விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் துவரையை இயற்கை முறையில் பயிரிட்டு அதிகமான லாபம் ஈட்டி பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதையடுத்து அந்த வேலையை உதறிதள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய அருண்பாண்டியன் விவசாயம் செய்யத் தொடங்கினார். அதன்படி தனக்கு சொந்தமான […]
Tag: விவசாயம்
உலகளவில் தொழில் செய்பவர்களில் 80 சதவீதம் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் 94 சதவீதம் பேர் பருவ நிலையை நம்பியே வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏராளமானோர் பருவநிலையை நம்பி இருக்கும்போது, நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, தற்போது உள்ள சேவைகள் நம் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை ஆகும். இதனிடையில் சாலையில் போகும் வாகனத்தின் எண்ணைக்கூட இந்திய செயற்கைக் கோள்களால் துல்லியமாகப் பார்க்க முடியும் […]
மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி கூறுகையில், விவசாயிகளுக்கான அற்புதமான மற்றும் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பு என கூறினார். பட்ஜெட் கொள்கை நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனவும், கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க […]
விவசாயம் என்பது உணவுக்காகவும், ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதன்மை தொழிலாகும். இதில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு இயைந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான். இந்நிலையில் வெப்பநிலையும், மழையளவும் வேளாண்தொழிலைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளாகும். காலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வேளாண்மையை பாதிக்கும் திறனுள்ளது. விவசாயம் புவி வெப்பமடைவதை […]
இலங்கை, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது. விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது லாபத்திற்காக செயல்படும் வியாபாரமாக மாறிவிட்டது. சாப்பாட்டுடன் நஞ்சை சேர்த்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றன. அதிக மகசூல் வேண்டும் என்பதற்காக விவசாயிகளும் அதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசு, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று ஜெர்மன் நாட்டின் ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் 10-வது தவணையாக 20,900 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். அதன்படி 10-ஆவது தவணை ரூபாய் 2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் […]
தமிழக மின்வாரியம் விவசாயத்திற்கு மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின் வினியோகம் செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மற்ற வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் மின் பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது என்று மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது விவசாயத்திற்காக 1,00,000 மின் இணைப்புகள் வழங்கும் […]
மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவேல் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று நன்றி கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது”தமிழகத்தில் எந்த முதலமைச்சரும் கொண்டுவராத வேளாண்மைக்கு என தனி நிலை அறிக்கையை நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இந்திய உழவர்களுக்காக அர்ப்பணிப்பு செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்ததோடு நில்லாமல் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் சிறப்பு மையத்தை […]
தமிழ் திரையுலகில் 90களில் பிரபல நடிகையாக வலம்வந்த தேவயானி விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்ப கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதிலும் இவரது சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், பாட்டாளி போன்ற திரைப்படங்கள் மக்களை பெரிதும் ஈர்த்தன. மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து தேவயானி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் அவர் நடித்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று கூறி கஞ்சா செடி வளர்க்க அனுமதி கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு, பல ஏழை விவசாயிகள் விவசாயம் செய்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பல நேரங்களில் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் வாடி விடுகின்றன. சில சமயங்களில் அதிக மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இப்படி விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்திலும் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் அனைத்தும் எந்த வித தடையுமின்றி கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் நெல் பயிர் விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ஊரடங்கு காலத்திலும் எந்தவித தடையுமின்றி கிடைப்பதற்கு அப்பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து அரசு […]
பீகாரை சேர்ந்த விவசாயி ஒரு கிலோ 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் காய்கறியை உற்பத்தி செய்து அசத்தியுள்ளார் தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலை என்பது சற்று கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. பாடுபட்டு விளைவித்த பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியாமல் பல இடங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். அவ்வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர் […]
விவசாயத்தில் மண்வெட்டி பிடித்த கை என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பரப்புரை செய்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையின் போது என்னுடைய கை மண்வெட்டி பிடித்து என்று தெரிவித்தார். டிராக்டர் ஒட்டவும் தெரியும். பருவத்தில் […]
முன்னணி நடிகை ராஷ்மிகா விவசாயம் செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் […]
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாய முறையில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து சாதித்து உள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குஹாதாவில் வசிக்கும் ஹர்தேவ் சிங் எனும் விவசாயி இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து உள்ளார். இவர் பயிரிட்ட ஸ்ட்ராபெரி விளைச்சல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் சாகுபடி செய்யும் ஸ்ட்ராபெரி நல்ல வரவேற்பை பெற்று சாதித்து காட்டியுள்ளார். இதுமட்டுமின்றி கேரட், முட்டைகோஸ், தர்பூசணி, பிரக்கோலி ,முலாம்பழம் உள்ளிட்ட […]
டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படங்களை அமெரிக்க நாட்டின் இதழ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களின் படத்தை அமெரிக்காவின் இதழான டைம் அட்டைப் படமாக தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியும் அவர்கள் அதை […]
காய்கறி பயிர்களுக்கு இன்சுரன்ஸ் இல்லாத நிலையில் தற்போது அவற்றிற்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில் ஒரு ஏக்கர் கத்திரிக்கு ரூ. 21 ஆயிரத்து 750, முட்டைக்கோஸ்க்கு ரூ. 22 ஆயிரத்து 400, தக்காளிக்கு ரூ. 20 ஆயிரத்து 500, கொத்தமல்லிக்கு 11 ஆயிரத்து 600, வாழைக்கு ரூ. 61 ஆயிரத்து 900 காப்பீட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் காப்பீட்டு தொகையில் 5% பிரிமீயமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் […]
இன்று நாடு தழுவிய முழு போராட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டம் நடத்தி […]
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின் வினியோக நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் விவசாயம் செய்வதற்காக மின்சார வாரியம் மும்முனை இலவச மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகம் முழுவதிலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். விவசாயத்திற்காக தினம்தோறும் 6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரையிலும், பிற மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் […]
முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லுவதை விட விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதா சட்டம் எந்தவகையிலும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்காது. இந்த புதிய சட்டம் வேளாண்துறையை அடியோடு அழிந்து போகச்செய்யும் என குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது. பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க […]
காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுமென அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சம்பா சாகுபடியை தொடங்கினர். தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதலுக்கான நல்ல தீர்வுக்கு அரசின் கருணைப் பார்வையை எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என […]
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் […]
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]
கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் நாட்டின் விவசாயத்துறை 3.4% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனா தாக்கத்தால் -23.9 சதவீதமாக சரிந்ததுள்ளது. தொழில்துறை -38.1 சதவிகிதமாகவும், உற்பத்தித்துறை -39.3 சதவிகிதமாகவும், கட்டுமானத்துறை -50.3 சதவீதமாகவும், நிலக்கரித்துறை -23 3 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்நிலையில் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 3 சதவீதமாக […]
பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் நோக்கத்தில் இரு சகோதரிகள் செய்துவரும் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் கிராமத்தில் வசித்து வருபவர் இரும்பொறை. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு மாட்சிமை என்ற 18 வயது மகளும் உவகை என்ற 17 வயது மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாட்சிமை சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். உவமை பிளஸ்-2 முடித்த நிலையில் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார். […]
நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]
மேல்மலையனூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாக கூறி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு உழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பருதி புறத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏறி 122 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகே வசிக்கும் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஆண்டுதோறும் நெல் பயிர்கள் பயிரிட்ட வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரை அடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் […]
ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து வயலில் உழவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் தக்காளிகளை பயிர் செய்து நல்ல விளைச்சல் கொடுக்க அதை சாகுபடி செய்து விற்க சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரது தக்காளிகள் நல்ல விலைக்கு செல்லவில்லை. அவர் நஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளியை பயிர் செய்தால் அடுத்த முறையாவது நல்ல லாபம் […]
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தன் தந்தைக்கு உதவியாக விவசாய வேலை பார்க்கும் சிறுமியின் ஏர் உழும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் பள்ளி கல்லூரிகள் கல்வி மையங்கள் மூடப் பட்டிருப்பதால் மாணவ, மாணவிகள் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இந்த வகையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோலார் மாவட்டம் […]
நம்மாழ்வார் கூற்றுப்படி விவசாயம் செய்து வரும் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி பெண் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் சிவகங்கை அருகே பனையூரில் நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட பெண் விவசாயி ஜெயலக்ஷ்மி உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறர். வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கி உள்ளார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு விவசாயம் பார்த்து வரும் பெண் விவசாயி ஜெயலட்சுமி. 2 ஏக்கர் 60 செண்டில் கொய்யா, நாவல், வாழை பூந்திக்கொட்டை , நெல், […]
வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]
விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் சில […]
பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]
பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த வெட்டுக்கிளிகள் வடமாநிலமான ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய வேளாண் துறை இயக்குநர் வி.கே. சர்மா கூறியதாவது, ” வெட்டு கிளிகள் அஜ்மீர் மாவட்டத்தைத் தாக்கியது. மேலும் இந்த வெட்டுக்கிளிகள் நாகூரிலிருந்து அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைத்த […]
கொரோனா அச்சம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே முககவசம் அணிந்தும், தலையில் வேப்பிலையுடனும் பெண்கள் நாற்று நட தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் வறுமை விரட்டுவதால் 20 பெண்கள் தலையில் வேப்பிலைகளை சொருகிக்கொண்டு, விவசாய பணியில் இறங்கியுள்ளனர். குலவையிட்டு பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாம் போகத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், நெல் விதைப்பு, நாற்று நடவு அறுவடை என அனைத்தும் எந்திர மயம் ஆகிவிட்ட போதிலும், வேறு வேலைகள் இல்லாததால் விவசாய பணியில் […]
வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது. இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]
தமிழக்கத்தில் விவசாய பொருட்களுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழிலுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மளிகை கடைகள்,இறைச்சி கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றை திறக்க கூடாது என்பதற்கான தடை இல்லை, ஆனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மருந்தகங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு என்பது கிடையாது. இந்நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது. விவசாய பொருட்கள் கொள்முதல், நிறுவனங்கள், விவசாய […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. நாடு முழுவதும் இதே நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக […]
கஜா புயல் சீற்றம், மண் பாதிக்கப்பட்டு மகசூல் இல்லாமல் போனது, விவசாயிகள் பெரும் வேதனை..! நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையில் மகசூல் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 90 நாட்களில் பலன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலையை நாகை மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஓரளவு மகசூல் கிடைத்தாலே போதிய வருமானம் கிடைத்து விடும் என்பதாலும், நிலக்கடலை […]