திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை […]
Tag: #விவசாயிகள்
தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூர், கம்பம், சின்னமனூர், குச்சனூர், கோட்டூர்,வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உழுதல், வரப்பு சீர் அமைத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவுக்குத் தயாராகி வரும் நெல் நாற்றுகளை இன்னும் இரண்டு வாரங்களில் […]
திருப்பூர் அருகே தாராபுரம் உப்பாறு அணைக்கு பி.ஏ.பி பாசன நீர் திறக்கப்படாவிட்டால், வரும் 15ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாராபுரம் காந்தி சிலை முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரட்டி தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை ஆக்கிரமித்து விவசாய நிலமாக […]
மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் […]
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு முதல் ரகம் கிலோ […]
தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூரியல் பால் கொள்முதல் நிறுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே பாலை குறைத்து வாங்குவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் விவசாயிகள், முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் […]
விருதுநகர் அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி அமைய உள்ளது. இதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கண்மாய், […]
ஓசூர் பகுதிகளில் விமர்சையாக கொண்டாடப்படும் வரலட்சுமி நோன்பு பண்டிகைக்காக ஊரடங்கிலும் பூக்களின் விலை அதிகரித்து விற்பனை சூடுபிடித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேச கூடிய மக்கள் அதிகளவில் இருப்பதால் இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை பண்டிகை கொண்டாட இருப்பதால் பூஜைக்காக பூக்களை வாங்க பொது மக்கள் ஊரடங்கு நேரத்திலும் குவிந்து வருகின்றனர். இன்று கனகாம்பரம் பூ கிலோ 1000 […]
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து […]
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என […]
கடையத்தில் விவசாய நிலங்களை கரடிகள் சேதப்படுத்துவதால் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர் கடையம் வனச்சரக பகுதி, அம்பாசமுத்திரம் கோட்டம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வீட்டு விலங்குகளை தாக்கியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றது. அதேநேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் இருக்கும் தென்னை, மா, பலா உள்ளிட்டவைகளை அதிகம் சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதும் பல இடங்களில் கண்காணித்து கரடி பிடிப்பதற்கு கூண்டுகளை வனத்துறையினர் […]
கிருஷ்ணகிரி அருகே 3 விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து பத்திரமாக காட்டிற்குள் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இந்த வனப் பகுதிகளை சுற்றிலும் சிறு குறு கிராமங்கள் ஏராளம் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகளில் ஒரு யானை மட்டும் மிகுந்த ஆத்திரத்துடன், கிராமப் பகுதிகளைச் சுற்றி வந்துள்ளது. அதிகம் கோபம் கொள்ளும் அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து இதுவரை தேன்கனிக்கோட்டை […]
பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குருவை பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் , மானாமதுரை, எஸ் […]
வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987ல்) திருத்தும் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் […]
விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டம் அமலாக்கினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க முடியாது, எனவே புதிய மின்திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தடைசெய்ய இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது மின்சார வாரியம் விவசாய மின்சாரத்துக்கு மின்மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. […]
குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 […]
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். […]
ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் […]
ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் […]
3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள் தொடர்பான […]
மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தம் விவசாயிகள், ஏழைகளின் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் மின் […]
தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளின் பங்களிப்புடன் 2017ம் ஆண்டு குடிமராமரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் […]
அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர் பதுக்கி விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சேமிப்பு நிறுவன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து வங்கி மூலம் கடன்பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் […]
தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]
நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கக்கூடாது என்பதற்காகவே தொற்றுநோய் காலத்திலும் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை என கூடியுள்ளார். நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றும் […]
அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கீரையை அழித்து வருகின்றனர்.. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அந்தநாட்டில் தினமும் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹால்ட்வில் என்னும் ஊரைச் சேர்ந்த ஜாக் வாசி, தேவ் புக்லியா […]
தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார். உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]
நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம். விவசாயிகள் தங்களுக்குத் […]
வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது. இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]
வணிகர்கள் அரசுக்கு செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டத்தை செலுத்த தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் தற்போது நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பெருங்காயம், புளி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்தும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்ததால் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]
விவசாயிகளின் நலனுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் தண்ணீரை தமிழக அரசு கோடை சாகுபடிக்காக திறந்துவிட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் கோடை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியும், அதில் 39.85 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 172 […]
விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் நலன் குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, 2000 விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு முன்னுரிமை வழக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க […]