சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி […]
Tag: விவகாரம்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்சட்டான ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் போன்றவற்றில் முறையீடு செய்திருக்கிறார். இருப்பினும் இதுவரை நடைபெற்ற சட்ட போராட்டங்களில் […]
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. இதனை அடுத்து நள்ளிரவை தாண்டிய பின் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் தகவல் தொழில்நுட்ப சட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் […]
பிரம்மோஸ்ஏவுகணை விவகாரம் தொடர்பாக 3 இராணுவ அதிகாரிகளை இந்தியாவானது பதவிநீக்கம் செய்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம் மோஸ் சென்ற மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தவறுதலாக இது நடந்துவிட்டதாக இந்தியா விளக்கமளித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விமானப் படை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடைபெற்றதாக உறுதியாகியது. அதன்பின் 3 […]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல்வேறு வருடங்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இருப்பினும் சென்ற ஓராண்டாக இருநாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் சென்ற சில தினங்களாக மீண்டுமாக மோதல் ஏற்பட்டுள்ளது. 3 தினங்களாக நடந்த ஆபரேசன் பிரேக்கிங் டான் வாயிலாக கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது. எனினும் இத்தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என […]
துறை ரீதியான தனது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது பழனிவேல் தியாகராஜன் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் தான் பங்கேற்ற முதல் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ஒன்றிய அரசு என புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தைப் பெற்ற பி டி ஆர் பெட்ரோல், டீசல் மீதான வரி விதித்து அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு கடுமையாக […]
கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அவர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியமாகும். ஆனால் கள நிலவரம் அவ்வாறு இல்லை என்று தெரிகின்றது. அதாவது சுயலாபத்திற்காக கல்வி தகுதியற்ற தூய்மை பணியாளர்களை சுகாதார மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது படித்தவர்களை நியமித்தால் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார மண்டல அலுவலர்களுக்கு ஈகோ பிரச்சனை வருகின்றது. அவர்கள் பணி […]
நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் 10 லட்சம் மாணவியருக்கு உட்பட 18.72 […]
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொது குழு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது . அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வியில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகம் எது? தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு […]
சிறுமியின் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பெயரில் அவருடைய தாயார் மற்றும் அவரின் இரண்டாவது கணவர், புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டை தானம் குறித்த சாதக […]
நுபர் ஷர்மா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ராஜஸ்தானின் உதயபூரை சேர்ந்த கனையா லால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்ட நிலையில் இணையதளம் முடக்கப்பட்டது. 600 காவலர்கள் குவிக்கப்பட்டு அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது அரசியல் ஹாட் டாப்பிக்காக அதிமுக பிரச்சினைதான் வலம் வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து விட்டனர். நேற்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அலுவலகங்களில் உள்ள ஓபிஎஸ் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு […]
பிரபல பின்னணி பாடகியான சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதையடுத்து மீ டு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து சொல்ல ஆரம்பித்தனர். அதன்பிறகு பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மீ டு விவகாரத்தில் சட்ட மாற்றம் வேண்டும் என்று சின்மயி […]
கர்நாடகாவில் நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தக் கூட்டத் தொடரின்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுள்ளது. 05.02.2007 அன்று […]
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் ஹிஜாப், காவித் துண்டு போன்ற எந்த மத அடையாளங்களையும் கல்வி நிலையத்திற்கு அணிந்து வரக்கூடாது என கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த பரபரப்பான சூழ்நிலை காரணமாக கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை […]
கொரானோ விதிமுறைகளை மீறியதன் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விவகாரம் அந்நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக லண்டன் போலீஸ் விசாரணை தொடங்கியபோது ,போரிஸ் ஜான்சன் இந்த சம்பவத்திற்காக […]
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலி குறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த புல்லி பாய் செயலி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இதில் சில பெண்களின் போட்டோக்களை பதிவிட்டு ‘டீல் ஆப் தி டே’ என்ற தலைப்பில் […]
ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ‘முன்கூட்டியே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 […]
நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரை வேவு பார்க்க செய்தி நாட்டையே […]
பெகாசஸ் வேவு பார்க்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் வேண்டுகோள் வைத்த நிலையில், ஒன்றிய அரசு விவாதிக்க தயாராக இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கு மட்டுமே நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.
மேகதாது அணை தொடர்பாக நாளை மதியம் அனைத்து கட்சி குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று […]
கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து அதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பல சோகக் கதைகள் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த போது பீகார் மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தையும், உத்தரபிரதேச மாநிலம் பீகார் மாநிலத்தையும் மாறி கைகாட்டி இவர்கள் தான் செய்தார்கள் என்று குறை […]
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வேலங்கிராயன்பேட்டை என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி சடலமொன்று புதைக்கப்பட்டு கை மட்டும் வெளியே தெரியும்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் அந்த மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். […]
தமிழகத்தில் அடுக்கடுக்காக பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள் இந்திய திரையுலகில் அதிகம் தற்போது நடந்து வருகின்றது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உயிரை பரிகொடுக்கும் நிலை தற்போது பெருகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒரு மந்திரியின் கார் வந்து சென்றிருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து விலை உயர்ந்த காரில் ஆரோக்கியமான மாதிரி அங்கு வருவது வழக்கம். சித்ராவிற்கு ஆடி கார் […]
நடிகை சித்ரா கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து நடிகர் ரக்சன் சிக்கியிருக்கிறார். சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சித்ராவிடம் நெருங்கிப் பழகியவர்கள் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்தது. […]
வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது. இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான […]
அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவின் செயல் ஒழுங்கீனமானது என்பது தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவதாக கூறி தமிழக அரசை மீறி மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதாக சி.வ சண்முகம் கூறியுள்ளார். சூரப்பாவின் இந்த செயல் ஒழுங்கீனமானது என்றும் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விதிகளை மீறி […]
உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா எம்பி மோகன் மாண்டவி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரணை செய்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜராகிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் சடலத்தை எரித்து விட்டதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம். சிதம்பரம் அருகில் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகரன் சகாமுரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைமறைவாக உள்ள துணைத் […]
நாளை தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து விவாதம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சீன படைகள் அத்துமீறி செயல்பட்டு வருகின்றன. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் விவாதம் செய்யப்படும் அம்சங்கள் மட்டும் […]
அலெக்ஸி நவல்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் […]
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பொய்யான தகவல் கூறி வருபவர்கள் தேசத் துரோகிகள் என ராகுல் காந்தி குற்றம் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசை, பல விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சில நாட்களாக வீடியோ தொகுப்புகளை பதிவு செய்து வருகிறார். இத்தகைய நிலையில் இன்று ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீன ஆக்கிரமிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பது […]
சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? என தமிழக அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளை ரூ.600 கொடுத்து வாங்கியதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. நேற்று திமுக தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் […]