தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று(10.03.2022) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.போரூர் – திருமுடிவாக்கம் பகுதி: 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள […]
Tag: விழுப்புரம்
கழிவுநீர் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 42 நகராட்சிகள் அமைந்துள்ளது. இந்த நகராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் எருமனந்தாங்கள், காகுப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதைதொடரந்து வி நகர் பகுதியிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக வி மருது நகர் பகுதியில் இருக்கும் ஏரியில் நகராட்சி அலுவலர்கள் […]
இரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 2000-ம் வருடம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆன நிலையில் இதை சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 8 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் அமித், நகர்மன்ற […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பணியாளர் தேர்வாணையம் [எஸ்.எஸ்.சி மற்றும் சி.எச்.எஸ்.எல்] தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. இந்த வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணி முதல் […]
மகளிர் தின விழா அரசு பள்ளிகள் மற்றும் காவல்நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. இந்த விழா ஆசிரியர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது மாணவிகளுக்கு மங்கள இசை, நடனம், நாதஸ்வரம், பாட்டு, பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கு அருகே ஆலம்பூண்டி பகுதியில் ஸ்ரீரங்கபூபதி […]
மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மாற்று திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும், […]
சுமைப்பணி சங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்பாக சுமை பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வறை ஒதுக்க வேண்டும் எனவும், வாகனம் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதன்பிறகு குடோன் காலியாக இருந்தும் சரக்குகளை உள்ளே கொண்டு செல்வதற்கு மேலாளர் பணம் கேட்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குடோனில் […]
கூட்டுறவு வங்கியின் முன்பாக அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்படி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமமக்கள் நகைக்கடன் செய்யுமாறு கூட்டுறவு வங்கியில் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் நகைகடன் தள்ளுபடி […]
காவல் துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெல்லாக்குப்பம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின்படி குடிமைபொருள் குற்றபுலனாய்வு காவல்துறையினர் பெல்லாக்குப்பம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அங்கிருந்தருந்த ஒரு கொட்டகையில் 21 சாக்கு மூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதை […]
லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்குள்ள கடைவீதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வளத்தி பகுதியை சேர்ந்த தர்மன் என்பதும், மணலிப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. […]
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களிலும் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 3 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிகமான லாபம் ஈட்டி பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த வேலையை உதறிதள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அருண்பாண்டியன் விவசாயம் செய்யத் தொடங்கினார். அதன்படி தனக்கு சொந்தமான […]
புகழ்பெற்ற கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகில் அவலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு நடைபெறும். இதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி புஷ்பரத ஊர்வலமும், 19-ஆம் தேதி முத்துப்பல்லக்கில் சாமி […]
பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனாங்கூர் மதுரா சாமி பேட்டையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ஆம் தேதி அம்மனுக்கு திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு காப்பு கட்டுதல், அம்மன் வீதி உலா, பூவால கப்பறையுடன் அம்மன் வீதி உலா, சக்தி கப்பறையுடன் அம்மன் வீதி உலா, மூன்று முகத்துடன் அம்மன் வீதி உலா […]
காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்துகொண்ட சூர்யாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2-ஆம் தேதி சூர்யா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் வீட்டை […]
முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகில் இருக்கும் கறிவேப்பிலையாபுரம் கிராமம் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது மீட்புக் குழு இளைஞர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க முன்னால் முதலமைச்சரை வரவேற்றனர். […]
குடும்பத்தகராறு காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் இருக்கும் கோலியனூரில் தொழிலாளியான அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யனாருக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அய்யனாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அய்யனாரின் மனைவி 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்திலுள்ள திருபுவனை பகுதியில் இருக்கும் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வசிக்கும் தன்னுடைய மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் சந்திரவேலுவின் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கைப்பேசி மூலமாக சந்திரவேலுவுக்கு […]
நகை கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுகுமார் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 2 லட்சத்தை மட்டும் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் சுகுமார் பாக்கி பணத்தை தருமாறு சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் பணம் வந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் நகைகடைக்குள் […]
பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த வருடமும் கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனுக்கு கரகம் ஜோடித்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த […]
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் இருக்கும் தேவகோட்டை குடியிருப்பு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வில்லிவாக்கம் பகுதிக்கு உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென ஆதிமூலம் வீட்டிலிருந்து புகைமூட்டம் வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மாசி பெருவிழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா, தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு […]
காவல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உள்ள பிரகாசபுரத்தில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் திண்டிவனம் பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல்நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் சுற்றியுள்ள இடங்களில் தனது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளார். அதன்பிறகு இருசக்கர வாகனத்தை […]
மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைடுத்த வல்லம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளான். அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கு 2 வயதுடைய தாஸ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த 2 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இருக்கும் தாங்கல் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தைகளை தேடி […]
சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் இருக்கும் மேல்வாலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் மயானகொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மனுக்கு கத்தி, ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை ஏந்தியவாறு 18 கரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு ஆவேச அலங்காரத்தில் காட்சியளித்த […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவை இயந்திரம் மற்றும் தையல் மெஷின் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சலவை இயந்திரம் மற்றும் தையல் மெஷின் வழங்கப்பட உள்ளது. இதை வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 40 வயதிற்குள் […]
கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறையினருக்கு சிறப்பான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினருக்கு வெயிலை சமாளிப்பதற்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவர்களுக்கு நீர்மோர், தொப்பி, கண்ணாடி, எலுமிச்சைச்சாறு போன்றவைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் பணியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தொடங்கி வைத்தார். இவர் போக்குவரத்து காவல் துறையினருக்கு கையுறை, முககவசம், […]
பெண் ஒருவரின் பிணம் ஏரியில் கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகிலுள்ள தாயனூர் குப்பம் பகுதியில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியில் பெண் ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து காளிதாஸ் அவலூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏரியில் கிடந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்பவரும் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இவர்கள் காதணி விழாவில் கலந்துகொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது கெடார் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வலியுறுத்தி மூத்த குடிமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சக்திவேல், பொருளாளர் தங்க வீரமணி, செயலாளர் ராசமுத்து, மாநில துணைத்தலைவர் ராமு சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிக்கு அவதார தினவிழா நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு வருகிற 9-ஆம் தேதி அவதார தினவிழா கொண்டாடப்படுகிறது. இது சுவாமிக்கு 427-வது அவதார தின விழாவாகும். இந்த அவதார தினத்தை முன்னிட்டு 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறவிருக்கிறது. அதன்பிறகு பாதபூஜை, மகா அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து மதியம் அன்னதானம் நடைபெறும். அதன்பிறகு மாலை நேரத்தில் பக்தி நிகழ்ச்சி, பல்லக்கு சேவை, கூட்டு […]
கடல் நீர் உப்பளங்களில் புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு, பருவநிலை மாற்றம் காரணமாக உப்பளங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது பருவநிலை சூழல் நன்றாக இருப்பதால் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால் கடல் நீரில் சீற்றம் ஏற்பட்டதால் உப்பளங்களில் தண்ணீர் புகுந்ததது. இதனால் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி நாசமானதால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது. […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் இருக்கும் கீழ்புத்துபட்டில் இலங்கை தமிழர் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முகாமில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
அவமானம் தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாது என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது உறவினர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் […]
கடன் பிரச்சனை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பகுதியில் சின்னத்துரை, பாஸ்கரன், சுரேஷ், ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் ஆவார், இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து விவசாயம் செய்வதற்காக டிராக்டர்கள் வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர்களிடம் போதிய அளவு பணம் இல்லாததால் செஞ்சி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் […]
சுவரில் ஓட்டை போட்டு 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உள்ள அனுமந்தையில் நகை அடகு வைக்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை சாந்தாராம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பின்புற சுவரில் ஓட்டை ஒன்று இருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த சாந்தாராம் கடைக்குள் சென்று […]
போலியான தங்க கட்டிகளை கொடுத்து பணம் பறித்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில் கணேஷ்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவிதா நம்நாட்டு பகுதியில் துணிகடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது கடைக்கு ஜோதிடம் பார்ப்பதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அந்த 2 நபர்களும் மீண்டும் கடந்த மாதம் 4-ம் தேதி கவிதாவின் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கவிதாவிடம் எங்களிடம் 5 […]
பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ம் தேதி மாசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதைதொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், […]
ஒரே நாளில் இரு வெவ்வேறு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் ரகுநாத் [வயது 34] என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் தான் குடியிருந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் புதிதாக குடிபெயர்ந்த வீட்டிற்கு பால் காய்ச்சிவிட்டு அந்த வீட்டில் இரவு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். ஆனால் பழைய வீட்டில் இருந்த பொருள்கள் […]
வங்கியிலிருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் ஊரல் கிராமத்தில் அய்யனாரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அதிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு 49,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
நகராட்சி தலைவர் போட்டியில் முதன் முதலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த பிப் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் 45 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, மனிதநேய மக்கள் கட்சி-1, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, பா.ம க மற்றும் காங்கிரஸ்-2, அ.தி.மு.க-7, தி.மு.க-25 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடந்து முடிந்த நிலையில் நகராட்சி தலைவர் […]
இந்திய குடியரசு கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமையில் இந்திய குடியரசுக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்திரா நகர் காலனி, வழுதரெட்டி காலனி, விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் ஏழை, எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் […]
போக்குவரத்து விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே மக்களைத் தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அது அரசின் பயன்பாட்டிற்காக […]
பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கிசாக்ஸ் என்ற எந்திரம் மூலம் ஓட்டு போடுவதற்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மோகன் […]
பாலியல் வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கேகே சாலை அருகிலுள்ள லே-அவுட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்த வாலிபர் 41 வயதான பெண் தனியாக இருந்ததை பார்த்துள்ளார். எனவே அந்தப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தேன், திரவியம் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பக்தர்கள் மீது அம்மன் வேடமணிந்தவர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். […]
வாகன சோதனையின் போது காவல் துறையினரால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது 15 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் மொத்தம் 480 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]
சிறப்பாக நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துள்ளார். அதன்பிறகு சிறப்பான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், மஞ்சள் […]