15 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாமல் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் இருந்து அத்திகோவிலுக்கு செல்லும் சாலையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்வதற்கான பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமமின்றி செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மண்சாலையாக மாறி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியில் […]
Tag: விவசாயிகள் கோரிக்கை
விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் பகுதியில் பாசன வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. இதன் மூலம் கொடைக்காரமுலை, பழைய பாளையம், நல்லூர், ஆரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக உப்பனாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இது கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் […]
பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகள் ஊராட்சி கரையிருப்பு இல் திருமருகல்- மருங்கூர் இடையேயான வடக்குபுத்தாற்றில் நெடுஞ்சாலை துறை மூலமாக பாலம் கட்டும் பணியானது சென்ற மாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. சென்ற மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி காரணமாக கரையிலிருந்து வடக்குபுத்தாற்றுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், […]
ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாதைகள் அமைக்கும் போது கால்வாய்கள் வழியாக பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாசன பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நெய்யூர் மற்றும் பேயன்குழி பகுதிகளில் இருக்கும் […]
பலத்த மழையின் காரணமாக வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கல்வராயன்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதைப்போன்று மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன […]
கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆவின் […]
கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
தென்னந்தோப்பில் புகுந்த 10 காட்டுயானைகள் 88 தென்னை மரத்தை வேரோடு சாய்த்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மழை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வயல்களில் மான், கரடி, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் வயல்களில் தகரங்களை தட்டி ஒலி எழுப்பி வன விலங்குகளை விரட்டி வருகின்றனர். இதனையடுத்து வெட்டுக்காடு கடமங்குலம் பகுதியில் […]
கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதபடுத்தி வருவதால் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பண்ணைபுரம் மலையாடிவார பகுதியில் கோட்டமலை, தீக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இதனைதொடர்ந்து நேற்று பண்ணைபுரம் பகுதியில் 4 காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடபட்டிருந்த வாழைகளை சேதபடுத்தியுள்ளது. மேலும் […]
காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் கோம்பை ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் 3 காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் தண்ணீர் செல்லும் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் […]
மேய்ச்சலுக்காக சென்ற காளை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள பாண்டுகுடி அருகே இளையாத்தான் வயல் கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மூர்த்தி, ரவி, முருகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான காளை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மாடுகளுக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 காளை மாடுகள் சம்பவ […]
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்துவிடும் படி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள சிங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மூலம் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த மாதத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வயல்வெளிகள் மிகவும் வறண்டு கிடைப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து தண்ணீர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கீரனூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, மானூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவற்றை விவசாயிகள் விற்பனைக்கு தயாராக அறுவடை செய்து வைத்துள்ளனர். இந்த பகுதியில் விலையை நெல்லின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த […]
திண்டுக்கல் அருகே திறந்தவெளியில் கொட்டப்படும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிட வசதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவில் அரசு கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சித்தரேவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர இடம் இந்த கொள்முதல் நிலையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் அனைத்தும் நெல்லும் திறந்த வெளியிலேயே குவித்து […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமாகுடி, திருக்கடையூர், கிள்ளியூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை 5 நாட்களாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் மகசூலும் இல்லை. அதில் மிஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து […]
நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருப்பூர் அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள், கல வெட்டுவதற்கு ரூ. 3000, 4000 கேட்கிறார்கள். விவசாயியான நாங்கள் கடனாளி ஆகிறோம். நிரந்தரமான வேலையும் இல்லை. அரசு பார்த்து நிரந்தரமான ஒரு வேளை கொடுத்தால் விவசாயிகளுக்கு ஒரு நல்லது என வேதனை தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 60 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி அளித்தது. விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண் அள்ளி தங்கள் தோட்டங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இன்னும் 12 கனமீட்டர் மீதம் இருந்த நிலையில் தற்போது வண்டல் மண் […]