போதையின் உச்சத்தில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு என்கிற சேதுராமன் வசித்து வந்தார். இவர் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 6/12/2021 அன்று பெட்ரோல் பங்கிற்கு […]
Tag: விழுப்புரம்
உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அண்ணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இந்நிலையில் சேகரின் சகோதரரான மூர்த்தி என்பவர் சாந்தியை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி சாந்தியை தகாத வார்த்தைகளால் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடப்பேரிக்குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி தனது மகனுடன் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டில் […]
மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான 2 ஆடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மர்ம நோய் தாக்கியதால் கால்நடைகள் இறந்து கிடந்ததை பார்த்து நடராஜன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளும் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக […]
ரேஷன் பொருட்களை ஏற்றிவந்த லாரி ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி நொளம்பூர் சாலை வழியாக ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளை நோக்கி சென்றுள்ளது. இந்த லாரியை தேவபாலு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது […]
கடையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாதாபுரம் கூட்டு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமார் தனது நண்பரான மோகன்ராஜுடன் இணைந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 60 ஆயிரம் ரூபாயை திருடியதை காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். […]
கனமழையால் அங்கன்வாடி கட்டிட சுவர் இடிந்து விழுந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வள்ளியம்மை நகர் பகுதியில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் அங்கிருந்த தகவல் பலகைகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை உடைந்து நாசமாகிவிட்டது. அந்த சமயம் குழந்தைகள் யாரும் அங்கன்வாடியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை […]
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் விழுப்புரத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தளவானூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நந்தினியை கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர […]
விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளை தொடர்ந்து தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது தற்போது பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். தொடர் மழையின் காரணமாக மழை நிலவரங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் முன்னதாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழை காரணமாக சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை, கடலூர், தென்காசி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஆலகிராமத்தில் முத்துகிருஷ்ணன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது ஏரியில் தவறி நீரில் விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பிறகு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஏரியில் முத்துகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். இதையடுத்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு […]
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் நாளை (12ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி […]
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ரயில் சேவைகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் இதேபோன்று வேறொரு பாதையில் மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணி என மூன்று வேளைகளும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து […]
புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை அருகே இன்று கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் RED ALRET எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மீட்புக்கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். அதிலும் மாநில அளவில் […]
வேலைக்கு சென்றவர் ஏரியின் மதகு மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸின் மகன் அருண். இவர் அடைக்கலாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை புரிகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். குறிப்பாக அவர் அவ்வூரில் உள்ள ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் மதகு […]
விழுப்புரம் மாவட்டம் தளவானூரில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூரில் கட்டப்பட்ட தடுப்பு அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர் அந்த பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் அப்பகுதி மக்கள் யாரும் ஆற்றுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் போலிஸ் நிலையத்தின் எதிரே திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான்(55) அவர்களிடம் சென்று போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அங்கிருந்து உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒருவர் திடீரென பட்டாசு கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் மீது வீசினார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சுதாரித்துக் கொண்டு சற்று விலகி, அந்த […]
சாலை மறியலில் பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் 22-ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவருக்கு ஓட்டு போட அனுமதிக்காததை கண்டித்து ஈச்சேரி கிராமத்தில் வசிக்கும் ராஜதுரை என்பவரின் தலைமையில் ஒரு தரப்பினர் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது கல் வீசி […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏகாம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஏகாம்பரம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். […]
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் புலிவந்தி கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு […]
நூதன முறையில் சாராயம் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கைக்கு அடியில் 11 பாக்கெட்டுகளில் 110 லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ரெட்டி […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கொத்தனாரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜையை முன்னிட்டு மாமரத்தில் ஏறி இலைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை மீது உயரழுத்த மின்கம்பி உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இயக்குபவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டார் அறைக்குக்கு மணிவண்ணன் வந்துள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மணிவண்ணனை சரமாரியாக […]
பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பொன்பத்தி கிராமத்தில் செல்வம்-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 41 […]
வாக்காளர் ஒருவர் 4 வேட்பாளர்களுக்கு தனது வாக்கினை பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைத்து காணை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டில் வாக்காளர் தனது வாக்கினை மொத்தம் நான்கு சின்னத்திற்கு பதிவு செய்துள்ளார். அந்த வாக்காளர் 4 பதவிகளுக்கு என நினைத்து 4 சின்னங்களில் வாக்களித்தாரா என அனைவரும் குழப்பத்தில் இருந்துள்ளனர். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் சம்பத் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட பொருளாளர் முன்னிலை வகித்து உள்ளார். இந்நிலையில் மாதந்தோறும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக […]
மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூரில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அய்யனாரப்பன் மற்றும் பூரணி போன்ற சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் உடைந்த சிலைகள் குளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சீமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விசிகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நம் கட்சியானது தொடர்ந்து போராடி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறும் […]
ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளரை வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிளியனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் சட்ட விரோதமாக 350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 300 கிலோ கோதுமை மூட்டைகள் ஆகியவற்றை கடத்த முயன்றனர். அப்போது அந்த லாரியை மடக்கி பிடித்த விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியதாவது, ” திமுக அரசு, பயிர்கடன், நகைகடன் தள்ளுப்படி செய்யவில்லை, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு யாரையெல்லாம் நாடினோமோ அவர்களை தான் திமுக அரசு நாடி தொழில் தொடங்க வலியுறுத்துகின்றனர். […]
திமுக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைத்திடும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான வாக்களிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து உயர்கல்வி துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதேபோன்று கண்டாச்சிபுரம், அடுக்கம், காடகனூர், முகையூர், வீரங்கிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் […]
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் […]
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் துளசியை போலீசார் கைது செய்து துருவி […]
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வடிவழகன் -துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததன் காரணமாக துளசி தன்னுடைய தாய் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே துளசி தன்னுடைய இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளிவந்த நிலையில் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கணவர் வடிவழகன் துளசி மீது காவல்நிலையத்தில் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மணப்பாடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் வடிவழகன்- துளசி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி துளசி தன்னுடைய இரண்டு வயது குழந்தையை கணவர் இல்லாத நேரத்தில் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய மொபைலில் எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து காயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அப்போது […]
விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் […]
தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவர் பாஸ்கரன். இளைஞரான இவர் ஒரு யூனிட் மின்சாரத்தை வைத்து 50 கிலோ மீட்டர் செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்துள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்த இவர் பத்து வருடத்திற்கு மேலாக பேட்டரி மூலம் இயங்க கூடிய ஒரு புதிய சைக்கிளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதில் பல்வேறு தோல்விகளைக் கண்ட பிறகு ஒரு யூனிட் சார்ஜ் செய்தால், […]
அண்மையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தண்டோரா முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது பல்வேறு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இவர் இதை பதிவிட்டதற்கான முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் துறையூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். துறையூரில் உள்ள மாநிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தானே தண்டோரா அடித்து தெரு தெருவாக சென்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தொலைக்காட்சி வழி பாடம் படிப்பதற்கான அவசியம் […]
ஆடிட்டிங் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரம்பை கிராமத்தில் ஆடிட்டரான சக்திதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஆடிட்டிங் அலுவலகம் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் அலுவலகத்தை பூட்டி விட்டு சக்திதாசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை அலுவலகத்தை திறக்க சென்ற போது அதன் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சக்திதாசன் அதிர்ச்சி […]
கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பாத்திரக்கடை, ஸ்டுடியோ, கண்ணாடி கடை, மளிகை கடை போன்றவற்றில் உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 12 […]
செல்போனில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் சுகுமார் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாசுதேவனின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதனை அறிந்த வாசுதேவன் செல்போனை கேட்டபோது 100 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என்று சுகுமார் […]
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஒரு பாடையை உருவாக்கி அதில் சமையல் எரிவாயு சிலிண்ர் மற்றும் மாட்டு வண்டியில் காரொன்று ஏற்றியும் வைத்திருந்தனர். இதனையடுத்து தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் […]