திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வட்டாரத்தில் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, அஞ்சுகுளிபட்டி, விரசின்னம்பட்டி, ராஜாக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து கமிஷன்கள் மூலம் நேரடியாக தோட்டங்களில் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு தொழிலாளர்களால் மட்டைகள் உரிக்கப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சணல் சாக்குகளில் பேக்கிங் செய்யப்படுகிறது. அவை டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு […]
Tag: விவசாயிகள் வருத்தம்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் உள்ள சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளிகள் சராசரியாக 5 டன் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான விவசாயிகள் அய்யலூரில் நேற்று நடைபெற்ற சந்தையில் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு தக்காளிகள் பெட்டி, பெட்டியாக குவிந்தது. தக்காளி […]
மயிலாடுதுறையில் நிலக்கடலை அறுவடையில் மழை காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீனி கரும்பு, நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி, பயிர் வகைகள், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீர்க்கங்காய், பனங்கிழங்கு, கேழ்வரகு, புடலை, பூசணி, கத்தரிக்காய், சுரைக்காய், மிளகாய், பாகற்காய், வாழை, செங்கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொறையாறு பகுதிக்கு அருகே உள்ள சிங்கனோடை, தில்லையாடி, காழியப்பநல்லூர், செம்பனார்கோவில், கீழையூர், ஆணைகோவில், காலஹஸ்திநாதபுரம், மேலபாதி, கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம் ஆகிய பகுதிகளில் […]