பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக வெடுகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு […]
Tag: விவசாய சங்கம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ம.தி.மு.க. நகர செயலாளர் கோவி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.