Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி” விவசாயி திடீர் கைது…. தேனியில் பரபரப்பு…..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு‌ சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் நேர்ந்த விபரீதம்…. மனைவி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது….!!

சந்தேகப்பட்டு மனைவியை பாட்டிலால் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள வேல்நகரில் வசித்து வரும் தங்கபாண்டி(36) என்பவருக்கு லதா(33) என்ற மனைவி உள்ளார். விவசாயியான இவர் தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர் வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த தங்கபாண்டி அஜித்குமாரின் இருசக்கர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி….. விவசாயி செய்த கொடூரச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை தோட்டத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் கேசவன் சிறுமியின் பாட்டிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு தெரியாமல் செய்ததால்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

5 நாட்களாக வீட்டில் இருந்த பிணம்…. கணவர் செய்த கொடூரம்…. தேனியில் பரபரப்பு….!!

மனைவியை கொலை செய்துவிட்டு பிணத்தை மூட்டையில் கட்டி வைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தனிப்பாறை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அம்சகொடி என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளார். மேலும் மணிமாறன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணேசனும், அம்சகொடியும் அவர்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணேசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூச்சி மருந்து தெளித்ததால்…. உயிரிழந்த மயில்கள்…. விவசாயி அதிரடி கைது….!!

பூச்சி மருந்து கலந்த நெற்பயிரை சாப்பிட்ட 6 மயில்கள் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விவசாயியை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.கீரந்தை பகுதியில் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனவர் அன்புசெல்வம் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அதனை மீட்டு நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ராமர் என்பவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நில பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்…. விவசாயி கைது….!!

நில பிரச்சனையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஜாமீன்இளம்பள்ளியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமியின் மனைவி சந்திராவிடம் தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… விவசாயி மீது நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நாமகிரிபேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் வசித்து வரும் விவசாயியான மோகன் என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் வச்சிருக்க கூடாது… போலீசாருக்கு கிடைத்த தகவல்… விவசாயி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மறைத்து வைத்திருந்த துப்பாக்கி… வசமாக மாட்டிய விவசாயி… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூரை அடுத்துள்ள வாழவந்தி நாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட காட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் விஜயகுமார்(35) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்… கையும் களவுமாக சிக்கிய விவசாயி… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோனிமலை புலக்கரை பகுதியில் விவசாயியான ரெங்கராஜ் (50) வசித்து வருகிறார். இவர் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பன்றிகளை தனது நாய் மூலம் வேட்டையாடி அதில் கிடைக்கும் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்பேரில் கன்னிவாடி வனவர் ரங்கநாதன், வனச்சரகர் சக்திவேல், வனகாப்பாளர் நாகராஜ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் கேட்டதற்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்..! திண்டுக்கல்லில் விவசாயி பரபரப்பு வாக்குமூலம்..!!

திண்டுக்கல் அருகே இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெரியாரை கடவுளாக நினைத்து குங்குமபொட்டு மாலை அணிவித்தேன்..! விவசாயி வாக்குமூலம்… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு குங்குமபொட்டு வைத்து, மாலை அணிவித்து அவமதித்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் […]

Categories

Tech |