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பஞ்சாயத்து சார்பாக ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி தான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நகராட்சி ஆக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளாகியும் குடிநீருக்காக மாற்று ஏற்பாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வறுமை” பசித்து அழுத குழந்தை…. பாலில் பூச்சிமருந்து கலந்த தாய்…. அடங்கிப்போன குழந்தையின் அழுகுரல்…!!

வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதிய கலெக்டர் அலுவலகம்…. ஆரம்பப் பணிகள் தொடக்கம்… கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு…!!

புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்டும் பணிகளை பொதுத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் கடந்த 26 .11. 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இதைஅடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்கு இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீர சோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டும் வறுமை…. கணவனின் கொடுமை…. சடலமாக அம்மா… வாயில் நுரையுடன் மகள்… விழுப்புரத்தில் துயரம் …!!

குடும்ப பிரச்சினையினாலும் கடன் பிரச்சினையினாலும் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சித்தேரிகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரன்-கவிதா. இத்தம்பதிகளுக்கு பவித்ரா மற்றும் சர்மிளா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை நடத்த கவிதா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மிகுந்த வறுமையில் வாடி வந்த அந்த குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது. இது ஒருபுறமிருக்க கடன் வாங்கிய இடத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டுக்குள் நுழைந்த மாற்றுத்திறனாளி…. என்ன வேணும்….? தனியாக இருந்த சிறுமி குத்திக் கொலை….!!

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கத்திரிக்கோலால் குத்தி  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சோளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு 13வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் ,2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில்   வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோர் இருவரும்  விவசாய வேலைக்கு சென்றனர். வீட்டில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பிகள் இருந்தனர். பின்னர்  தம்பிகள் இருவரும் விளையாடச் சென்றனர். அதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10- ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் என்ஜினீயரிங் மாணவர் கைது..!!

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான  சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள்  வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திண்டிவனம் தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம்  தி.மு.க எம்.எல்.ஏ.வும்  அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி சொக்கலிங்கம். 65 வயதான இவர் திமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு  ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகளான இருமல் ,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருவருக்கும் இருந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை” விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பு ….!!

  விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி  தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பிக்கு கல்யாணம் ஆயிட்டு… ஆனா எனக்கு இன்னும் ஆகல… மனமுடைந்து அண்ணன் எடுத்த சோக முடிவு..!!

திண்டிவனம் அருகே திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் விட்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு சசிகுமார் (25) மற்றும் கார்த்திகேயன் (23) என 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே இளையவரான கார்த்திகேயனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.. ஆனால் சசிகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.. இதனால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் சசிக்குமார்.. அதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இரண்டு குழந்தைகளுக்கு தாய்… கணவனின் சந்தேகம்… தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்…!!!

விழுப்புரத்தில் கணவன் சந்தேகம் கொண்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டை பகுதியில் ராஜாராமன் மகள் சரண்யா(31) என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கலாநிதி என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதிலிருந்து கலாநிதி, தனது மனைவியை இந்த குழந்தைகள் எனக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தியாகத்தலைவி சின்னம்மா பிறந்தநாளையொட்டி அன்னதானம்…!!

திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாகத் தலைவி சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர கழகம் சார்பில் தியாக தலைவி சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனத்தில் ஏழை எளியோர் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. பாலசுந்திரம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கௌதம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடிக்கடி அடித்து துன்புறுத்திய கணவன்… கொடூரமாக கொலை செய்த மனைவி மற்றும் மகள்..!!

குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி, மகள் மற்றும் துணையாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் தனசேகரன். இவர் சின்னகள்ளிபட்டு பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடைய வீட்டில் தனசேகர் மர்மமான  முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிவகாசியில் பரபரப்பு… புதுப்பெண் கொலை..!! – நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!!!

சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்று கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர். சிவகாசியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்,ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலணியில் 24 வயதான செல்வபாண்டியன் என்பவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 24 வயதான பிரகதி மோகினி என்பவருக்கும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் மற்ற அனைவரும் வேலைக்கு செல்ல புது பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்டா வழங்கவில்லை… குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபர்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பட்டா வழங்காததால் மனவேதனையடைந்த நபர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கொடிமா கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி விஷ்ணு, தமிழ்செல்வி மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், விஸ்வநாதன் தான் வசித்து வருகின்ற நிலத்திற்கு பட்டா வழங்குமாறு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.. எனினும், கலெக்டர் அவருக்கு பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!

விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா பாதித்தவரின் உடல் பாதுகாப்புடன் அடக்கம் – ஊர்மக்கள் எதிர்ப்புதெரிவித்ததால் ஏற்பட்ட பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் தன்னார்வலர்கள் உதவியோடு உடல் அடக்கம் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல் இடையாள பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது  உடலை சொந்த ஊரில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரின் சடலம் செஞ்சி அரசு மருத்துவமனை வாசலில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் STPI மற்றும் தமமுக உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போதை ஆசாமிகளுக்கு நூதன தண்டனை …!!

விழுப்புரம் அருகே பொது இடங்களில் மது அருந்தும் இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்க்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். விழுப்புரம் அடுத்த எருமனத்தாங்கல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களை உடைத்து அப்பகுதியை அசிங்கப்படுத்திவிட்டும் செல்கின்றனர். இதனால் பெரிதும் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் இச்சம்பவம் தொடர்பாக சில […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சித்தமருத்துவர் உயிரிழப்பு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). இவர் ஒரு சித்த மருத்துவர். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கஞ்சா விற்பனை… 5 பேர் கைது… பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கஞ்சா…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த அதிகாரிகள்….!!

மேல்மலையனூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாக கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பருதி புறத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏறி 122 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகே வசிக்கும் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஆண்டுதோறும் நெல் பயிர்கள் பயிரிட்ட வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரை அடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அனிதாவிற்காக….. நல்ல சம்பளம் கொண்ட வேலையை விட்டு….. அரசியலில் இறங்கிய ஆசிரியர்….!!

விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த […]

Categories
மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் ஓட்டுநர்… கார் கவிழ்ந்து கோர விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி….!!

தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்ளிட்ட ஆறு நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலை நடந்த சோகம்… திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து… குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கந்த சஷ்டி கவசம் அவதூறு” நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகள்…. அமைச்சர் ஆவேசம்….!!

ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறி அவதூறு பரப்புவோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் என்பவருடன் சிவி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் சமந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விரட்டும் கொரோனா…. புதிதாக 110 பேர் பாதிப்பு…. 1700யை கடந்த பாதிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தொற்று பிற மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று விழுப்புரத்தில் 110 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.நேற்றுவரை 1602 பேருக்கு தொற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி குடித்தனம் போகனும்… கணவர் சொன்ன பதில்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

வானூரில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மோகன பிரியா (28) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகன் மற்றும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. கல்யாணத்துக்கு பின் மோகனபிரியா கணவரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரதில் கொரோனாவுக்கு 18மாத குழந்தை உயிரிழப்பு ….!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேலைக்குப் போகாம விளையாடிகிட்டு இருக்க”… தாய் திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

மரக்காணம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன்.. இவருக்கு 24 வயதாகிறது.. கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.. அப்போது அவருடைய தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மனவேதனையடைந்த பரதன் வீட்டிற்கு […]

Categories

Tech |