சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை. கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு […]
Tag: விவசாயிகள் கவலை.
தொடர் கனமழை காரணமாக கூடலூரில் மேரக்காய் கொடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுகலை ஊராட்சிகள், பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேரக்காய் விவசாயம் நடந்து வந்தது. இதனிடையே தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏராளமான தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய் கொடிகள் அழுகிவிட்டது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேரக்காய் விளைச்சல் […]
தொடர் மழை பெய்வதால் மானாவாரி பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாயமே மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயிறு, உளுந்து, மிளகாய், மக்காச்சோளம் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாசிப்பயறு, உளுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் […]
பருவமழை பெய்தததில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி பயிர் நடவு செய்துள்ளனர். இந்த தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாக காய்கள் பிடித்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி செடியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கள் அனைத்தும் அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் அழுகிய பழங்களை செடியில் இருந்து பறித்து சாலை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் […]
நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கடைமடை விவசாயிகள் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 40 முட்டைகள் வரை அறுவடை செய்யலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் நேற்று முந்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக செல்லூர், பாலையூர், சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், இளம்கடமனூர், […]