தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின் விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]
Tag: விவாதம்
ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அப்போது விலைவாசி குறையும் வரை பெண்களாகிய தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று காங்கிரஸ் எம்பி ரஜனி பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள […]
இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னான்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள twitter பதிவில் இந்திய தூதர் இன்று தொழில்துறை மந்திரி நலின் பெர்னான்டோவை சந்தித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை உயர்த்துவது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இரு தரப்பு வர்க்கத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விவாதம் மேற்கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த […]
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் பணியிட மாற்றம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் ராதாகிருஷ்ணன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஆனால் அவருக்குப் பின் பேசிய உமாநாத் ஐஏஎஸ் அவரை உதாசீனப்படுத்தி பேசியது மட்டுமல்லாமல், ராதாகிருஷ்ணன் வைத்த கருத்துக்கள் நடைமுறையில் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார். இருவருக்குமிடையில் ஏழாம் பொருத்தம் என்பதாலேயே இந்த பணிமாற்றம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
சட்டப்பேரவையில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இபிஎஸ்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு முதல்வர் முக ஸ்டாலின் பொள்ளாச்சி […]
பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்திருப்பது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருக்கின்றது. மேலும் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா. ஜனார்த்தனன் இது தொடர்பாக அறிக்கை […]
”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., – கே.பி.முனுசாமி கூறிய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள திம்மப்ப நாயுடு என்பவர் யானை தாக்கி இறந்தார்.அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஊருக்குள் யானை வராமலிருக்க, மின் வேலி அமைக்க வேண்டும் […]
தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். இந்த தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசியதாவது, பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு […]
ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு இன்று தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லையில் நிலவும் நிலைமை, அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து கமாண்டர்களிடம் ஆலோசனை நடத்தி கேட்டறிவார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் எல்லை பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்தி இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. […]
ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சமரச பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கையின் படி ஆவின் பால் விலை குறைக்கப்படும் என உறுதி அளித்தபடி பதவியேற்ற நாள் முதலே ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்துள்ளார். மேலும் 2 கோடிக்கும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 2020 – 23 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த […]
நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தனது […]
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்கள சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ரஷ்யாவிற்கு சீனா […]
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என ஐநா உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, […]
சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையில் கடும் விவாதம் நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பல்வேறு எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார். இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு […]
அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனைத்து துறை செயலாளர்களுக்கும் நான் அனுப்பிய கடிதம் வழக்கமான அலுவலக நடைமுறைதான். ஆனால், அது அவசியமற்ற விவாத பொருளாகிவிட்டது. திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான். அதுவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டப்பட்டது. அலுவல் […]
தமிழகத்தில் பெட்ரோல், டீசல்,எரிவாயு சிலிண்டர், விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் மக்களுக்கு அரசு மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதனையடுத்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், விலையால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும், அதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார் என்றும் அவர் […]
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய […]
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 13ல் துவங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த மூன்று நாட்கள், சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை. அதன்பின், இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது. முதற்கட்டமாக, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது. இன்றைய கூட்டத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர். மக்கள் பிரச்னைகளை முன் வைத்து, சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அ.தி.மு.க.,வுக்கு […]
மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்து இருந்த நிலையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை விவாதத்திற்கு அழைத்திருந்தார். இந்நிலையில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் சாடி பிரச்சாரம் செய்து வருகின்றனர். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவகாரம் நடைபெற்றது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் […]
நாளை தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து விவாதம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சீன படைகள் அத்துமீறி செயல்பட்டு வருகின்றன. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் விவாதம் செய்யப்படும் அம்சங்கள் மட்டும் […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பல்வேறு மாநில முதல் அமைச்சர்களுடன் நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மாணவர்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது கருத்துக்கள் மட்டும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. அது […]
டெல்லி மக்களவையில் வன்முறை தொடர்பாக இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் அரசியல் நிலவரம் பற்றிய விவாதமும் நடைபெறலாம்,என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் தொடர்ந்து 5 நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு […]